Tuesday, 23 May 2017

!திராவிட பகுத்தறிவுபெறு !

                                              திராவிடத்திற்கு பகுத்தறிவு இல்லையா????
திராவிடகோயில்வழிபாடு
சங்ககால சைவதமிழனின் வாழ்வியல் நெறியை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையினொழுங்கமைப்பை உணர்ந்து, ,அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள கடவுளை ஏற்றுக்கொள்பவனே, உண்மையான பகுத்தறிவாதி.
உங்கள் பகுத்தறியும் சிந்தனா சக்திக்கு இது புலப்படவில்லையா?
கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் -திராவிடபகுத்தறிவுகாட்டுமிராண்டியா?
நினைவு நாளின்போது மறைந்த தலைவர்களின் சமாதிக்கு மாலைகள் போடுவது ஏன்? சமாதிக்கு என்ன திராவிடபகுத்தறிவு(அறிவா) இருக்கிறது?
வழிபடப்படும் விக்ரகங்கள் வெறும் கல் தானே என்பவர்களை ஒன்று கேட்கிறேன்.ஆத்திரத்தை அடக்கி அறிவுக்கு வேலை கொடுத்து ஆறஅமர பதில் அளியுங்கள்.உங்கள் தாய் தந்தையரின் புகைப்படத்தை அது வெறும் பேப்பர்தானே என்று சொல்லிக் காலுக்கடியில்போட்டு மிதிக்கச் சொன்னால் செய்வீர்களா?
நினைவு நாளின்போது மறைந்த தலைவர்களின் சமாதியை காலுக்கடியில் போட்டு மிதிக்கச் சொன்னால் செய்வீர்களா?
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கற்களை எறியும் திராவிடபகுத்தறிவுகள்கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கற்களை எறியலாமா?
காற்றைக் கண்ணால் கண்டவன் யார்?
கனவைக் கையிலே பிடித்தவன் யார்?
அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார்?
அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா?
உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும்.
பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும்.
நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும்.
எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும்
திராவிடபகுத்தறிவு‘நான் ஒரு நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்வது சமூக அந்தஸ்து ஆகிவிட்டது.

Thursday, 18 May 2017

தனிச்சமர் புரிந்த “எல்லாளன்”
இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன்! மறைக்கப்பட்ட வரலாறு!
தமிழின் வீரத்திற்கேற்ப எதிரியின் அழைப்பை ஏற்று தனிச்சமர் புரிந்த “எல்லாளன்” !
அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன்.
இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் இந்த தகவலை பதிவுசெய்துள்ளது.
இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
எல்லாளன் தமிழ்ஈழத்தின்பூநகரி நகரத்தை ( உத்தரதேசத்தை) சேர்ந்தவர் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனை என கூறியுள்ளார்.

வரலாறு--
கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.
இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.
எல்லாளன் பற்றி மகாவம்சம்--
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை.
இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது.
எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.
எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.
பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.
ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.
மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.
எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக வவிகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.
விகாரைமகாதேவியும் எல்லாளனும்-
கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது.
பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும் , அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள்.இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது.
உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான்.
பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான்.
திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.
பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும் இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.
துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும்-
காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.
இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு[15] வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்படையுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.
போர் நீண்டது.
எல்லாளனின் போர் வலிமை விகாரைமகாதேவியை திகைப்படைய வைத்தது.
நிலைமையை புரிந்த விகாரைமகாதேவி கூட்டத்திலிருந்து வெளியே வந்து ‘மகாராஜா… எலாரா…’ எனக் கூக்குரலிட்டாள்.
குரல் வந்த பக்கம் எல்லாளன் திரும்பினான்.
‘என் மகன்… மகாராஜா’ கூப்பிய கரங்கள் கூறின.
திகைத்து நின்ற துட்டகாமினி மறுகணமே தன் தாயின் ‘யுத்த தந்திரத்தை’ புரிந்து கொண்டான்.
எல்லாளனின் மார்பை வேல் துளைத்து நிலை கொண்டது. கி.மு. 101 ஆம் ஆண்டு, 44 ஆண்டுகால தமிழா்ஆட்சியின் அஸ்தமனத்துடன், தமிழ் மன்னன் “எல்லாளன்” சதி மூலம் வெட்டி சாய்க்கப்பட்டான்.

