Saturday, 15 April 2017

இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள்

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பழந்தமிழ் மக்கள் வணங்கிய 
இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் = மாயோன், சேயோன்.
வைஸ்ணவ வழிபாடு தமிழ் இலக்கியத்தில் இல்லை சைவமதம் 
௭ன்றுதான் ௨ள்ளது. தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்.

 60,000ண்டுகலுக்கு முற்பட்டது அது மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
* மாயோன் = பெருமாள் = முல்லைக் கடவுள்

* சேயோன் =    முருகன்   = குறிஞ்சிக் கடவுள் 

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்

என்று முதலில் முல்லை நில மாயோனைச் சொல்லி விட்டு அப்புறம் தான்

 குறிஞ்சி நிலச் சேயோனைச் சொல்கிறார் தொல்காப்பியர்! 

ஏங்க இப்படிச் சொல்லுறாரு? = சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் -

சிறப்புடைய பொருளை முதலில் சொல்லுதல் என்பதோர் தமிழ் மரபு!

பொதுவாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்...என்று தானே நாம் 

எல்லாரும் வரிசைப்படுத்துகிறோம்? ஆனால் தொல்காப்பியர் சொல்லும்

 வரிசையைப் பாருங்க!

மாயோன் மேய காடுறை உலகமும்,

சேயோன் மேய மைவரை உலகமும்,

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,

வருணன் மேய பெருமணல் உலகமும்,

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே! 

முல்லை, குறிஞ்சி-ன்னு வரிசை மாறி இருக்கு! இது ஏன் என்பது ஆய்வுக்கு

 உரிய ஒன்று! எது எப்படியோ...இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் 

பழமையான நூல் தொல்காப்பியம். அது மிகப் பழமையான தமிழ்ச்

 சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் மாற்றுக் கருத்தே இல்லை!
அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்துவது என்பது தொல்காப்பியர்

 காலத்திலேயே இருந்திருக்கிறது. இதற்குப் பூவை நிலை என்று பெயர்
.
பூவை நிலை 

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்

தாவா விழுப்புகழ் பூவை நிலையும்

என்பது தொல்காப்பியத்தில் புறத்திணை இயலில் வரும் பாடல். 

தமிழரிடையே மாயோனுக்கு "மன்பெரும்" சிறப்பாம்! சொல்லுவது

 தொல்காப்பியர்.

தொல்காப்பியர் காலத்தில் இயற்கை/நடுகல் வணக்கம் தான் பரவலாக

 இருந்திருக்கிறது. நடுகல் வணக்கம் பற்றிப் பல செய்திகளைத் தருகிறார்

 தொல்காப்பியர்!

நடுகல் நட்ட இடத்தில் வழிபாடும் ஆட்டங்களும் நடைபெற்றதாக 

அறிகிறோம்! வேலன் வெறியாட்டம், குரவைக் கூத்து போன்ற ஆட்டங்கள்

 பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன! 

 முல்லை-காடும் காடு சார்ந்த இடமும் = பச்சைப் பசேல்-ன்னு தானே

 இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி!

* முல்லை-பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!

* முல்லை-சிறுபொழுது = மாலை! அதனால் மால் - திருமால்!

* முல்லை-ஆயர்கள் நிலம்! அதனால் ஆயர் தம் கொழுந்தே!

* முல்லை-தொழில் = ஆநிரை மேய்த்தல்! = பசுக்களை மேய்த்தான்!

* முல்லை-விளையாட்டு = ஏறு தழுவுதல் = காளைகளை அடக்கி 

நப்பின்னையை மணம் புரிந்தான்!

* முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் இவன் காதல் மன்னன்! :-

அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்துவது என்பது தொல்காப்பியர்

 காலத்திலேயே இருந்திருக்கிறது. இதற்குப் பூவை நிலை என்று பெயர்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்

தாவா விழுப்புகழ் பூவை நிலையும்

என்பது தொல்காப்பியத்தில் புறத்திணை இயலில் வரும் பாடல். 

தமிழரிடையே மாயோனுக்கு "மன்பெரும்" சிறப்பாம்! சொல்லுவது

 தொல்காப்பியர்!

*  ஆரியக் கலப்புக்குப் பின்னரோ......  * 

நம் பண்பாட்டில் பிறர் பண்பாடும் கலக்கத் துவங்கிய போது இன்னும்

 பலப்பல மாற்றங்கள் (சில வேண்டாத மாற்றங்களும் கூட)!  தென்பட்டன. 

 வேள்வி/பலிகளை வழிபாடாகக் கொண்டது ஆரியப் பண்பாடு,

(இன்றைய வேதியா் )

பூவை நிலை, பூஜை நிலை ஆக மாறியது! தமிழ் மரபுப்படி மலரால் 

வழிபடுவது வழக்கமானது! 

