Tuesday, 16 May 2017

திருவேங்கடம்


சதிகார திருட்டு திராவிடத்தால் பறிக்கப்பட்ட திருவேங்கடம் 
அருணகிரிநாதா் முருகணாக கண்ட திருவேங்கடம்.
சிலப்பதிகாரம் பெருமாளகா கண்ட திருவேங்கடம்.
நம்மாழ்வார் பெருமாளகா கண்ட திருவேங்கடம்.
திராவிடத்தால்அழிக்கப்பட்ட 
திருவேங்கட முருகன் கோவில்(7வதுபடைவீடு) எங்கே?
முருகன்,திருமாலும், கொற்றவை 

ஆதிகுடித் தமிழ்க் கடவுளே!

பெயர்க்காரணம்

திருவேங்கடம்   திரு + வேல் + இடம். 
வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும். 

 வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது .

எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. 

ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்திரையோடு பூட்டுபோட்டாராம். 

பிறகு, சங்கு, சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவ கோயிலாக வஞ்சகமாக மாற்றினார்களாம். 
அருணகிரிநாதர் திருப்பதியில் (திருவேங்கடம்) திருப்புகழ் (பாடல் 528 )பாடியுள்ளார்.    

"சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
     மூண்டவி யாதசம ...... யவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
     காந்தவி சாகசர ...... வணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே".

......... சொல் விளக்கம் .........

சாந்தமில் மோக எரி காந்தி ... பொறுமை இல்லாத மோகத்தினால்
உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும்,

அவாவனில மூண்டு ... ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும்,

அவியாத சமயவிரோத ... ஒரு போதும் ஓயாத, சமய வெறியால்
வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும்

சாங்கலை வாரிதியை ... அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும்
சமுத்திரத்தை

நீந்தவொணாது ... நீந்திக் கடக்க முடியாமல்,

உலகர் தாந்துணை யாவரென ... உலகில் மனைவி, மக்கள், சுற்றம்,
இவையே துணையென நம்பியும்,

மடவார் மேல் ஏந்திள வார்முளரி ... பெண்கள் தம் உடல்மீது
அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன,

சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா ... சந்தனம் பூசிய,
மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும்,

அறிவு தடுமாறி ஏங்கிட ... புத்தி தடுமாற்றத்தை அடைந்து,
ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய

ஆருயிரை வாங்கிய காலன்வசம் ... அருமையான ஆவியைக்
கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு

யான்தனி போய்விடுவது இயல்போதான் ... யான் துணையின்றி
தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ?

காந்தளின் ஆனகர ... காந்தள் மலரைப் போன்ற மென்மையான
திருக்கரங்களை உடையவளும்,

மான்தரு கானமயில் காந்த ... மான் ஈன்ற, கானகத்து மயில்
போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே,

விசாக சரவணவேளே ... விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக
வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே,

காண்டகு தேவர்பதி யாண்டவனே ... பார்க்க அழகிய தேவர்
தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே,

சுருதி யாண்டகையே ... வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே,

இபமின் மணவாளா ... ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி
போன்ற தேவயானையின் மணவாளனே,

வேந்த குமார குக ... அரசனே, என்றும் இளையவனே, இதய
குகையில் உறைபவனே,

சேந்த மயூர ... செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே,

வட வேங்கட மாமலையில் உறைவோனே ... வட எல்லையில்
உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே,

வேண்டிய போதடியர் ... உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம்

வேண்டிய போகமது வேண்ட ... அவர்கள் விரும்பிக் கேட்ட போக
பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க,

வெறாது உதவு பெருமாளே. ... வெறுக்காமல் அவர்களுக்குத்
தந்து அருள் புரிகின்ற பெருமாளே. 
திருவேங்கடமலைமேவும் திருமுருகா! அவலநெறி சென்று அருநரகிடை உழலாவண்ணம் காத்தருள். 
திருவேங்கடமலைமேவும் திருமுருகா!

1600 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் வேங்கட மலையில் இருப்பது யார்?  சமண மதத்தவரான இளங்கோவடிகள்

"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்"!
           
நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்

காபி உறிஞ்சல்:
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்

ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே…
(இன்னிக்கும் காணலாம்… மலைப் பாதையில் நடந்து செல்லும் போது, ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!
காசு குடுத்து, சொகுசாய் இறைவனைக் காணச் சென்றால் = இயற்கையும் தெரியாது, இறைவனும் தெரியான்)
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
கோடி = புதுத் துணி
(கோடி ரூபாய் அல்ல, அது இன்றைய செல்வச் செழிப்பின் அவலம்)
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;
கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி, தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல் நிக்குறான்! = யாரு?
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,

தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி
* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!
ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம்  நிலவு!  நடுவால கருமேகமாம்

அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
– ன்னு உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!
பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!
வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்/ சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!
மாயோன் என்ற முல்லை நில நடுகல்…

பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,
அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!
வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்…

என்பதே சங்கத் தமிழும், ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!
* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் யாரு? = இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் யாரு? = இவனே!

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 
சென்று சேர் திருவேங்கட மா மலை 
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
சென்று சேர் திருவேங்கட மாமலை - பரமன் சென்று தங்கி அருள் பாலிக்கும் திருமலை என்பது நேரடிப்பொருள்.

முதலில் வாதங்களை பார்ப்போம்.

பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை. 

1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

7.நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது. 

8. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "வெளியேற்றப்படுகின்றோம் ".

9.கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

10. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே.


11. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

12. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.


13. அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார். 


14.எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?

15.எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

16.எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா?
17. மொட்டை போடுதல் முருகனுக்கு செய்வது. திருமாலுக்கு அல்ல..
திருப்பதியில் மட்டும் மொட்டை திருமாலுக்கா ? மற்ற இடங்களில் முருகனுக்கா ?   

திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்கள்-
1-சந்திரகிரி (தமிழர் - 60 %), 
2-சித்தூர் (தமிழர்- 65%), 
3-குப்பம்(தமிழர்-60 %), 
4-நகரி(தமிழர்-55%), 
5-புங்கனூர்(தமிழர்-50%), 
6-சத்தியவேடு(தமிழர்-70 %),
7-திருக்காளத்தி(தமிழர்-65 %),
8-புத்தளப்பட்டு(தமிழர் -55%),
9-திருப்பதி(தமிழர்-55 %),
10-பல்லவனேறி(தமிழர்-50 %),
11-நெல்லூர்(தமிழர்-55 %), 
12-கோவூர்(தமிழர்-60%),
13-உதயகிரி(தமிழர்-55%) 
வேங்கடம்-
இது மிகவும் அழகான தமிழ்ச் சொல்!
வேங்கடம் = வேம் + கடம் = கொடுங் கடன்கள் வேகும் மலை என்பது பொருள்.
வேம் என்பது வெப்பம், நெருப்பு, பொசுக்கல் என்ற பொருளில் வரும். (வேங்காலம், வேடைக் காலம் என்று கோடைக் காலத்தைச் சொல்வதுண்டு). 

' நெடியோன் குன்றம்' என்பதற்கு முருகன் மலை என்று பொருள்-

No comments:

Post a Comment