தமிழர் நமக்கு அடையாளம் பல இருக்க , அமுதத் தமிழ் இருக்க அந்நிய மொழி பெயர்கள் வேண்டாம்!
மனித கூட்டத்திடையே.. நம்முடைய முகமும் உடை என கட்டி இருக்கும் வேட்டியும் சேலையும்!
நெற்றியிலே அணிந்திருக்கும் பொட்டும் திருநீறும்! இவையே பார்வைக்கும்..
பேசும் மொழியும் இசையும் கலையும்! என இவை செவிக்கும்..!
சமைக்கும் உணவும் உண்ணும் வகைகளும்! என நாவுக்கும்..!
வாழ்க்கை நடை முறைகளும் பேச்சும் வழக்கும்! என இவை நெஞ்சிற்கும்..!
என நாம் வேறு , பிற இனங்கள் வேறு என இவை இனங்காட்டும். இவை எல்லாம் பார்வைக்கு உட்பட்டவை.
ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால்.. அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும் பெயரே!
பெயர்கள் சாதாரணமானவை அல்ல. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை கேள்விப்படும்போதோ அல்லது அந்தப் பெயரை எவராவது உச்சரிக்கும்போதோ பழைய ஞாபகங்கள் நம்மை சூழும். பெயர் என்பது நம் ஆதி முதல் அந்தம் வரை பலராலும் உச்சரிக்கப்படுவது. எனவே பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் வாழ்வோடு இணைந்திருப்பதுமாகும். அந்தப் பெயரை குழந்தைகளுக்கு நம் தாய் மொழி தமிழிலேயே சூட்டாமல் பிறமொழிகளை பெயா்களை சூட்டுவது என்பதும் ஒரு வம்சத்தின் அடையாளத்தை , ஒரு குலத்தின் அடையாளத்தை , ஒரு இனத்தின் அடையாளத்தை, ஞாணிகலின் நாவில் நந்தணம் ஆடிய தமிழை இழிவுபடுத்துவதாகும்.
மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், அதுபோல ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம்.
ஒருவரை நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக் கேட்டால் பிற மொழி இனத்தவர் பெயரை தாங்கி இருப்பார். இந்தக் குறைபாடு பிறமொழி இனத்தவரிடமில்லை.
பிறமொழி இனத்தவா்கள் தங்களை மறந்தும் தமிழ் பெயர்களை பிற மொழியினர் தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை.
பிறமொழி இனத்தவா்கள் தங்களை மறந்தும் பிற மொழிபெயா்களை தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை.
ஒவ்வொரு மொழிக் குடும்பத்தினரும் தம்மொழி உணர்வுடன் தம் நிலைப்பாட்டில் பிடிப்புடன் இருக்கும்போது தமிழர்கள் மட்டும் தமிழ் மொழி இனவுணர்வற்ற நிலையில் இன்றும் உள்ளனர்.
தன்மாணம் இழந்து ,சூடு சொறணை அற்று நித்திரையில் இருக்கும் கிழங்கு தமிழா உன் சந்ததியினருக்கு நீய் சூட்டுவது ஆண்பால்,பெண்பால் அறிய முடியாத பிறமொழி பெயா்கள்.நீய் உன் தமிழ் குலத்தின் இனஅடையாளத்தை இழிவு படுத்துகின்றாய்.
-1-அரேபியமொழி மோகத்தால் அரேபிய பெயா்களும்
2--பறங்கியின் மோகத்தால் பறங்கியின் பெயா்களும்,
3--ஆப்பிரிக்கா மோகத்தால் ஆப்பிரிக்கா பெயா்களும்,
பிறமொழிபெயா்கள் தமிழனிடம் இருந்து ஆழ ஊடுருவி செல்வதற்கு காரணம் தமிழ் உணா்வற்ற சந்ததியின் விருத்திதான் என்று சொன்னால் மிகையாகாது.
No comments:
Post a Comment