Saturday, 15 April 2017

கார்த்திகைப் பண்டிகை

கார்த்திகைப் பண்டிகைதான் தென்னாட்டில் தீபஒளி திருநாள்
சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.47.3
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் . 

பொ-ரை : பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும் , தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ ?

கு-ரை: வளை - வளையல். மறுகு - தெரு. வண்மை - தெரு வினர் கொடைவளம். துளக்கு - அசைவு. தளர்வு, வருத்தம். இல் - இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச் சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர் வில்லாத என்க . தளத்து - சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா . கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க.

No comments:

Post a Comment