Tuesday, 21 March 2017

குறள் எண்:9

எண்குணத்தான் இறைவன்


”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.” 

– திருக்குறள் 9, அதிகாரம் – கடவுள் வாழ்த்து 

எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற உறுப்புகள் இருந்தும், அவைகளுக்கு உண்டான, குறிப்பிட்ட புலன்களான உணர்வு இயக்கம், பேசும் திறன், பார்வை, சுவாசம், கேட்கும் திறன் அவ்ற்றை இழந்து, எந்தவிதமான பயனும் அற்றதற்கு இணையாகும். 

அத்தன்மையவர்க்கு தலை இருந்தும் அது பயனற்றதாம். 

இத்திருக்குறளில் ’எண்குணத்தான்’ என்பதற்குப் பரிமேழகர், சைவாகமத்துள் கூறப்பட்ட, 

1.தன்வயத்தன் ஆதல், 
2.தூய உடம்பினன் ஆதல், 
3.இயற்கை உணர்வினன் ஆதல், 
4.முற்றும் உணர்தல், 
5.இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், 6.பேரருள் உடைமை, 
7.முடிவிலா ஆற்றல் உடைமை, 
8.வரம்பில் இன்பம் உடைமை 
என்ற இறைக்குணங்களை இறைவனின் எண்குணங்களாக மேற்கோள் காட்டுகிறார்.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:9)
பொழிப்பு: கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடியை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
மணக்குடவர் உரை: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.
பரிமேலழகர் உரை: கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
(எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை: எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராத கண், கேளாத செவி போலப் பயனற்றது.
பொருள்கோள் வரிஅமைப்பு:
எண் குணத்தான் தாளை வணங்காத் தலை கோள் இல் பொறியில் குணம் இலவே .

