Wednesday, 13 September 2017

அகநானூறு கடவுள் வாழ்த்து


சிவசிவ நமசிவாய
சிவபெருமானின் புகழ்பாடும் பெருந்தேவனாரின் அகநானூறு கடவுள் வாழ்த்து பாடல் .
கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
நுதல திமையா நாட்டம் இகலடடுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே
ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
செவ்வா னன்ன மேனி அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்
றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.
- பெருந்தேவனார்.

இங்கும், புலவர் பெருந்தேவனார், "சிவன்" என வெளிப்படையாகக் கூறாது அவன் தன்மைகளையே பாமாலையாகச் சூட்டுகின்றார்
சிவசிவ நமசிவாய

No comments:

Post a Comment