Sunday, 24 September 2017

சாதிரீதியாக பிரிவினையை ஏற்படுத்தியது


உண்ணும் உணவு, செய்யும் தொழில் , வாழ்வியல் சாதி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தியது திராவிட சாதி கட்சிகள் , தமிழா்களை சாதிரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் திராவிட சாதி கட்சிகள் , எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது. ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell ) சதி வழியில் பிறந்த திருட்டு திராவிட கட்சிகள் . உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ணயிக்கப்பட்டதும், தொழிலை அடிப்படையாக கொண்டு ஒருவரின் சாதி நிர்ணயிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு திராவிட அரசியலில் மட்டும்தான்.கிறிஸ்தவம் சைவதமிழாின் அடையாலங்களை
அழித்துக்கொண்டு சாதியம் பேசுகின்றது . "அன்பு சைவதமிழா் வாழ்வியல் நெறி."

சைவநெறிக்கே அடிப்படையான அன்பு நெறி

"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் ,
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் ,
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே."

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.(குறள் )

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் )"

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழிருக்க என்றார்.
- (பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் புராணம்-60)

"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ."
(கண்ணப்பருடைய அன்பு)

அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே
(திருமூலர் திருமந்திரம், 10ஆம் திருமுறை)

"சிவசொந்தங்கள் அனைவருக்கும் சாதி இல்லை.
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்

http://aumarul.blogspot.co.uk/2017/09/blog-post_80.html
"அன்பு சைவதமிழா் வாழ்வியல் நெறி."

No comments:

Post a Comment