கோள் இல் பொறியின் குணம் இல: 
பதவுரை: கோள்-கொள்ளுதல்; இல்-இல்லாத; பொறியின்-பொறிபோல; குணம்-நற்பண்பு; இல-உடையஅல்ல
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல.
பரிப்பெருமாள்: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல,
பரிப்பெருமாள் குறிப்புரை: குணமில்லை என்றது பயனில்லை என்றவாறு.
பரிதி: கோளாகிய நவக்கிரகங்களும், பலனாகிய கண், வாய், மூக்கு, செவி, மெய் என்னும் ஐம்புலன்களும் உண்டாகிலும் பயனில்லை.
[இவர் குறிப்பிடும் நவக்கிரகங்கள்: ஞாயிறு, திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி,ராகு, கேது.]
காலிங்கர்: கோட்பரமில்லாத பொறியினைப் போலக் குணமில்லனவாம். [கோட்பரம் - கொள்கை நோக்கு]
பரிமேலழகர் உரை: தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல;
மணக்குடவர் ''பொறிகளை உடைய பொம்மை போல' குணமில்லை' என இப்பகுதிக்குப் பொருள் கொள்கிறார். பரிதி ''கோள்கள் அவற்றின் பலனாகிய ஐம்புலன்கள் இருப்பினும் எனப் பொருள் கூறி சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராய் பயனில்லை'' என்று விளக்கம் தருகிறார். காலிங்கர் 'புலன் உணர்வு அற்ற ஐம்பொறிகள்' எனக் குறிக்கிறார். பரிமேலழகரது 'கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்லாத'' என்ற உரை காலிங்கர் உரையை ஒத்தது.
இன்றைய ஆசிரியர்கள் 'புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றவையாகும்', 'மூளையின் குணமாகிய சிந்தனைச் சக்தி இல்லாததென்றுதான் சொல்ல வேண்டும்.', 'கேட்குஞ் சக்தியற்ற காது, பார்க்குஞ் சக்தியற்ற கண் முதலிய செயற்றிறமில்லாத உறுப்புக்கள் போலப் பயனில்லாதனவே', 'பயனில்லாத உறுப்புகளைப் போலப் பய்யனற்றனவே', என்ற பொருளில் உரை தந்தனர்.
பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல உணர்வில்லாதவை இப்பகுதியின் பொருள்.
எண் குணத்தான் தாளை வணங்காத் தலை: 
பதவுரை: எண்குணத்தான்- எண்ணப்பட்ட குணங்களையுடையவன்; தாளை-அடிகளை; வணங்கா-பணியாத; தலை-தலை.
பொருள்: எண்ணப்பட்ட குணங்களையுடையவனது அடிகளை வணங்காத தலைகள்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
மணக்குடவர் கருத்துரை: உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புகள் என்றார்.
பரிப்பெருமாள்: இது வணங்காதார்க்கு உளதாகும் குற்றம் கூறிற்று. இவை எல்லாம் தலைமை பற்றிக் கூறியவாறு கண்டுகொள்க. இவ்வதிகாரத்திற் கூறிய கடவுட் பெயர் எல்லாம் ஒரு சமயத்தார் கூறும் பெயரன்றி, வேறு வேறாகப்பலசமயத்தார் கூறும் பெயராகத் தோன்றா நின்றது. அதற்குக் காரணம் என்னை எனின் இஃது எமக்குப் புலனாயிற்றன்று. அச்சமயத்தார் எல்லாரும் தன்னெறிக்கண் செல்லும் உள்ளத்தார் ஆகலின் யாதானும் ஒரு சமயத்தார் கூறிய கடவுளை வணங்கின் நன்றிபயக்கும் என்பது போதுங் கருத்து..
பரிதியார்: எட்டுக்குணங்களை உடைய சிவன் சிவந்ததாளை வணங்காத தலை.
எட்டுக்குணங்களாவன: அனந்தஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாயியல்பு என்பன.
காலிங்கர்: எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனது தாளினை வணங்கப்பெறாத தலைகள் என்றவாறு.
பரிமேலழகர் உரை: எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
பரிமேலழகரது விரிவுரை: எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.
மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் ஆகிய மூவரும் 'எட்டுக்குணங்களைக் கொண்டவன் திருவடியை வணங்காத தலை' என்று பொருள் கூற இப்பகுதிக்குக் காலிங்கர் மாறுபட்ட உரையாக எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவன் தாளை வணங்காத தலை' என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'எளிய குணமுடைய இறைவனின் திருவடிகள வணங்காத தலைகள் ', 'எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ள்வனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை ', 'எட்டாகக் கூறப்படும் உயர்ந்த தன்மைகளையுடைய கடவுளின் திருவடிகளை வழிபடாத தலைகளானவை', 'மக்களால் நினைப்பதற்குரிய குணங்களையுடைய கடவுளின் அடிகலை வணங்காத தலைகள் ', என்ற பொருளில் உரை தந்தனர்.
மாந்தர் எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: 
இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் என்னும் பாடல்.
எண்குணத்தான் திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை என்பது பாடலின் பொருள்.
'எண்குணத்தான்' குறிப்பது என்ன?
கோள்இல் என்பதற்கு கொள்ளுதல் இல்லாத என்பது பொருள். இங்கு ஊறு, சுவை, ஒளி, மணம், ஓசை என்ற புலன்களைக் கொள்ளுதல் இயலாத என்பதைக் குறிக்கும். இச்சொல்லுக்கு கொள்கை இல்லாத, குறிக்கோள் அற்ற என்ற பொருள்களும் உள.
பொறிஇன் என்றது மெய், வாய், கண், மூக்கு, செவி) போல எனப் பொருள்படும்.
குணமிலவே என்ற சொல்லுக்கு குணமில்லையே என்றும் பயனில்லையே என்றும் பொருள் கொள்வர்.
தாளை என்ற சொல் (இறைவனது) திருவடியை என்ற பொருள் தரும்.
வணங்காத் தலை என்ற தொடர் வணங்காத தலைகள் என்று பொருள்படும் (குணமிலவே என்னும் பன்மைச் சொல்லைத் தழுவியதால் தலைகள்).
எண்ணிய குணத்தை உடைய இறைவனது தாளை வணங்காத தலைகள் சிந்திக்கும் திறனற்றன.
'கோளில் பொறியின்' என்பதற்கு கொள்ளுதல் இல்லாத அல்லது கொள்கை இல்லாத பொறிகள்போல என்பது பொருள். அதாவது அவை தத்தமக்குரிய புலன் உணர்வுகள் இல்லாத பொறிகள் ஆகும். புலனில்லாத பொறிகள் உற்றறியா மெய், சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி என்பன. இவை போல எண்குணத்தான் திருவடியை நினையாதவர் குணமற்ற அதாவது செயல்திறமில்லாத தலைகள். கொண்டவராயிருப்பர் என்கிறது இப்பாடல். எண்குணத்தான் என்றது எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருள் தருவது. செயல் திறமில்லாத தலை என்றது உணர்வில்லாத அல்லது அறிவில்லாத அதாவது 'மூளையில்லாத/ மூளை செயல்படாத தலையைக் குறித்தது. சிந்தைனத் திறன தந்த இறைவனை நினைந்து வணங்காத தலையில் அறிவு இல்லை என்பது கருத்து.
இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள தாள் இறைவன் திருவடியைக் குறிக்கும். இவ்வேளையில் 'தாள்' பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு இங்கு நினைக்கத்தக்கது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'. இவ்விளக்கத்தின்படி குறளில் சொல்லப்படுவது உருவமற்ற தாள் எனவும் அதை மறவாமல் நினைந்து, அவன் அருளை வேண்டித் தலை வணங்க வேண்டும் எனக் கொள்ளவேண்டும்.
'வணங்கா' என்பது வணங்காத, வளையாத, பணியாத எனப் பொருள்படும்.
"தாளை வணங்காத தலை' என்பதிலுள்ள தலையைச் சினைப் பெயராகக் கொள்ளாமல் இடப்பொருளாகக் கருதி "தாளை வணங்காவிடத்து" என்றும் உரை கண்டனர். ஆனால் இது இலக்கணமுறைப்படி தவறு என்று இரா சாரங்கபாணி சுட்டிக் காட்டுகிறார்: 'அப்படிப் பொருள் கொண்டால், 'எவை குணமில' என்பதற்கு இக்குறளில் எழுவாய் இன்றிப்போகும். 'குணமில' என்பதற்குத் தலை எழுவாயாக அமைகிறது. எனவே தலை என்பதற்குச் சினைப் பெயராகக் கொள்வதே ஏற்புடைத்து.' என்பது அவரது விளக்கம்.
வணங்குதலும் நினைத்தல், வழிபடல் போன்று மன, மொழி, மெய் ஒன்றுபட்ட செயலாகும். வணங்குதல் என்றவுடன் இறைவனின் திருவுருவின்முன் வீழ்ந்து வணங்குதலாகிய செய்கை நினைவுக்கு வரலாம். இங்கு உருவ வழிபாடு சொல்லப்பட்டுள்ளதா? எதனை வணங்குவது? எதன் முன் பணிவது? என்ற வினாக்கள் எழுகின்றன.
