Tuesday, 6 June 2017

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்--
உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். 
அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.
இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான்.
இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும்.
 தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன.
அரிசி,  பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது. 
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை..கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்  வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர்.  இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்,  
வாற்கோதுமை (Barley, Hordeum vulgare)

புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யாகனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக வாற்கோதுமை இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும்.

வரலாறு

பயிரிடப்படும் வாற்கோதுமை தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின வாற்கோதுமையிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை வாற்கோதுமை தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. பயிரடப்படும் வாற்கோதுமைக்கும் காட்டின வாற்கோதுமைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின வாற்கோதுமையின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது. வாற்கோதுமை பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாசார எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட வாற்கோதுமையின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. வாற்கோதுமையும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது.
பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் வாற்கோதுமைக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், வாற்கோதுமை மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "வாற்கோதுமைத்தாய்" என்றும் அழைக்கப்பட்டார்.
வாற்கோதுமை மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் நுண்ணுயிர் பகுப்பு மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது.

வரகு-
பண்டைத்தமிழரின் உணவு தானியம்
இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

ஆண்மைக்கு சாமை-

 சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்


தினை

இலக்கியங்களில் தினை-

சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப்புனமும், தினையும், இதற்கு ‘ஏனல்’ என்று பெயர். இது ஓராண்டுச்செடி. தினையரிசிக்காகப் பயிரிடப்படுவது, மலை மக்கள் தினைமாவில் தேனைச் சேர்த்து சாப்பிடுவர். விருந்தினருக்கும் தருவர். சங்க இலக்கியப் பெயர் ஏனல், தினை ஆகும்.
தினையின் தாள் பசுமையானது. இலை நீளமானது. தினைத் தாளின் அடியில் சுற்றிலும் பசிய வேர்கள் பரவி இருக்கும். இதனைக் குருகென்னும் பறவையின் காலுக்கு உவமையாகக் கூறுவர். முற்றிய தினைக்கதிர் வளைந்திருக்கும். கதிரில் பொன்னிற செல்விய தினை விளையும். இவை ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்து இருக்கும். இதனை யானைக் கன்றுகளின் துதிக்கைகளுக்கு உவமை கூறியுள்ளார். புலவர் பெருங்கெளசிகனார் என்பவர், குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினை மிகப்பழங் காலந்தொட்டு விளைந்து வருகின்றது என சங்க இலக்கியத் தாவரவகைப் பாட்டியல் நூல்கள் தெரிவிக்கின்றன. தினைப்புணத்தை மகளிர் காவல் காத்து வந்தனர். பெரிதும் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து உண்ணும். மேலும் யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. ஆதலால் இதனைக் காப்பதற்கு மலை உச்சியில் ஒரு பரண் அமைப்பர். அவற்றில் இருந்து தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். யானை, பன்றி முதலியவை தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்கு பறை ஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவது வழக்கமாகும்.

புராணத்தில் தினை-

தமிழ்க் கடவுள் முருகன் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் கதைகள் கூறப்படுகின்றன.
இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.


புல்லுச்சாமை, குதிரைவாலி --
இது ஒருவகைப் புன்செய் பயிர். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.  
  • உடலை சீராக வைக்க உதவுகிறது.
  • சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
  • ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

கம்பு
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்


குரக்கன்/கேழ்வரகு 
இதன் வேறு பெயர்கள் ஆரியம் , ராகி மற்றும் கேப்பை

மருத்துவ பயன்கள் --
  • ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
  • கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
  • தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
  • இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
  • உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
  • குடலுக்கு வலிமை அளிக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். 
சோளம் 
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது. 


No comments:

Post a Comment