காக்க வந்தவர் யாரும் கிடையாது.

காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை


தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை.
இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும். 
சிவம் எழுந்த பொழுது தமிழ் எழுந்தது. தமிழ் எழுந்த பொழுது தமிழன் எழுந்தான். தமிழ் எழுந்த பொழுது தமிழன் அட்டமாசித்திகளுடன் எழுந்தான்.
இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி
சரணாகதி என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
“நாமார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோம் அல்லோம்”
இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும். அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார்.
‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’
இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார்.
“தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன்
நற்சங்க வெண்குழை ஓர் காதில்
போமாற்கே நாம் என்றும்
மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே”
இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும்.
தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்?
“கடுஞ்சினத்த கொல் களிறும்
கதழ்பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடனே மாண்டராயினும்
மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள்.
“பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் நீதி
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”
எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் உகுநீர் நெஞ்சுசுட”
என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது.
இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்.
தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்?
சிவம் (சைவம்) பற்றியே எழுந்தது பல்லவப் பேரசு. சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட இராஜராஜசோழன் சிவம் பற்றியே கங்கையும் கடாரமும்(மலேசியா) கடந்த சோழப் பேரசை உருவாக்கினான்.
இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை பற்றுக பற்றற்றான் சிவபெருமான் பற்றை அப்பற்று மனக் கவலை போக்கும் உன்னை மாசிலாதவன் ஆக்கும் மதிநுட்பத்திலும் மதிப்பிலும் மேன்மைப்படுத்தும்.தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமேதமிழ் ஈழம் 110 வருடக்கணக்காக நடந்து வரும் ஒரு போராட்டம் . சுமார் 80 ஆண்டுகளாக ஜனநயாக வழியில் நடந்த போராட்டம் பின்பு 20 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராட்ட காலமாக மாறி , மூன்று தலைமுறைகளை கண்டு இன்று மறுபடியும்
சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!
தந்தை செல்வா சொன்னதைப் போல், “““தமிழரைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”