கடவுளுக்கு இன்ன உருவம், நிறம் என்றெல்லாம் குறளில் எங்கும் கூறப்படவில்லை. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று இறைவனை இந்த முறையில் இந்த நேரத்தில் வழிபடு என எந்தக் குறளும் கூறவில்லை. தாள்சேர், அடிசேர் என்று மட்டுமே குறள் சொல்கிறது. தாள் சேர் என்பதற்கு முன்பகுதியில் விளக்கப்பட்டது போல் மறவாது நினைத்தல் என்றே பொருள். அதுபோல் 'தாளை வணங்காத' என்பதற்கு இறைவனை இடைவிடாது நினைக்காத என்று பொருள் கொள்ள வேண்டும். அகத்தொடு தொடர்புடைய வழிபாடுதான வள்ளுவர் சொல்வது. அதாவது; தாளை வணங்கும் மனிதனும் வணங்கப்படும் இறைவனும் ஒரு தளத்தில் இல்லை. தலைவணக்கம் என்பது முனைப்பின்மையை உணர்த்துவது. எனவே இங்கு உறுப்பு வணக்கமோ உருவவழிபாடோ சொல்லப்படவில்லை. தான் என்ற முனைப்பின்றி உருவமற்ற தாளை நினைந்து கடவுளின் அருளை வேண்டி நிற்காத தலை என்பது வணங்கா தலை என்பதற்குப் பொருள் ஆகும்.
தலையினுடைய வேலை சிந்தித்துப் பார்த்தல். சிந்தித்துப் பார்க்கிற தலை கடவுளை வணங்கும். .உருவமில்லாத இறைவனைக் குணவடிவினனாக்கி வணக்கத்துடன் இடையறாது நினைத்தல் வேண்டும் என்று இப்பாடலில் வள்ளுவர் கூறுகிறார்.
இக்குறளில் காணப்படும் ஒலியின் சிறப்புத்தன்மையை இ சுந்தரமூர்த்தி இவ்விதம் பாராட்டி மகிழ்கிறார்: "'குணமிலவே' என்றதில் அமைந்துள்ள ஏகாரப்பொருள் இறைவனை வணங்காதிருப்போரிடத்துப் பரிவுணர்ச்சியைத் தோற்றுவிப்பது போல் அமைந்து விளங்குகின்றது என்பர். 'தலை குணம் இலவே' என்றதில் ஏகாரம் இரக்கமும் பரிவும் இசைந்து நின்றது. அந்த ஒலியின் நீர்மையை உள்ளச் செவியால் கூர்மையாய் ஓர்ந்து கொள்க. அரிய பயனை இழந்து அவமே இழிந்து போவது பெரிய இரக்கத்திற்குரியது என்னும் பொருள்கள் எகாரக் குறிப்புப் பெற்றுத் துலங்குவதை எடுத்துக் காட்டுவர்....ஒலியின் நீர்மையை உள்ள உணர்வாலும் மொழியின் நடையியல்பை உணர்ந்து ஓதும் திறத்தாலுமே உணரமுடியும்."
'எண்குணத்தான்' குறிப்பது என்ன?
எண்குணத்தான் என்பது இறைவனையே குறிக்கும். இச்சொல்லுக்கு எட்டுக் குணங்கள் கொண்டவன், எளிய குணம் உடையவன்,, எண்ணப்பட்ட குணங்களை உடையவன். என்னும் மூன்று வகையான விளக்கங்கள் காணப்பெறுகின்றன.
எண்குணத்தான் என்றது சமணக் கடவுள் என்று சிலரும் சைவ சமயக் கடவுளான சிவன் என்று வேறு சிலரும் கூறுவர். பரிமேலழகர் முதலில் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகிய எட்டுக் குணங்களைக் கூறி அவை 'சைவாகமத்துக் கூறப்பட்டது' என்றும் சொல்கிறார். இவரே அடுத்து மற்றவர்கள் உரைப்பதாக 'அணிமா'வை முதலாக உடைய மகிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு:ம் என்று கூறி,, சமண சமயத்தார் கூறும் 'கடை இலா அறிவை' முதலாக உடைய கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுள் இன்மை, அழியா இயல்பு என்ற எட்டு குணங்களையும் பட்டியலிடுகிறார்.
பரிதி உரையில் காணும் சைவ சமயக் கடவுளான சிவனுக்குரிய எட்டுக் குணங்களும், சைவாகமத்துள் கூறப்பட்டதாக பரிமேலழகர் சொல்லும் எட்டுக்குணங்களும் வேறுவேறாக உள்ளன. இதன் காரணம் அறியப்படவில்லை. குறளுக்குச் சைவ சமய சார்பு கொண்டு உரை எழுதியதாகக் கருதப்படும் பரிதி கூறும் எட்டுக்குணங்களும் சமணசமயத்தில் கண்டுள்ள எண்குணங்களை ஒட்டிவருகின்றன என்பது வியப்பளிக்கிறது. பரிமேலழகர் சுட்டும் சைவ சமய ஆகமம் எது என்பதும் தெரியவில்லை.
காலத்தால் குறளுக்கு மிகவும் பின்பட்ட தேவாரம்தான் முதன்முதலில் சிவனை எண்குணத்தான் என்று கூறுகிறது; அதற்குமுன் சிவனை இவ்வடை கொண்டு யாரும் குறிப்பிடவில்லை; எனவே இக்குறள் குறிப்பிடுவது சமணக் கடவுளே என்பது சமணர்கள் வாதம்.
இன்னும் சில உரையாளர்கள் இறைவனுக்குரியதாக இவற்றினின்றும் வேறுபட்ட எட்டு எட்டு குணங்களை கூறியுள்ளனர். அவற்றில் சில:
பயனின்மை, பிறவியின்மை, பற்றின்மை, பேரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவில் அறிவுடைமை, கோதிரமின்மை.ஆகிய எட்டு (பழைய உரை).:
அன்பு, அறிவு, பணிவு, ஒழுக்கம், இன்சொல், வீரம், அறம், புகழ் ஆகிய எட்டு (இறையரசன்) ;
ஆதிபகவன்,. வாலறிவன், மலரிமிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமை யில்லாதான், அறவாழி அந்தணன் ஆகிய எட்டு (அ கு ஆதித்தர்)
மெய்யுணர்வு, (வாய்மையால்) உலகோர் உள்ளத்தில் இடம் பெற்றமை, ஐம்பொறிகளின் நுகர்வாயில்களை அழித்தமை, (பற்றறுப்பு) அவாவின்மை, பேரா இயற்கை பெற்றமை, தன்னிகரற்ற தன்மை, இறைமை, செந்தண்மையுடன் கூடிய அறம் ஆகிய எட்டு (கு ச ஆனந்தன்).
இரண்டாவது வகையான விளக்கம் சொல்பவர்கள் எண்குணத்தான் என்பது 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள்படும் என்பர். இவர்கள்:
எண்பொருள வாகச் செலச்சொல்லி............. (குறள் 424: பொருள்: எளிய பொருள் ஆகுமாறு மனம்கொளச் சொல்லி......);
எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன்............ (குறள் 548:பொருள்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்........ };
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப........(குறள் 991: பொருள்: எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது} என்று கூறுவர்.........)
ஆகிய குறட்பாக்களைச் சான்றாகக் காட்டி இவற்றில் 'எண்' எளிய என்ற பொருளில் ஆளப்பட்டதைச் சுட்டுவர். இவர்கள் கூற்று அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன் என்பது எளிமையுடையவன் என்பதற்கு அணுகுதற்கு எளியவனாகி அன்பர்கள் குறைகளைச் செவிமடுப்பவன் எனவும் கொள்ளலாம்.
மூன்றாவது வகையினர் எண்குணத்தான் என்பதற்கு 'எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனைக் குறிக்கும் என்பர். காலிங்கர் முதலில் இக்கருத்தை முன்வைத்தார். பிற பழைய உரையாசிரியர்கள் கொண்ட பொருள்களிலிருந்து வேறுபட்டது இவ்வுரை. அன்பர்கள் எண்ணும் அல்லது நினைக்கும் குணங்களையுடையவன் என்ற பொருள் தருவது. இதை எண்னத் தகுந்த, பாராட்டத்தக்க குணங்களை உடையவன் என்றும், .பலகாலும் எண்ணி எண்ணி இன்புறத்தக்க குணங்கள் கொண்டவன் என்றும், எல்லாரும் எண்ணத் தகும் குணமுடையவன் என்றும், மாந்தர்கள் இறைவனது பெருமைகளை எண்ணி முயன்று அக்குணங்களைப் பெறவேண்டும் என்றும் விளக்குவர்.
காலிங்கர் கொண்ட பொருளுக்கு இறைவன் குணவடிவினன், அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் என்பன சிறந்த விளக்கம் ஆகலாம்.
எட்டுக் குணங்கள் என்று கூறப்பட்டவற்றுள் பெரும்பான்மை சமயக் கருத்துக்களே. இவை தவிர்த்து, மற்ற வேறுவகையான எட்டுக் குணங்களும் கூறப்பட்டன. எட்டுக்குணங்கள் கொண்ட இறைவன் என்று பொருள் கொள்வது சரியா? இறைவனுக்கு எண்ணி எட்டே எட்டு குணங்கள்தானா? எட்டுக் குணங்கள் கொண்டவன் என்று கடவுளை ஒரு எல்லைக்குள கொண்டுவர முடியுமா? இறைவன் எண்ணுதற்கரிய குணங்களை உடையவன் அல்லவா? சமயக் கடவுளரை வள்ளுவர் குறளில் எங்கும் கூறவில்லை என்பது திண்ணம். இப்பாடலிலும் சமயமோ சமயக் கடவுளோ இல்லை. சமயம் சார்ந்த எட்டுக் குணங்கள் ஏற்காது. இறைனது குணங்கள் எந்த எண்ணிக்கையுள்ளும் அடங்கா என்பதால் பகுத்தறிவாளரான கு ச ஆனந்தன் போன்றோர் கூறிய எட்டுக்குண உரையும் மற்றபிற எட்டுக்குண உரைகளும் தள்ளத்தக்கனவே.
எளிமையான குணங்களும் எண்ணுங் குணங்களுள் அடங்கிவிடுவதால் எண்குணத்தான் என்பதில் உள்ள எண் என்பதற்கு எண்ணுப் பெயராகக் கொள்ளாமல் நினைக்கும் அதாவது எண்ணும் குணங்களையுடயவன் என்று கொள்வதே பொருத்தமாக அமையும்.
எண்குணத்தான் என்பதன் பொருள் எண்ணும் குணங்களுடைய இறைவன் என்பதாம்.
மாந்தர் எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை என்பது இக்குறட்கருத்து.

