Friday, 1 September 2017

பூக்கள் சூடுவதிலுள்ள ரகசியங்கள்

பெண்கள் தலையில் பூக்கள் சூடுவதிலுள்ள ரகசியங்கள்
பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூட சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது. (Flowers Secrets )
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
நம்மைச் சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை அதிகரிக்கச்செய்கிறது.
பூக்களைச் சூடும் முறை:
வாசமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றை கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்

வாசனை இல்லாத மலர்களை பெண்கள் சூடி கொள்ளலாமா ???

கண் என்றால் பார்க்க (ஒளி) வேண்டும்; காது என்றால் கேட்க (ஒலி) வேண்டும்; அதைப் போல் மலர் என்றால் மணம் வீச வேண்டும். மணம் வீசாமல் (இயல்பு நிலையில் இல்லாமல்) இருப்பதை மலர்கள் என ஏற்க முடியாது.(Unscented flowers )
வாசனையற்ற மலர்களை முன்னோர்கள் பயன்படுத்தாமல் தவிர்த்தனர். உதாரணமாக கனகாம்பரத்திற்கு வாசனை கிடையாது. அதனால் அதனை ‘காட்டுக் கனகாம்பரம்’ என்று முன்னோர்கள் கூறி வந்தனர். காட்டில் மட்டுமே இருப்பதற்குதான் கனகாம்பரம் என்பதே அவர்களின் கூற்று.
இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு சிலர் கனகாம்பரத்தை பயன்படுத்துகின்றனர். பூக்கள் எதுவும் இல்லாதபட்சத்தில் கனகாம்பரத்தை சூடிக் கொள்ளும் பெண்களும் தற்போது கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பூக்களைக் கருத்தில் கொள்ளும் போது கனகாம்பரம் உயர்ந்தது என்றுதான் கூறுவேன்.
நறுமணம் கமழக் கூடிய மலர்களை சூடிக் கொள்வதன் மூலம் அதன் மருத்துவ குணங்களையும் பெண்கள் பெற முடியும். மல்லிகை நறுமணம் சிலருக்கு பிடிக்கும். ரோஜாவின் வாசனை சிலருக்கு பிடிக்கும். தாழம்பூவின் வாசனையை விரும்புபவர்கள் இருக்கிறார்கள்.
மனதிற்கு பிடித்த நறுமணம் உள்ள மலர்களை சூடிக் கொள்வதன் மூலம் அதன் மருத்துவ குணத்தை பெறுவது மட்டுமின்றி, மன உளைச்சல், விரக்தியில் இருந்தும் பெண்கள் விடுபட முடியும் என சில மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. எனவே மணம் மிக்க மலர்களை சூடிக் கொள்வதே சிறந்தது.                                                                                                                        
பெண்கள் தலையில் பூக்கள் சூடுவதிலுள்ள ரகசியங்கள்
பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூட சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது. (Flowers Secrets )
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
நம்மைச் சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை அதிகரிக்கச்செய்கிறது.
பூக்களைச் சூடும் முறை:
வாசமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றை கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.

No comments:

Post a Comment