தமிழனிடம் வீரம், விவேகம், அறிவு, ஆயுதம், பணம், பாசம் முப்படைகளும் . இருந்தும்தமிழர்.கொல்லப்பட்டுள்ளனர்.(தமிழன் சென்ற இடமெல்லாம் அடி வாங்கினான்) தமிழனின்முப்படைகளும் . பின்வாங்கியத்தின் காரணம் தமிழா------
தமிழ் ஈழம் 110 வருடக்கணக்காக நடந்து வரும் ஒரு போராட்டம் . சுமார் 80 ஆண்டுகளாக ஜனநயாக வழியில் நடந்த போராட்டம் பின்பு 20 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராட்ட காலமாக மாறி , மூன்று தலைமுறைகளை கண்டு இன்று மறுபடியும்-----
ஆதியும் அந்தமும்இல்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவத்திடம்.சரணாகதி அடைவதன்மூலம் இலக்கினையும் இலகுவாக அடைந்து விடலாம். சரணாகதி என்பது ஒரு செயல் என்பதை விட ஒரு மனநிலை எனலாம்.
எந்த காரியத்திற்காக நாம் சரணாகதியை மேற்கொண்டாலும், சரணாகதி அப்பலனை முடிவான பலனை முதலிலேயே தரவல்லது.
முடிவான பலனை செயலை ஆரம்பிக்கும் முன் முதலிலேயே தரும் மனநிலை சரணாகதி.
முடிவான பலனை முதலிலேயே தரும் முடிவுக்குரிய மனநிலை சரணாகதி.
அடக்கத்தால் சரணாகதி பலிக்கும். சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.
மனம் எதை ஏற்கிறதோ, அப்பலனை இதுபோல் தரவல்லது சரணாகதி
அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே! தற்குறைவாக இருந்த ஆன்மபலத்தை வளர்த்துக்கொண்டுவாழ்வை மேம்படுத்த முடியும்.
சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ்,
ஆகவே சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது ,மீறிப் பார்த்தால் தமிழ் உயிர்ப்பை இழந்துவிடும். நாம் வாழ்வை அடைய முடியாது முடியாது 
சைவம்சிவனைமூலாதாரத்தின்மூண்டெழுகனளான (மூலாக்கினியை)சிவாக்கினியை) முழுமுதலாகக் கொண்டதுபிரித்துப் பார்க்க முடியாது -மீறிப் பார்த்தால் நாம் வாழ்வை அடைய முடியாது 
முட்டாளாக்கிய பகுத்தறிவு -----
சிவத்தமிழர்களுடைய வாழ்வுப் பயணம் தடம் புரண்டுபோவதற்குக் ,-காரணம்
சிவனைத் தவறாக அறிந்துகொண்டு இருப்பதுதான்.இருப்பதுதான்.,முட்டாளாக்கிய
பகுத்தறிவு - -தமிழர்களுக்கு விளங்காமல் இருக்கவே பகுத்தறிவு-வாழ்க பகுத்தறிவு
சிவன் சுட்டியறியப்பட முடியாதவன் .புளகாங்கிதமாக உணரப்பட வேண்டியவன்.அவனாலன்றி எவனால் வாழ்வு கிடைக்கும்?மேன்மைகொள் சைவநீதி விளங்குகிறது உலகமெல்லாம்
எமது வருங்காலத்தினருக்கு சைவம் அருளிய தமிழை மறக்காமலும் சிவயோககளையும் ஊட்டியும் வளர்க்க வேண்டும்.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்---
துலங்குக வையக மே!--தொல்லை வினை தரு தொல்லை யகன்றுசுடர்க தமிழ்
தமிழாசங்ககால சைவதமிழன் தமிழால்சாதித்தான் !!
தமிழா சங்ககால சைவதமிழன் ஆண்மீகபலத்தால் சாதித்தான் !!
தமிழ் என் தாய் தமிழ் என் முகவாி வாழ்க வாழ்கவே !!
நம் உயிர் தமிழ் வாழ்க வாழ்கவே!!
நம்மூச்சு தமிழ் என்றும் வாழ்க வாழ்கவே!!