Monday, 20 March 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Yaathum Oore Yaavarum Kelir -Tamilaruvi Manian

1--PART-2-https://youtu.be/250ZlqHQKSM

3-https://www.youtube.com/watch?v=-5AFwhcpN3c&t=1s

4-https://www.youtube.com/watch?v=-2UVosySb7E&t=1s

5-https://www.youtube.com/watch?v=JwMlOibTwpk&t=3s

இலக்கியக் காலம் தொட்டு இன்று வரை 
6-https://www.youtube.com/watch?v=TEnqKXD3PR8

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்[தொகு]
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
கணியன் பூங்குன்றனார்
சங்க காலப் புலவர்

"ஆரியம்"- -"ஆரியம்"-"ஆரியம்"

ஆரியம்- 
சிந்துவெளியில் தமிழரை வென்றது.
அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை; கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.
பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலைநிறுத்தியபோதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், 
ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், 
தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.
சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராகஆயுதம்  ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பானவையாக உள்ளன.
ஆரியக் கூடாரத்தில் தமிழரையும் அடைத்து வைக்கும் சொல்தான் ‘திராவிடர்’ என்பது. பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.
தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண்களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறையான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.
தமிழரது இனப் போராட்ட வரலாற்றை,
1. ஆரியர் – தமிழர் போர்
2. தமிழர் – திராவிடர் போர்
என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :
• ஆரியர் கூட்டத்திற்கு அழித்தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.
• சிந்துவெளித் தமிழருக்கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.
• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்.


இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.
"ஆரியமே தமிழரின் முதல் பகை,திராவிடம் ஆரியத்தின் கிளை "


சிந்து வெளித் தமிழர்


இந்திய நிலப் பரப்பின் வட மேற்கில் தொடங்கிய சிந்துவெளி அரசு, தெற்காசியாவின் வட மேற்குத் திசை வழியே ஏறத்தாழ 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கிமு.2600 – கிமு 1900), மிக உயர்ந்த நாகரிகத்தை எட்டியிருந்தது சிந்து வெளித் தமிழர் அரசு. சிந்து நதியின் பெரு வெள்ளத்தையே தடுத்து, பாசனம் செய்ய அணைகள் கட்டி இருந்தனர் சிந்துவெளித் தமிழர்கள். அடுக்கு மாடி வீடுகள், நகரின் மையத்தில் நீச்சல் குளம், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீதிகள், தொழிலாளர்களுக்கென தனி வீடுகள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிந்துவெளியில் இருந்தன. உலகின் மிகப் பெரிய பண்டைய நாகரிகம் இது ஆகும்.


கப்பற் கலையில் சிந்துவெளித் தமிழர் விற்பன்னர்களாக இருந்தனர். சிந்து ஆற்றின் வழியே கலங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலுக்கு வந்து, அங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். இறக்குமதிக்கும் இவ்வழியே பயன்படுத்தப்பட்டது.


சிந்துவெளி அரசு தமிழர்களுடையதுதான் என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வாளர்கள் அனைவரும் சிந்துவெளி மக்களை, ’மூல திராவிடர்’ என்கின்றனர். தமிழர் என்று அறுதியிட்டுக் கூறவியலா வண்ணம் ’திராவிட அரசியல்’ தமிழகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகளும் கிடைத்துவிட்டன. அக்காலத்தில் இருந்த தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆதலின், சிந்துவெளி மொழியை மூலத் தமிழ் மொழி என அழைத்தலே பொருத்தமானது. ஆனால், திராவிடம் குறித்த பெரு எடுப்பிலான பரப்புரையின் விளைவு, ஆய்வுலகையும் தாக்கியுள்ளதால், சிந்துவெளி மொழியை ‘ மூல திராவிட மொழி’ என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.


சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்துகளை, ஒலி வடிவத்துடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் அறிஞர் பலர். முனைவர்.இரா.மதிவாணன் தமது ஆய்வில் வெளியிட்டுள்ள சிந்து வெளி எழுத்துகள் சிலவற்றைக் காண்போம்;


அவ்வன்
அண்ணன் அப்பு
அட்டன்
அதியன்
சானன் அவ்வன்
நன்னன்
அந்தனன்


(Indus script Dravidian – Dr.r.Madhivanan / Tamil chanror peravai/ 1995)


ஆகவே, சிந்துவெளி அரசு தமிழர் அரசு என்பதில் யாதொரு ஐயமும் தேவை இல்லை. சிந்துவெளித் தமிழர் அரசு நிலைகுலையத் தொடங்கியது ஆரியப் படையெடுப்பினால்தான். தமிழர்கள் மாபெரும் நாகரிகத்தைக் கட்டியாண்ட காலத்தில், கொள்ளையர்களாகவும் கால்நடை மேய்ப்பவர்களாகவும் வட மேற்கு இந்தியாவிற்குள் புகுந்தவர்கள் ஆரியர்கள். தமக்கென ஒரு நிலையான நாடு இல்லாமல், நிலைத்த அரசு இல்லாமல் வழிப்பறி செய்தும் சூறையாடியும் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆரியர்கள். கால்நடை மேய்த்தல் ஒன்றுதான் அவர்கள் அறிந்த உற்பத்தி சார்ந்த தொழில். பல்வேறு நாகரிகப் பழங்குடிகளின் குடியிருப்புகளைச் சூறையாடி அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளையும் உற்பத்தி நுட்பங்களையும் தமதாக்கிக் கொண்டுதான் ஆரிய இனம் சிந்துவெளிக்குள் நுழைந்தது.


தமிழரது சிந்துவெளி அரசின் கட்டமைப்பும் வளமையும் ஆரியருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிந்துவெளியின் மீது ஆரியர் போர் தொடுத்தனர். ஆரியரது போர் முறையின் அடிப்படை ஒன்றுதான் – அழித்தொழி! எஞ்சியதைக் கைப்பற்று!


இந்த அடிப்படையில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இவ்விதமான போரை அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு, தற்காப்பு நிலை தேவைப்பட்டது. ஏனெனில், ஒரு மாபெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள். நகரங்கள், கப்பல்கள், எண்ணற்ற உற்பத்தி ஆலைகள், வேளாண் நிலங்கள், அணைகள் என அவர்கள் கட்டமைத்திருந்த செல்வங்கள் ஏராளம். பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களும் அல்லர். அவர்கள் அமைதியான வாழ்வியலைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்தனர்.


ஆரியர்களுக்கோ அழித்தொழிப்பதும், எஞ்சியவற்றைப் பிடுங்குவதுமே வாழ்வியல். வெறிபிடித்த கொள்ளைக் கூட்டத்திற்கும் நாகரிகமயப்பட்ட மாந்தருக்கும் இடையே நடந்த போர் அது. இப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. ஆரியரது முதல் வேதமான, ரிக் இப்போர் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. ரிக் வேதம் வாய்வழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரிய முனிவர்கள் தமது வரலாற்றைப் பாடல்களாக்கி வழி வழியாகப் பாடியே, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு ஆரிய வெறி ஊட்டினர். ஆரியருக்கு அப்போது எந்த எழுத்து மொழியும் இல்லை.


ரிக் வேதம், சிந்துவெளித் தமிழரை ‘தஸ்யூக்கள்’ என்கிறது. தாசர்கள் என்பது இதன் தமிழ் ஒலிப்பு முறை. தாசர்கள் என்றால், ’வள்ளல் என்பதே மூலப் பொருள். ஆனால், அது இப்போது அடிமை என்று மாறி விட்டது. ஆரியன் என்றால் நாடோடியாகத் திரிகிறவன் என்று பொருள். அது இபோது உயர்ந்தவன் என மாறிவிட்டது’ என்பார் அறிஞர் கோசாம்பி.(நூல்: பகவான் புத்தர்)


பெரும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் வாழ்ந்த சிந்துத் தமிழர், ஆரியருக்கும் பிறருக்கும் வாரி வழங்கிய வள்ளன்மையுடன் வாழ்ந்ததன் அடையாளம் தாசர் என்ற பெயர்.


சிந்துவெளித் தமிழரது தலைவர், விருத்திரன் என்று அறியப்படுகிறார். இந்திரன், ஆரியரின் தலைவன். இந்திரன், குடி வெறியன், பெண்பித்தன். தமிழர்களது நீர்த் தேக்கங்களைப் பாதுகாக்கும் தலைவராக, அகி என்பவர் அறியப்படுகிறார். இந்திரனது படைகள், சிந்துவெளியின் நீர்த் தேக்கங்களையே கூடுதலாகக் குறி வைத்துத் தாக்கின. இதற்கு ஆரியர்கள் கூறிய காரணம் கவனிக்கத்தக்கது. ’மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பதுபோல், இந்தத் தாசர்கள் தண்ணீரைப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! இதைக் கட்டுத்தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவதுபோல், சிறைப்பிடித்து வைத்திருக்கின்ற இந்தத் தண்ணீரை அவிழ்த்துவிடு இந்திரா’
-இவ்வாறு ஆரிய முனிவர்கள் / தலைவர்கள் கூறக் காரணம் என்னவாக இருக்கும்?


ஒரு பேரழிவை ஏற்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் விதமான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் பின்னணியாக இருக்கலாம். ஆரியரது உடன் பிறந்த இயல்பும் இதுவாகும். சிந்துவெளித் தமிழரை அழிப்பதற்கு ஆரியர் கூறிய பல்வேறு காரணங்களில் சில,


• தாசர்கள் வேள்வி செய்யாதவர்கள். அதுமட்டுமன்று, ஆரியரது வேள்விகளைத் தடுக்கிறார்கள். இரவிலே வந்து வேள்விகளை அழித்துச் செல்கின்றனர். ஆகவே, இவர்களை அழிக்க வேண்டும்.
• தாசர்கள் கடவுள்களை நம்பாதவர்கள்.
• தாசர்கள் அசுரர்கள்.
• தாசர்கள் மதச் சடங்கு அற்றவர்கள். அறிவு இல்லாதவர்கள். மனிதத்தன்மையே இல்லாதவர்கள்
-இவ்வாறெல்லாம் சிந்துத் தமிழர்கள் மீது ஆரியர்கள் வெறுப்பு ஏற்படுத்தினர்.
ஒரு சமூகத்தை அழிக்கும் முன், அச் சமூகம் குறித்த பொய்யான அபாயகரமான மதிப்பீடுகளை உருவாக்குவது ஆரியம் இன்றும் செய்யும் திட்டமிட்ட பணியாகும்.


