Tuesday, 6 June 2017

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? "

"மருத்துவ குணம் வாய்ந்த நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? " 

எச்சாிக்கை பாசுமதி அரிசி(Basmati Rice)
 ௨டல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் 

#-மரபு அறிவோம் # 

 1. கருப்பு கவுணி அரிசி- (Karuppu Kavuni Arisi )

கருப்பு அரிசி என்றாள் தமிழில் இன்னொரு பெயர் உள்ளது அது தான் “கருப்பு கவுனி அரிசி”. அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வலியேற்ற எதிர்பொருள் (Anti-oxidant) நிறைந்தது.
கருப்பு கவுணி அரிசியின் மேல் தோலில் இரும்பு சத்து , வைட்டமின் E, B-1,B-2 ,துத்தநாகம் (Zinc) ,கால்சியம் ,பாஸ்பரஸ், அமினோ அமிலம் அதிகம் உள்ளது. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
கவுனி அரிசியை திருமணத்திற்கு பிறகு உட்கொள்ள வேண்டியது.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
‘பாரம்பரிய நெல்லில் மாப்பிள்ளை சம்பா என்பது திருமணத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டியது.
மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி. இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான்.
நீரிழிவு மருந்து
ருசி என்றில்லை, உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு. இதற்கெல்லாம் மேலாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய, பல மருத்துவக் குணங்கள் இந்த அரிசியில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது உணவு மருந்து.
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
மருத்துவக் குணம் கொண்ட இந்த இரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.
4. காட்டுயானம் அரிசி :
நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழமையான அரிசி காட்டுயானம்.
இதில் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு அருமருந்தாகிறது.
சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது.
இந்த அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பு: இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம்.
5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும்.
14. குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. பிசினி அரிசி :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. வாடன் சம்பா அரிசி :
அமைதியான தூக்கம் வரும்.--
25-#-மரபு அறிவோம் #
-http://nammalvar.co.in/medicinal%20rice%20varieties.html
தொகுப்பு,
அருள்செல்வன்,
அருளகம்,
சிவபுரம்.

No comments:

Post a Comment