Tuesday, 16 May 2017

திருவேங்கடம்


சதிகார திருட்டு திராவிடத்தால் பறிக்கப்பட்ட திருவேங்கடம் 
அருணகிரிநாதா் முருகணாக கண்ட திருவேங்கடம்.
சிலப்பதிகாரம் பெருமாளகா கண்ட திருவேங்கடம்.
நம்மாழ்வார் பெருமாளகா கண்ட திருவேங்கடம்.
திராவிடத்தால்அழிக்கப்பட்ட 
திருவேங்கட முருகன் கோவில்(7வதுபடைவீடு) எங்கே?
முருகன்,திருமாலும், கொற்றவை 

ஆதிகுடித் தமிழ்க் கடவுளே!

பெயர்க்காரணம்

திருவேங்கடம்   திரு + வேல் + இடம். 
வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும். 

 வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது .

எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. 

ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்திரையோடு பூட்டுபோட்டாராம். 

பிறகு, சங்கு, சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவ கோயிலாக வஞ்சகமாக மாற்றினார்களாம். 
அருணகிரிநாதர் திருப்பதியில் (திருவேங்கடம்) திருப்புகழ் (பாடல் 528 )பாடியுள்ளார்.    

"சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
     மூண்டவி யாதசம ...... யவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
     காந்தவி சாகசர ...... வணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே".

......... சொல் விளக்கம் .........

சாந்தமில் மோக எரி காந்தி ... பொறுமை இல்லாத மோகத்தினால்
உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும்,

அவாவனில மூண்டு ... ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும்,

அவியாத சமயவிரோத ... ஒரு போதும் ஓயாத, சமய வெறியால்
வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும்

சாங்கலை வாரிதியை ... அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும்
சமுத்திரத்தை

நீந்தவொணாது ... நீந்திக் கடக்க முடியாமல்,

உலகர் தாந்துணை யாவரென ... உலகில் மனைவி, மக்கள், சுற்றம்,
இவையே துணையென நம்பியும்,

மடவார் மேல் ஏந்திள வார்முளரி ... பெண்கள் தம் உடல்மீது
அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன,

சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா ... சந்தனம் பூசிய,
மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும்,

அறிவு தடுமாறி ஏங்கிட ... புத்தி தடுமாற்றத்தை அடைந்து,
ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய

ஆருயிரை வாங்கிய காலன்வசம் ... அருமையான ஆவியைக்
கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு

யான்தனி போய்விடுவது இயல்போதான் ... யான் துணையின்றி
தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ?

காந்தளின் ஆனகர ... காந்தள் மலரைப் போன்ற மென்மையான
திருக்கரங்களை உடையவளும்,

மான்தரு கானமயில் காந்த ... மான் ஈன்ற, கானகத்து மயில்
போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே,

விசாக சரவணவேளே ... விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக
வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே,

காண்டகு தேவர்பதி யாண்டவனே ... பார்க்க அழகிய தேவர்
தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே,

சுருதி யாண்டகையே ... வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே,

இபமின் மணவாளா ... ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி
போன்ற தேவயானையின் மணவாளனே,

வேந்த குமார குக ... அரசனே, என்றும் இளையவனே, இதய
குகையில் உறைபவனே,

சேந்த மயூர ... செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே,

வட வேங்கட மாமலையில் உறைவோனே ... வட எல்லையில்
உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே,

வேண்டிய போதடியர் ... உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம்

வேண்டிய போகமது வேண்ட ... அவர்கள் விரும்பிக் கேட்ட போக
பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க,

வெறாது உதவு பெருமாளே. ... வெறுக்காமல் அவர்களுக்குத்
தந்து அருள் புரிகின்ற பெருமாளே. 
திருவேங்கடமலைமேவும் திருமுருகா! அவலநெறி சென்று அருநரகிடை உழலாவண்ணம் காத்தருள். 
திருவேங்கடமலைமேவும் திருமுருகா!

1600 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் வேங்கட மலையில் இருப்பது யார்?  சமண மதத்தவரான இளங்கோவடிகள்

"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்"!
           
நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்

காபி உறிஞ்சல்:
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்

ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே…
(இன்னிக்கும் காணலாம்… மலைப் பாதையில் நடந்து செல்லும் போது, ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!
காசு குடுத்து, சொகுசாய் இறைவனைக் காணச் சென்றால் = இயற்கையும் தெரியாது, இறைவனும் தெரியான்)
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
கோடி = புதுத் துணி
(கோடி ரூபாய் அல்ல, அது இன்றைய செல்வச் செழிப்பின் அவலம்)
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;
கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி, தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல் நிக்குறான்! = யாரு?
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,

தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி
* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!
ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம்  நிலவு!  நடுவால கருமேகமாம்

அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
– ன்னு உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!
பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!
வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்/ சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!
மாயோன் என்ற முல்லை நில நடுகல்…

பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,
அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!
வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்…

என்பதே சங்கத் தமிழும், ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!
* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் யாரு? = இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் யாரு? = இவனே!