ஈழத்தில் பேரழிவு ஏற்படுத்தும் முன், ’தீவிரவாதம், சகோதர யுத்தம், ரத்த வெறி’ என்றெல்லாம் பல ஆண்டுகளாக ஆரியம் பரப்புரை செய்தது. பின்னர், அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஒரு ஞாயமான போராட்டத்தை அழிப்பதற்குத் தேவையான உள உறுதியையும் துணிவையும் அகத்திலும் புறத்திலும் வழங்கும் அடிப்படைக் காரணி இந்த பொய்ப் பரப்புரை ஆகும்.


நீர்த்தேக்கங்களின் தலைவர் அகி, இந்திரன் படைகளால் கொல்லப்பட்டார். பல நீர்த் தேக்கங்களை ஆரிய வெறிப் படை உடைத்தது. வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரம் சிந்துத் தமிழர் அழிந்தனர். விருத்திரன் காட்டில் தன் தாயுடன் ஒளிந்திருந்து சிறிய சண்டைகள் நடத்தினார். பின்னர் விருத்திரனும் தாயும் கொல்லப்பட்டனர்.


சிந்துவெளித் தமிழர்தான் ஆரியரை முதன் முதலில் எதிர்த்துப் பெரும்போர் புரிந்தோர் ஆவர். ஆரியரை எதிர்க்கும் மனத் துணிவும் மரபு வழி அறிவும் இந்திய நிலப் பரப்பில் எவரைக் காட்டிலும் தமிழருக்கே மிகுதியாக உண்டு. சிந்துவெளிப் போர் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. ஆரியர் வெற்றிகொள்ளத் தொடங்கினர். தமிழர் பகுதிகள் ஆரியக் குடியேற்றங்களாகின. பின்னர் இயற்கைச் சீற்றங்களால், சிந்துவெளித் தமிழர் நிலம் அழிந்தது.


சங்ககாலத்தில் ஆரியர் – தமிழர் போர்கள்


சங்க காலத்தில் ஆரிய – தமிழர் போர் மீண்டும் தொடங்கியது. தமிழரது ஆட்சியெல்லை, தெற்கே குமரி முதல் வடக்கே விந்திய மலை வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே, ஆரியர் ஆட்சியும், தெற்கே தமிழர் ஆட்சியும் நிலவியது.


இக்காலத்தில், தமிழர்கள் அரசுகள் அமைத்து, போர்க் கலைகள் கற்று வலுவுடன் இருந்தனர். முற்கால மூவேந்தர்கள் ஆட்சி செலுத்தினர். இக்காலத்தில், ஆரியர் தமிழரைத் தேடி வந்து படையெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை. மாறாக, தமிழ் வேந்தர்கள் இமயம் வரை சென்று ஆரியரை அழித்ததற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரிய அரசுகள் தமிழர் அரசுகளுக்கு அடங்கி வாழ்ந்தன என்பதையே வரலாறு உணர்த்துகிறது.


ஆரிய பிராமணர்கள், தமிழகத்தை நோக்கிப் பிழைப்புத் தேடி வந்தனர். அவர்களது ஆட்சியமைப்புக் கலை, தமிழக வேந்தர்களுக்குப் பயன்பட்டது. அரச உருவாக்கம் என்பது, சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை, பாகுபாடுகளை ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இப்பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் ஞாயப்படுத்தும் கோட்பாடு எதுவும் தமிழரிடத்தில் இல்லை. அவ்விதமான கோட்பாடு, இன்றுவரை தமிழரிடம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆரியரோ, ரிக் வேத காலத்திலிருந்தே பாகுபாடுகளை / சுரண்டலைக் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள். அவர்களது அர்த்தசாத்திரம், ஆட்சியமைப்புக் கலையின் உச்சகட்ட சீரழிவுகளை போதிக்கும் நூல் ஆகும்.


வேந்தர்கள் பேரரசு உருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், தமிழக அந்தணர்கள் (பிராமணர்கள் அல்ல – அறிவாளர்கள்!) தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தினர். வீரம், தமிழ் அந்தணர்களால் போற்றப்பட்டது. அதேவேளை, அறம் சார்ந்த வாழ்வியலே அடிப்படையானதாகக் கற்பிக்கப்பட்டது. புறநானூறு, தமிழ் அரசர்களின் வீரத்தைப் போற்றும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், தமிழ் அரசர்களுக்கு அறம் போதிக்கும் பாடல்கள் புறநானூற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவ்வகையான அறம் போதிக்கும் மரபு, தமிழருக்கே உரிய சிறப்பு.


தமிழத்தின் எல்லை, ‘ வட வேங்கடம் – தென் குமரி’ என வரையறுக்கபட்டது. ஆனால், தமிழ் வேந்தர்கள் பல்வேறு படையெடுப்புகளை இமையம் வரை நடத்தி வெற்றி கண்டனர். பேரரசு உருவாக்கத்தில், ஓர் அரசர் எந்த எல்லை வரை படையெடுத்துச் சென்று வெல்கிறாரோ அந்த எல்லையே அவரது பேரரசின் எல்லை ஆகும். ஆனால், தமிழர்கள், இவ்விதமாகத் தமது எல்லையை விரிவுபடுத்தவே இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய சேதியாகும்.


படையெடுத்து வெற்றி கொள்வது வேறு, இனத்தின் ஆட்சி எல்லை வேறு என்ற ஆழமான புரிதல் அக்காலத் தமிழ் வேந்தருக்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ் அந்தணர்களுக்கும் இருந்தமையை இது உணர்த்துகிறது. தமிழரின் வெளிநாட்டு வணிகத்திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப்பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.


வாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தேசிய இனத்தின் எல்லையை விரிவாக்காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திரமானது; தென் தமிழகம் கேரளமானது; மேற்கே கன்னடம் உருவானது.
பல்லவர் – களப்பிரர் ஆட்சியில் ஆரியம் வளர்ந்தது


சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர்களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.


கி.பி.2 முதல் கி.பி.9 வரையிலான 700 ஆண்டு காலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது. தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சி மொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதிகளிலும் வட மொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்கவில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்.


