Thursday, 6 July 2017

புறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜை


அறிந்தால் வாழ்வும் நன்றே 
!
******************************************* 
சிவவாக்கியம்-151

உண்டகல்லை எச்சில் என்று 
உள்ளெரிந்து  போடுறீர்   
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ 
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே!


புறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜைகளில் நிவேத்தியமாக படைக்கப்படும் பிரசாதங்களை ஒரு குழந்தை அறியாது எடுத்து தின்றுவிட்டால் அது எச்சில் பட்டுவிட்டது என்று சொல்லி யாருக்கும் பயனில்லாது கீழே எறிந்து விட்டு வேறு பிரசாதம் செய்து படைக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கைப்பட்டு எச்சிலான இவர்கள் கையால் செய்த பிரசாதங்களை மட்டும் இறைவன் ஏற்று உண்பானோ? எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது? அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா? குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே! சுத்தம் என்பது என்ன? இவ்வுடலில் பரிசுத்தனாய் ஈசன் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து மனமாகிய அகத்தை சுத்தம் செய்து இறைவனை தியானியுங்கள்.***************************************** 
சிவவாக்கியம்-152

ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்த மாயம் சொல்லடா சுவாமியே!!!  
 

படித்தறிந்து பாதுகாக்கும் நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மனைவி, சுற்றத்தினர் என யாவையும் மறக்கும் படியான மரணம் என்று ஒன்று வந்ததே! அது ஏன் வந்தது என்பதை சிந்தியுங்கள். உடலோடிருந்து உலாவிய உயிர் மரணம் வந்ததும் எங்காவது சென்று ஒளிந்து கொண்டதோ? அல்லது எங்குமான வானத்தில் நின்றதோ? சோதியான ஈசனை அடைந்ததா?  ஒளியாக நின்ற உயிர் ஒழிந்த மாயம் எங்கு என்பதை சுவாமி வேடம் போட்டு திரிபவர்களே சொல்லவேண்டும். எல்லாம் ஈசன் செயல் என்பதை உணர்ந்து, மரணமில்லாப் பெரு வாழ்வை அடைய முயற்சியுங்கள்.
*******************************************
 
சிவவாக்கியம்-153 
 ணெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!

கன்று ஈன்ற எருமை மாட்டின் கழுத்தில், கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக மூ
ன்று பொட்டங்களை வைத்து முடிச்சுப் போட்டு வைப்பார்கள். அதுபோல பிராமணர்கள் குளிக்கும்போது ஒரு துண்டில் மூன்று முடிச்சுப்போட்டு கழுத்தில் போட்டுக்கொண்டு தண்ணீரில் மூழ்குவார்கள். பின் அந்த முடிச்சுக்களை அவிழ்த்துத் தண்ணீரிலே போட்டுவிட்டு முன்ஜென்மம், இந்த ஜென்மம், மறுஜென்மம் ஆகிய முப்பிறவிகளின் கர்மவினையை தொலைத்துவிட்டேன் என்று சொல்லித் தலை முழுகுவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிட்டேன் என்றும் விளக்கம் சொல்லுவார்கள். இதனால் அவைகள் அகன்றுவிடுமா? ஏழு உலகங்களிலும் ஆதியந்தம் இல்லாத அநாதியான ஈசனை உங்கள் ஊண் உடம்பிலே உணர்ந்து அதிலே ஊன்றி அறிவு, உணர்வும், மனம் ஆகிய மூன்றையும் முடிந்து தியானியுங்கள். மும்மலங்களும், மூவினைகளும் தானே விலகும். இதுவே உண்மையாக இறைவனை அடையும் வழி.
*******************************************
 
சிவவாக்கியம்-154
 

சாவல் நாலு குஞ்சது அஞ்சு தாயதான வாறு போல் 
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக்கூட்டிலே புகுந்த பின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே!

நான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும், 
பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புல
ன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிரை, உடம்பில் புகுந்து எமன் கொண்டு போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 
*******************************************
 
சிவவாக்கியம்-155
 

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆழம் உண்ட க
 ண்ர் பாதம் அம்மை பாதம் உண்மையே.

அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய எமனைக் கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிரா
சக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-156  
செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலந்திட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே!

செ
ம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும்  உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.*******************************************

சிவவாக்கியம்-157 
நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார்  உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே!

இறைவனை அடைவதற்கான வழி, அவனையே நாடி அவன் புகழைப் பாடி அவனை நயந்து தேடி நமக்குள்ளேயே கண்டு கொண்டு, யோகமும் தியானமும் பழகவேண்டும். அதனால் நம்மில் இருந்து வெளியேறி ஓடும் மூச்சு நமக்குள்ளேயே ஒடுங்கி பிராணசக்தி கூடி உயிரிலேயே   அடங்கிடும். இப்படியே தினமும் செய்ய வல்லவர்களுக்கு ஆயுள் கூடி தேடி வரும். எமனே திகைத்து திரும்பிடுவான், அவர்கள் கல்பகோடி காலமும் ஈசனோடு உகந்து இருப்பார்கள். ஆகவே யோக ஞான சாதனங்களைக் கைக்கொண்டு பிறவாநிலை பெறுங்கள். 
*******************************************

சிவவாக்கியம்-158 
பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பினங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லீரே
பி
ங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கலாகுமே!!!

கோபம் கொள்வது ஏது என்பதை உணராத மூடரே!! சாந்தமான பேரொளியாக ஈசன் உன் பிராணனில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வுலகில் பிறக்க வைக்கும் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை யோக ஞானத்தால் பிணக்கு அறுத்து தியானம் செய்ய வல்லவர்கலானால் ஈசன் அருளால் பேரின்பம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் இருக்கலாகுமே.
*******************************************
சிவவாக்கியம்-159 
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்
மான் யாரிச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பு நூல் அணிவதும்.

மீன் இறைச்சி வேதம் ஓதும் பிராமணர்கள் எப்போதும் உண்பதில்லை. அசைவத்தை உண்பதால் அசுத்தம் வந்துவிடும் என்றிடும் அவர்கள் மீன் இருக்கும் நீரில்தான் குளிக்கின்றார்கள், அதையேதான் குடிக்கின்றார்கள். தின்னாமல் குடிப்பதில் மட்டும் சுத்தமாகிவிடுமா? மான் இறைச்சியை உண்பதில்லை என்று சொல்லும் பிராமணர்கள் அந்த மானை உரித்த தோலில் பூணூல் அணிகின்றார்களே, இறைச்சி உண்ணாமல் இருப்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. சுத்தம் என்பது அவரவர் எண்ணத்தில்தான் இருக்கின்றது.
*******************************************
சிவவாக்கியம்-160 
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

ஆட்டின் இறைச்சியை அந்தணர்கள் உண்பதில்லை. ஆனால் ஆட்டை பள்ளியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டு செய்வது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டு செய்கின்றார்கள். மாட்டிறைச்சிதின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே. உணவுப் பழக்கத்தினாலோ, ஆசார அனுட்டனங் கலாலோ இறைவனை அடைந்து விடமுடியாது.

No comments:

Post a Comment