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 
சென்று சேர் திருவேங்கட மா மலை 
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
சென்று சேர் திருவேங்கட மாமலை - பரமன் சென்று தங்கி அருள் பாலிக்கும் திருமலை என்பது நேரடிப்பொருள்.

முதலில் வாதங்களை பார்ப்போம்.

பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை. 

1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

7.நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது. 

8. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "வெளியேற்றப்படுகின்றோம் ".

9.கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

10. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே.


11. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

12. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.


13. அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார். 


14.எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?

15.எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

16.எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா?
17. மொட்டை போடுதல் முருகனுக்கு செய்வது. திருமாலுக்கு அல்ல..
திருப்பதியில் மட்டும் மொட்டை திருமாலுக்கா ? மற்ற இடங்களில் முருகனுக்கா ?   

திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்கள்-
1-சந்திரகிரி (தமிழர் - 60 %), 
2-சித்தூர் (தமிழர்- 65%), 
3-குப்பம்(தமிழர்-60 %), 
4-நகரி(தமிழர்-55%), 
5-புங்கனூர்(தமிழர்-50%), 
6-சத்தியவேடு(தமிழர்-70 %),
7-திருக்காளத்தி(தமிழர்-65 %),
8-புத்தளப்பட்டு(தமிழர் -55%),
9-திருப்பதி(தமிழர்-55 %),
10-பல்லவனேறி(தமிழர்-50 %),
11-நெல்லூர்(தமிழர்-55 %), 
12-கோவூர்(தமிழர்-60%),
13-உதயகிரி(தமிழர்-55%) 
வேங்கடம்-
இது மிகவும் அழகான தமிழ்ச் சொல்!
வேங்கடம் = வேம் + கடம் = கொடுங் கடன்கள் வேகும் மலை என்பது பொருள்.
வேம் என்பது வெப்பம், நெருப்பு, பொசுக்கல் என்ற பொருளில் வரும். (வேங்காலம், வேடைக் காலம் என்று கோடைக் காலத்தைச் சொல்வதுண்டு). 

' நெடியோன் குன்றம்' என்பதற்கு முருகன் மலை என்று பொருள்-

Monday, 15 May 2017

ஆச்சாரகோவை


உணவு உண்ணும் வழிமுறைகள் ஆச்சார கோவையின் படி.

1.உணவு உண்ணும் முறைமை (இன்னிசை வெண்பா ) பாடல் -18
 நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்

2.கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை (இன்னிசை சிந்தியல் வெண்பா ) பாடல் -19

கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.

3.உண்ணும் விதம் (இன்னிசை வெண்பா ) பாடல் -20

ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்

4.உண்ணக் கூடாத முறைகள் (இன்னிசை சிந்தியல் வெண்பா )

படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.

5.பெரியோருடன் இருந்து உண்ணும்  முறை  (இன்னிசை சிந்தியல் வெண்பா )

தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.

6.கசக்கும் சுவை முதலிய பொருட்கள் உண்ணும் முறைமை   (இன்னிசை சிந்தியல் வெண்பா ) பாடல் -25

 உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.

7.உண்ணும் கலம் (இன்னிசை வெண்பா ) பாடல் -26

தம்மைவிட மூத்தாருடன் உண்ணுதல் கூடாது. அப்படி உண்ணும்போது ஒழுங்குப்படி சிறிய கலங்களை கொண்டு ஒழுக்கம் தவறாமல் உண்டு அக்கலங்களை உடனே முறைப்படி நீக்க வேண்டும்.