*சிவன் ௨ருத்திரன் ஆனான்  * 

* ஆயர் குல மாயோன் = ஆயர் குலக் கண்ணன் ஆனான்!

* காக்கும் தொழில் அரசன் = காக்கும் தொழில் திருமால் ஆனான்!

* முருகன் ஸ்கந்தன் ஆனான்!

* திருமால் விஷ்ணு ஆனான்!

ஆனால் அப்போது கூட மாயோனும் சேயோனும் தத்தம் தனித்தன்மைகளை

 இழக்கவில்லை! ஆரியர்கள் தமிழோடு சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம்!

 ஆரிய இனமல்லாத கண்ணனைத் தங்கள் கடவுளாக ஏற்றுக்

 கொண்டார்கள்! 

சிலப்பதிகாரத்தில் வேங்கட மலை மேல், திருமால் சங்கு சக்கரங்களோடு 

நிற்கும் காட்சி வர்ணிக்கப்படுகிறது! 

இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும், வேங்கடவன் திருமாலே

 என்பதற்கு?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்

ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்

தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி 

என்று வேங்கடத்து நெடியவனை இளங்கோவடிகள் பாடுகிறார்! 

அருணகிரிநாதா்--

"வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்"..
..
தமிழை ஓதிச் செல்பவர் பின்னால் திரிகின்றவனாம் திருமால்! 

இரவும்பக லந்தியு நின்றிடு

குயில்வந்திசை தெந்தென வென்றிட

இருகண்கள் துயின்றிட லின்றியும்     அயர்வாகி

இவணெஞ்சு பதன்பத னென்றிட

மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்

இனியுன்றன் மலர்ந்தில கும்பதம்  அடைவேனோ

திருவொன்றி விளங்கிய அண்டர்கள் 

மனையின்தயி ருண்டவ னெண்டிசை

திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்

திரிகின்றவன் மஞ்சு நிறம்புனை

பவன்மிஞ்சு திறங்கொள வென்றடல் 

ஜெயதுங்க முகுந்தன் மகிழ்ந்தருள்    மருகோனே

மருவுங்கடல் துந்துமி யுங்குட 

முழவங்கள் குமின்குமி னென்றிட

வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே

மதியுங்கதி ரும்புய லுந்தின

மறுகும்படி அண்ட மிலங்கிட

வளர்கின்ற பரங்கிரி வந்தருள்  பெருமாளே. 

அதே சிலப்பதிகாரத்தில், திருவரங்கக் காட்சிகள் சொல்லப்படுகின்றன!-

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,

கண்ணிமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே! 

என்றும் கேட்கிறார்!-

இரண்டே இரண்டு தெய்வங்கள் மட்டும்....

தங்கள் தனித் தன்மையை, தமிழ்த் தன்மையை இன்னும் இழக்கவில்லை!

* இலக்கியத்தில் சேயோன் என்றால் பேச்சு வழக்கில் முருகன்!-

மு - மெல்லினம்

ரு - இடையினம்

கு - வல்லினம். 

"முருகு" என்னும் பெயரிலேயே தமிழ் மணக்கவில்லையா
முருகன் என்பது தமிழ்ப் பெயர்! முருகன் என்று தான் எங்கும் 

அழைக்கப்படுகிறான்! 

* இலக்கியத்தில் மாயோன் என்றால் பேச்சு வழக்கில் பெருமாள்!!

தி   =வல்லினம்

ரு   =இடையினம்

மா =மெல்லினம்

ல்   =இடையினம்,அவனோடு கூடிய பெண்ணுக்கும் ஒரு இடை-இனம்.

அத்துனையும் ஒருங்கே அமைந்து, பெண்ணுக்கும் இடம் தந்த  தமிழன்! -

பெருமாள் என்பது தமிழ்ப் பெயர்! பெருமாள் என்று தான் எங்கும் 

அழைக்கப்படுகிறான்!!

"பச்சைத் தமிழின் பின்னால் செல்லும் பசுங் கொண்டலே"-

ன்னு தமிழ்க் கடவுள் திருமாலைப் பாடுகிறார் "குமர"குருபரர்! 

யாரும் விஷ்ணு கோயில்-ன்னு சொல்லறதில்லை! 

பெருமாள் கோயில் என்று தான் சொல்கிறார்கள்!


 தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். 60,000ண்டுகலுக்கு முற்பட்டது  

அது மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.


இறைவனுக்கும் முன்னால், தமிழ் தான் முழங்கிச் செல்கிறது!

தமிழுக்கும் பின்னால் இறைவன்!

No comments:

Post a Comment