Wednesday, 12 April 2017

சங்க தமிழா்கலின் திருநாள்-PART-1

சங்க தமிழா்கலின் திருநாள் சைவமத வாழ்வியலுடன் தொடர்புடையது.

சுறவம்  மாதம்--தைமாதம்--


சுறவம்  (தை) மாதம் என்பது சக்தி வாய்ந்தது. சுறவம்  (தை) முதல் நாள் முதல் உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறார்.
சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.

சங்க காலத்தில் பெண்கள் தை மாதம் சில வேண்டுதல்களை கடவுள் முன்பு வைப்பார்கள் ,அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை  பரிபாடல் வரிகளில் பார்ப்போம் [பரிபாடல் 11],

“கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,

விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்

கும்பம்மாதம் -- மாசி மாதம்.

சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் சங்ககால தமிழா்கலால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் சங்ககால தமிழா்கலால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மீனம்மாதம் -- பங்குனிமாதம்

சங்ககால தமிழா்கலால் கொண்டாடப்படும் இந்த மாதம் பங்குனி உத்தரம் பண்டிகையை செய்கிறார்கள் ,

சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும்.

பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். 

பங்குனி உத்தரம்  என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும்.

மேழம்மாதம் -சித்திரைமாதம் :
-நமது சங்ககால தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடும் விழாக்கள்

சித்திரைமாதம் - சித்திரைகனி,சித்ராபௌர்ணமி
மருதத் திணைவிழா அல்லது இந்திரா விழா
சித்திரை   வருடப்பிறப்புஆகும்

 
இராசிச் சக்கரத்தில் மேட ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. 
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். 

மருதத் திணைவிழா அல்லது இந்திரா விழா--
கடவுள் இந்திரன்

மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.
மேலும் இந்த மாதத்தில் இந்திரா விழா என்ற மிகப்பெரும் விழாவையும் பழந்தமிழ் மக்கள் கொண்டாடி வந்துள்ளனர்,
இந்திரவிழா  என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில்  பழந்தமிழ் மக்கள் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான்.
இவ்விழாவைத் "தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் "என்று சாத்தனார் கூறுகின்றார். 

No comments:

Post a Comment