8.உண்டபின் செய்ய வேண்டியவை (பஃறொடை வெண்பா) பாடல் -27

 வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

9.தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பிறர்க்காக அன்றி தனக்காக உலை வையார், உணவு உட்கொள்ளார், எச்சிற்படுத்தார், மனையில் இருக்கும் தெய்வங்களுக்கு ஊட்டினதை அறிந்து பின் தாம் உண்பார்

நெறியின் படி உண்ண எனது வாழ்த்துக்கள்

Sunday, 14 May 2017

"எதிரி"எதிரி"எதிரி" "எதிரி"

எதிரி என்பவன்  தனது கர்மாவின்  தார்மீக கணக்கே என தன்மை யோடு உணர்ந்தவனுக்கு உனது எதிரியும் நீயே  
உனது செயலே கர்மா ஆகி  அந்த கர்மாவே  நீ எதிரி என நினைக்கும்  ஒரு உயிருள்ள சடலத்தை  உனக்கு எதிராக 
பயன்படுத்துகிறது.என நீ  உணரும் போது   உன் எதிரி முகத்தில்
உனது கர்மாஉனது கண்களுக்கு தெரிய வந்தால் உனது எதிரி இல்லையே.
உனக்கு எதிரே இருந்தாலும்  கலக்கம் தேவை படுவதில்லை.உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்கே உனது எதிரி.
அ.அருள்செல்வன்,
அருளகம்,
சிவபுரம். 
"எதிரி"எதிரி"எதிரி""எதிரி"எதிரி"எதிரி" 

Wednesday, 10 May 2017

தமிழகம் திராவிடத்தால் இழந்த தமிழா் நிலப்பகுதியை மீட்க போா்நடத்துமா?


தமிழகம் திராவிடத்தால்  இழந்த தமிழா் நிலப்பகுதியை மீட்க போா்நடத்துமா?
தமிழகத்தை ஆந்திரா,கா்நாடக,கோரளா போன்ற நாடுகளிடம் அடிமைபடுத்தி, தமிழகத்தை சுடுகாடாக  மாற்றி விட்டனர் . சதிகார திருட்டு திராவிடம்.
தமிழகம் விடுதலை பெற சுதந்திர போா்நடத்துமா?
அல்லது தன்மாணம் இழந்து நிற்குமா?
சூடு சொறணை உள்ளவர்களுக்கு இது புரிந்தால் தமிழன் என்ற இனத்திற்க்கு என்றும் அழிவில்லை.
சதிகார திராவிடத்தால் தமிழகம் சிதைக்கப்பட்டு இழந்த பகுதிகள் வரலாற்று உண்மை.

சங்க காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு
வடக்கில் தக்காண பீடபூமியும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் கடல்களும் சங்க காலத் தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன.

தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் தமிழகத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

(நெடியோன் குன்றம் - திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.)

சங்க காலத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கில் நெடுந்தூரம் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் சுருங்கிவிட்டது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறநானூற்றில் சங்க காலத் தமிழகத்தின் எல்லையை அளவிட்டுக் காட்டியுள்ளார்:

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
(புறநானூறு,17:1-2)
(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)
புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
(மதுரைக்காஞ்சி:70-71)
என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.
வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,
(அகநானூறு, 211:7-8)
(உம்பர் - மேலே, வடக்கில்; மொழிபெயர் தேஎத்தர் - வேறு மொழி பேசும் நாட்டினர்.)
குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.
(குறுந்தொகை,11:6-7)
என்று கூறுகிறார்.
சங்க காலத் தமிழகத்தில் தற்போது உள்ள கேரளமும் சேர்ந்திருந்தது என்பது நன்னூல் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
(நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8)
என்று மேற்கு எல்லையாகக் குடகு மலை (மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ளதைச் சுட்டியுள்ளார். நன்னூல் இந்த எல்லைகளை உணர்த்துவதால், கி.பி 12ஆம் நூற்றாண்டில் மேற்கே குடகு வரை தமிழகம் பரவி இருந்தது தெரியவருகிறது.
அந்நாளில் தமிழகம் பல நூறு ஆண்டுகளாகப் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு முதலிய அரசியற் பிரிவுகளுக்குட்பட்டுக் கிடந்ததற்கு அதன் இயற்கை அமைப்புத்தான் காரணம் ஆகும்.


இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள்

இழந்த பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்ததாகும் .

