Sunday, 7 January 2018

தமிழ் மாதங்களின் பெயர்கள் எவ்வாறு பிறந்தன?

ஒரு மாதத்தின் பெயர், அந்த மாதத்தில் பௌர்ணமியுடன் சேரும் நட்சத்திரத்தின் பெயரால் வழங்கப்படும்.தமிழ் மாதங்களின் பெயர்கள்
1--சித்திரை நக்ஷத்ரத்திலிருந்து பௌர்ணமி வருவதால் இம்மாதத்தின் பெயர் சித்திரை.
2-- வைகாசி விசாக நட்சத்திரத்தின் பெயரால் வருகிறது.
அனுஷம் - ஆனி ஆனது
3--பூராடம் பூர்வ ஆஷாடம் - ஆடி ஆனது.
4--ஆவணி வடமொழியில் ஸ்ராவணம் – ஸ்ராவணி தான் ஆவணி.
5--புரட்டாசி – பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி – வடமொழியில் பூர்வ ப்ரோஷ்டபடம் அல்லது உத்திர ப்ரோஷ்டபடம்- ப்ரோஷ்டபடி தான் புரட்டாசி.
6--ஐப்பசி – அஸ்வினி
7--கார்த்திகை – கார்த்திகை.
8--மார்கழி – மிருகசீரிடம் – வடமொழியில் மிருகசீர்ஷம் – மிருகசீர்ஷிதான் மார்கழி.
9--தை -புனர்பூசம்/ பூசம் – வடமொழியில் புஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வரும். – திஷ்யதில் இருந்து தை.
10--மாசி – மகம் – வடமொழியில் மாக் – மாகிதான் மாசி.
11--பங்குனி – பூரம் அல்லது உத்திரம் – வட மொழியில் பூர்வ
12--பல்குனி அல்லது உத்திர பல்குனி – பல்குனியில் இருந்து பங்குனி

No comments:

Post a Comment