Monday, 8 May 2017

சேரநாடு--


சங்க கால நாட்டுப் பிரிவுகள்
வடக்கே வேங்கடத்தையும், தெற்கே குமரியையும், கிழக்கிலும் 
மேற்கிலும் கடல்களையும் எல்லைகளாகப் பெற்றிருந்த பரந்து 
பட்ட தமிழ்தேசத்தை சேரர், சோழர், பாண்டியர் எனும் 
பேரரசர்களும், அவர்களுக்குட்பட்ட சிற்றரசர் பலரும் ஆட்சி 
செய்தனர்.
 சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடா யிருக்கின்றது. கீழ்ப்பாகம் கொங்குநாடும் (கோயம்புத்தூர், சேலம் , கோட்டகப் பகுதிகள்), கங்கநாடும் (சேலம் மைசூர்ச் சீமைப் பகுதிகள்) ஆகும். மறன், திறன் முதலிய பெயர்கள் முறையே மறல், திறல் என்று திரிந்தாற் போல, சேரன் என்னும் பெயரும் சேரல் எனப் போலியாகிப் பின்பு 'அன்' ஈறு பெற்றுச் சேரலன் என வழங்கிற்று.
 எ-டு: சேரன் செங்குட்டுவன்; களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ் சேரல்.
  

 • உள் நாடுகள்

 •     சேரநாட்டை மலை நாடு என்றும் குறிப்பிடுவர். சேரநாடு
  குடநாடு,     குட்டநாடு, வேணாடு, கற்காநாடு எனப் பல
  உள்நாடுகளைப் பெற்றிருந்தது. இச்சிறு நாடுகளை, பேரரசனுக்கு
  உட்பட்டு அவன் உறவினர்களே ஆண்டு வந்தனர். குட நாட்டை
  ஆண்டவன் ‘குடக்கோ’ என்றும், குட்ட நாட்டை ஆண்டவன்
  ‘குட்டுவன்’ என்றும் பெயர் பெற்றனர்.  

 • சேர மன்னர்கள்
 •     மலை நாடான சேரநாட்டினை நெடுங்காலமாகச் சேரமரபினர்
  ஆண்டு வந்தனர். இச்சேர மன்னர்கள் மேலைக் கடற்கரைப்
  பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்களை வென்று மேலை
  நாடுகளுடன் கடல் வாணிகம் செய்தனர். தேவை ஏற்பட்ட போது
  சோழ, பாண்டிய அரசர்களுடன் போரிட்டனர். சேரர்கள் வில்
  ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
  மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
  என்றும் பெயர் பெற்றனர். 
  "உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
  பொன்னை அழித்தநன் மேனிப் புகழின் திகழும் அழகன்
  மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
  தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கள்வரக் கூவாய்."
  (திருவாசகம்) 

  பதப்பொருள்: குயிலே - குயிலே, உன்னை உகப்பன் - உன்னை விரும்புவேன், உன் துணைத் தோழியும் ஆவன் - உனக்குத் துணை புரியும் தோழியுமாவேன், பொன்னை அழித்த - பொன்னை வென்ற, நல் மேனி - அழகிய திருமேனியையுடைய, புகழின் திகழும் - புகழினால் விளங்குகின்ற, அழகன் - அழகனும், மன்னன் - (யாவர்க்கும்) அரசனும், பரிமிசை வந்த வள்ளல் - குதிரைமேல் ஏறிவந்த அருளாளனும், பெருந்துறை மேய திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள, தென்னவன் - பாண்டியனும், சேரலன் - சேரனும், சோழன் - சோழனும், சீர்ப்புயங்கன் - சிறந்த பாம்பு அணிகளையுடையவனுமாகிய பெருமானை, வரக் கூவாய் - வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

  விளக்கம்: 

  'உன்னை உகப்பன் உன்துணைத் தோழியும் ஆவன்' என்றது, தலைவியின் ஆற்றாமையைக் காட்டியபடி. காண்பதற்கு இனிமையானது அழகு; கேட்பதற்கு இனிமையானது புகழ்; இரண்டையும் உடையவன் பெருமானாதலின், 'புகழின் திகழும் அழகன்' என்றாள். 'தென்னவன் சேரலன் சோழன்' என்றது மூவேந்தருமாய் இருந்து உலகத்தை ஆள்பவன் என்பதாம்.
  இதனால், இறைவன் உலகத்தை ஆள்பவன் என்பது கூறப்பட்டது.

  "செறுமா வுகைக்கும் சேரலன் காண்க"
  (திருமுகப்பாசுரம்)
   
   சேரலன் என்னும் பெயர் முறையே கேரலன், கேரளன் என மருவிற்று, இம் மரூஉ வடிவங்கள் பழந்தமிழ் நூல்களில் ஓரிடத்துங் காணப்படவில்லை; பிந்திய நூல்களில்தாம் காணப்படுகின்றன. இதனால் இவை பிற்காலத்தன என்பது தெளிவு.


 • இலச்சினை
 • சேரர்தம் கொடியாக வில் உருவம் பொறிக்கப் பெற்ற
  விற்கொடியும், மாலையாகப் பனம்பூ மாலையும் திகழ்ந்தன .

 • மொழி

 •     சேர மன்னர்கள் தாய்மொழியாகிய தமிழைத் தம் உயிர்
  போல் பேணினர். 

 • இலக்கியச் சான்றுகள்

 •     சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தைந்து சேர
  அரசர்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவ்வரசர்களின்
  பெயர்களாக நாம் அறிய வருபவை :
      (1) அந்துவஞ்சேரல் இரும்பொறை
      (2) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
      (3) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
      (4) இளங்குட்டுவன்
      (5) இளஞ்சேரல் இரும்பொறை
      (6) உதியன் சேரலாதன்
      (7) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
      (8) கணைக்கால் இரும்பொறை
      (9) கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
      இரும்பொறை
      (10) கருவூர்ச் சாத்தன்
      (11) களé¢காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
      (12) குட்டுவன் கோதை
      (13) கோக்கோதை மார்பன்
      (14) கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
      (15) செல்வக் கடுங்கோ வாழியாதன்
      (16) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
      (17) நம்பி குட்டுவனார்
      (18) பல்யானைச் செல்கெழு குட்டுவன்
      (19) பாலை பாடிய பெருங்கடுங்கோ
      (20) மருதம் பாடிய இளங்கடுங்கோ
      (21) மாந்தரம் பொறையன் கடுங்கோ
      (22) மாரிவெண்கோ
      (23) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
      (24) யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
      (25) வஞ்சன்.
  ஆகியனவாம். 

  No comments:

  Post a Comment