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது கேரளாவோடு சேர்க்கப்பட்ட  தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் .

*மத்திய அரசாங்கம் தமிழக  விளைநிலங்களை கைப்பற்றி ஹைட்றோகாபன்-மீத்தேன் கொண்டுவந்தபொழுது மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

*தமிழக உழவுத்தொழிலுக்கு மத்திய அரசு சாவுமணி அடித்தபொழுது... மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

*இந்திய மத்திய அரசு ஜல்லிகட்டு தடைசெய்த பொழுது.
  மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

*கச்சதீவை இலங்கைக்கு 1974ஆம் ஆண்டு  தாரை வார்த்த ஒப்பந்தத்தை இந்திய மத்திய அரசு செய்தபொழுது ...                                                                               மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

1977ம் ஆண்டில் இருந்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. அவர்களை கொலைசெய்துள்ளது. இந்திய மத்திய அரசு வேடிக்கை பாா்த்தபொழுது எல்லாம் --மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

 *1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது...
மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.


*மத்திய அரசாங்கம் தமிழக  விளைநிலங்களை கைப்பற்றி ஹைட்றோகாபன்-மீத்தேன் கொண்டுவந்தபொழுது மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

*தமிழக உழவுத்தொழிலுக்கு மத்திய அரசு சாவுமணி அடித்தபொழுது... மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

*இந்திய மத்திய அரசு ஜல்லிகட்டு தடைசெய்த பொழுது.
  மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

*கச்சதீவை இலங்கைக்கு 1974ஆம் ஆண்டு  தாரை வார்த்த ஒப்பந்தத்தை இந்திய மத்திய அரசு செய்தபொழுது ...          மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

1977ம் ஆண்டில் இருந்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. அவர்களை கொலைசெய்துள்ளது. இந்திய மத்திய அரசு வேடிக்கை பாா்த்தபொழுது எல்லாம் --மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

 *1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது...
மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

இந்திய மத்திய அரசு இன்றுவரைக்கும்வரைக்கும் தமிழ்ஈழதமிழாின் அழிப்புக்கு சிறிலங்கா அரசுக்கு துணைநின்றது.  மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.

வெல்வது தமிழணாகத்தான் இருக்க வேண்டும்..!
தோற்பது தமிழணை அடிமைகளாக கடந்த 50 வருடங்களாக வைத்திருந்த திராவிட நாடுகளான ஆந்திரா-கா்நாடகம்-கேரளா..!

வந்தேறிமதங்கள் அவா்களின் அடையாளங்களை உடைத்தெறிவோம்.!

உன் நிலத்தையும் உன் வளத்தையும் காத்து உன் சந்ததியிடம் பத்திரமாய் ஒப்படைப்பது உன் கடமை...!

ஏழ்மைக்கு எதிராய் கல்லாமைக்கு எதிராய் லஞ்ச ஊழலுக்கு எதிராய் துரோகிகளுக்கு எதிராய் அணி திரண்டு வா...!

தமிழனை ஆள்வது தமிழனே என மார்தட்டலாம் வா...!

புது சரித்திரம் படைத்த பெருமை நம்முடையது என பேருவுகை கொள்வோம் வா...!

தமிழ் மக்களே விழிப்பாய் இருங்கள் தொடர்ந்து கண்காணித்து எதிர்கால தமிழ் இனத்தை காப்போம் விழிப்புடன் இருப்போம் தமிழர் உரிமையை பாதுகாப்போம்.!

தமிழக தமிழனுக்கு சூடு... சொரனை... மானமே...ஆண்மை இல்லையா?

தமிழா நீ அடிமைதலையில்  இருந்து பஞ்சபூதங்கலாக எழு..

கபடம் நிறைந்த வாயால் தமிழ்பேசி /தமிழ்பாடல்கள் பாடி தமிழணை நித்திரையாக்கி தமிழனின்தூக்கத்தில் திருடிகொடுத்தத திராவிடம்.