தமிழகத்தில் பிராமணர் குடியேற்றம்


பிராமணர் குடியேற்றங்கள் முதன் முதலாகப் பெருமளவில் நடந்தது பல்லவர் காலத்தில்தான். முதலில், தமிழகச் சிற்றூர்களில் பிற தமிழ்க் குலத்தவருடன் பிராமணரும் கலந்து வாழும்படியான குடியேற்றங்களே செய்யப்பட்டன. அதாவது, பிராமணர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் – சிறப்புத் தன்மைகளுடன், தொடக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென ஆய்ந்தால், தமிழரின் மரபுப் பெருமை விளங்கும். சங்ககாலம் வரை, ஆரிய பிராமணர்களுக்குத் தமிழரிடையே நன் மதிப்பு இல்லை. அவர்கள் இரண்டாம் தரமாகவே நடத்தப்பட்டனர். கலித்தொகையில் வரும் தலைவி, ’ நம் ஊரைவிட்டுத் துரத்தினாலும் போகாமல் சுற்றிவரும் பார்ப்பான்’ என்று ஒரு முதிய பிராமணனைக் கேலி செய்யும் பாடலை இதற்கான மிகச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். (குறிஞ்சிக்கலி – 29)


வைகை ஆற்றின் கரையில் பிராமணர்கள் வேள்வித் தீ வளர்க்கும்போது, ஆற்றில் குளித்து விளையாடிய இளம் பெண்கள் வேள்வித் தீயில் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக, பரிபாடல் காட்சிப்படுத்தியுள்ளது. (பரிபாடல் -11 / ‘ விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’ எனும் பாடல்)


மேற்கண்ட இரு சான்றுகளிலுமே, பெண்களே பிராமணர்களைக் கேலி செய்கின்றனர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.


அரசதிகார மட்டத்தில் மட்டுமே, பிராமணர்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதுவும், பொதுமைப்படுத்திக் கூற இயலாத அளவுக்கு மட்டுப்பட்டுதான் இருந்தது. சமூகத்தில், பிராமணர்களுக்கு வரவேற்பு இல்லை. அவர்களைப் பெரும்பகுதித் தமிழர்கள், தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவே கருதினர். இந்த நிலையை முதன் முதலில் மாற்றியவர்கள் திராவிடர்களான பல்லவர்களே ஆவர். முதலில், பிராமணர்களைத் தமிழர் வாழும் ஊர்களில் சமமாகக் குடியேற்றினர். பிறகு, பிரமதேய ஊர்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள்தான் முதன் முதலில் பிராமணர்களுக்கு எனத் தனி ஊர்களை உருவாக்கித் தந்தவர்கள் ஆவர்.


இந்த பிரமதேய நிலங்கள், பிராமணர்களுக்கென இலவசமாக, உரிமையாக வழங்கப்பட்டவை. இவற்றிற்கு அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இதேபோல, சமண மதத் தலைவர்களுக்கென, ’பள்ளிச் சந்தம்’ எனப்பட்ட இறையிலி நிலங்களையும் பலவர்களே உருவாக்கினர்.


ஆக, ஆரிய மதக் கருத்தியல்களை ஆதரித்து வளர்த்து, அவற்றுக்காக தமிழரது நிலங்களை தானமாகக் கொடுத்தவர்கள் பல்லவர்கள். சோழர்காலத்தில், பிராமணர்களுக்கு, பிரமதேய நிலங்கள் ’உரிமையாக்கப்படவில்லை’ என்பது இந்த இடத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சோழர்காலத்தில், பிரமதேய நிலங்கள், அரசனின், வேளாளரின் கட்டுப்பாட்டில் / மேற்பார்வையில் இருந்தன. அந்த நிலங்கள் தற்காலிக அனுபவிக்கும் உரிமையின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டனவே தவிர, உரிமை ஆக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோழர்கால பிரமதேய முறை, பிராமணர்களுக்கு நிலம் வழங்குவது என்பதல்லாமல், நிலத்தின் வருவாயில் பங்கு தருவது என்பதே ஆகும்.


பிற்காலச் சோழர் அரசமைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவர் செய்த சீரழிவே பிரமதேய முறை ஆகும். இம்முறையின் தீவினைகளைக் குறைத்தவர்கள்தான் சோழர்கள் என்பதை மேற்கண்ட ஒப்பீடு காட்டும். ஆனால், திராவிடக் கோட்பாட்டை ஆதரிப்போர், பிரமதேய நிலம் என்றால், அது சோழர் காலத்தில் தொடங்கப்பட்டது போல் எழுதுவார்கள், மேடைகளில் முழங்குவார்கள். பல்லவர், களப்பிரர் ஆட்சிகளின் பிராமண விசுவாசம் அவர்கள் கண்களுக்குத் தெரியாது. அதேபோல், சோழர்களுக்குப் பின் வந்த விஜயநகர, நாயக்க ஆட்சிகளின் பிராமண சேவையையும் அவர்கள் இதுவரை பேசியதே இல்லை.


உண்மையில், திராவிடரான பல்லவர்கள் ஏற்படுத்திய பிராமண ஆதிக்கத்தைப் பிற்காலச் சோழர்கள், தாம் அரசாண்ட குறுகிய காலத்தில் குறைத்துள்ளனர் என்பது நாம் உணர வேண்டிய உண்மை.


சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர் , பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.


தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப்படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத்தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப்படையாகப் புரியும்.


இது ஒரு எளிய உண்மையே. ஆனால், இந்த எளிய உண்மையைக்கூட தமிழர்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரிகளின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.


திராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப்பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆரியத்தின் பிள்ளையே திராவிடம்!
ஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை; கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.
பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலைநிறுத்தியபோதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.


சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பானவையாக உள்ளன. இந்தி மொழியைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென்னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம்தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத்தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.


பல்லவர்கள் தம்மை ‘பரத்வாஜ கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பிராமண குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பிராமணர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், தம்மை பிராமணர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளுமளவு ஆரியத்தில் கரைந்து போனவர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்றை முன் வைக்கிறேன்.


இவ்வினங்களின் ஆரியக் கூடாரத்தில் தமிழரையும் அடைத்து வைக்கும் சொல்தான் ‘திராவிடர்’ என்பது. பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.


தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண்களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறையான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.


20 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக்காட்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கிவிடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கையை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன் வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.


தமிழரிடையே தமிழ்த் தேசிய இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ‘ தமிழனுக்கு நாடு வேண்டும்’ என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, ’திராவிடம்தான் சரி’ என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.


தமிழரது இனப் போராட்ட வரலாற்றை,
1. ஆரியர் – தமிழர் போர்
2. தமிழர் – திராவிடர் போர்
என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :
• ஆரியர் கூட்டத்திற்கு அழித்தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.
• சிந்துவெளித் தமிழருக்கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.
• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்.


இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.


விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, ’திராவிடம்’ என்றாலேயே புரட்சிகரமான சொல் என்பது போல் மடைமாற்றம் செய்யப்பட்டது.


குருதித் தூய்மைவாதம்


இப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத்தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின் சிறப்பு.
பல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினார். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.


இவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.


விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம்மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரைவீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரை வீரன்.


அவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப்படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று. அருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரசகுலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மையை உருவாக்கிவிட்டனர். அருந்ததியர்கள் இன்று கடை நிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள்தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.


இதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே! இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச் சதியை முறித்துக் கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம்மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.


தமிழ், களப்பிரர்களை, பல்லவர்களை, நாயக்கர்களை, பிரிட்டானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள – இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.


தமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள்,
ஆரியமே தமிழரின் முதல் பகை
திராவிடம் ஆரியத்தின் கிளை!
-என்பவையாகும்.


இந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். திராவிட இனங்களான / ஆரிய பிராமணியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா. இந்திய தேசிய ஒடுக்குமுறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல; ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்களே, இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.


இவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமுகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை, இந்தியம் வளர்த்தெடுக்கிறது.


ஆகவே, திராவிடம் – இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


திராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். திராவிடர் என்றால் பிராமணர் வரமாட்டார் என்ற வாதம் முழுக்க முழுக்கப் பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப்படுத்தியதும் ஆகும்.

தகவல்களுக்கு உதவிய நூல்கள்:
சிந்து முதல் குமரி வரை – குருவிக்கரம்பை வேலு

பல்லவர் வரலாறு – முனைவர் மா. இராசமாணிக்கனார்

சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் –முனைவர் மே.து.இராசுகுமார்

Published in : http://kaattchi.blogspot.com/2010/05/blog-post_28.html--http://masenthamizhan.blogspot.co.uk/2010/07/blog-post_8945.html

தமிழன் தன் அடையாலத்தை இழந்தவரலாறு --


௨லகை ஆண்டதமிழ் தன் அடையாலத்தை இழந்து, சுருங்கி முடங்கிகொண்டவரலாறு புகட்டும் பாடம். தமிழா ௨ன்முகவாியை,௨ன்னுடைய அடையாலத்தை இழக்காதே இழந்தால் மீட்கமுடியாது
தமிழா தமிழோடு ,தமிழனாகவாழ்.தமிழ்வாழவைக்கும்

1-
1,300 ஆண்டுகளுக்கு முன்னா் அதாவது.9 ஆம் நு்றாண்டு வரை கண்ணடமொழிதமிழாகவே இருந்தது . கண்ணடா்கள் தமிழா்களாக வாழ்ந்தனா்.
2-
1000 ஆண்டுகலுக்கு முன்னா் தெலுங்குமொழி தமிழாகவே இருந்தது.தெழுங்கா்கள் தமிழா்கலாக வாழ்ந்தனா்.

3--

700 ஆண்டுகலு்கு முன்னா் மலையாலம் தமிழாகவே இருந்தனா்.
மலையாலிகள் தமிழா்கலாகவே இருந்தனா்.

எமது வருங்கால தமிழ் இனம் 60% தங்கள் முகவாியை இழந்து பிறமொழியுடன் கலந்துவிட்டனா்.வாழ்க பகுத்தறிவு

"தமிழ் – தமிழர் – தமிழ்நாடு" என்ற சிந்தனை எழுச்சியை
வெகு தந்திரமாக மடை மாற்றியது திராவிட இயக்கம்.

"திராவிடம் – திராவிடர் – திராவிட நாடு" எனும் புத்தம் புதிய முழக்கங்களை அது முன் வைத்தது.

இம் முழக்கம்,  தமிழ் இன வரலாற்றில் ஒரு போதும் நிலவாதது ஆகும். மேலும், திராவிடர் எனும் சொல்லால் தமிழர்கள் தம்மை, அதற்குமுன் ஒருபோதும் அழைத்துக் கொண்டதும் இல்லை.

வெல்க தமிழ்தேசயம்

Sunday, 19 March 2017

!!!-சங்க போற்றும் சைவமதகடவுள்!!!

திருக்குறளின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களில் `அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளோடு தொடங்கும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரம். தெய்வத்தை வாழ்த்திப் போற்றித்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறள் என்கிற ஒப்புவமை அற்ற புனித நூலைத் தொடங்குகிறார். தெய்வ நம்பிக்கை என்பது நம் தமிழின் மிகப் பழைய இலக்கியப் புதையலான சங்கப் பாடல்களிலேயே தென்படுகிறது. ஆனால், நம் பழைய இலக்கியங்களில் தெய்வத்தை மறுத்துப் பேசும் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. மிக மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் எந்தெந்த நிலப்பரப்புக்கு எந்தெந்த தெய்வம் என்று வகைப்படுத்தியுள்ளது.

`மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.’

எனத் திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களுக்கான நிலப்பகுதியைத் தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகுத்துப் பழந்தமிழர்கள் வழிபாடு நிகழ்த்தியிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழம்புலவர் தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றிப் புகழ்கிறார்.

`தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளி
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே’

இந்தப் பாடலில் முருகக் கடவுளின் தோற்றம், கொடி, ஆயுதம் முதலிய அனைத்தும் சொல்லப்படுகின்றன. சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள நக்கீரர் எழுதிய `திருமுருகாற்றுப் படை’யும் முருகன் புகழ்பேசும் இலக்கியமே. இன்னும் சங்க இலக்கியத்தில் தென்படும் பக்திக் கூறுகள் பல. சங்க காலத்தை ஒட்டிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகத் திருக்குறள் பரவலாகக் கருதப்படுகிறது. `நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால்கடுகங் கோவை பழமொழி நானூறு இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பதூஉங் கைந்நிலையுமாம் கீழ்க் கணக்கு’ என்கிற பழைய வெண்பா, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாக முப்பால் என்கிற திருக்குறளை வரிசைப்படுத்துகிறது.Thursday, 16 March 2017

ஆய கலைகள் அறுபத்து நான்கு இவை தான்

                                         ஆய கலைகள் அறுபத்து நான்கு இவை தான்--துமி
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்
துமியின் படைப்பு

முருகன் அளித்த தமிழ்

                                                முருகன் அளித்த தமிழ்-துமி
வடமொழி வேதகுருவான பிரமணுக்கே ஓம் என்ற தமிழ் மந்திரத்தை ஓதிய தமிழ் குமரன்

முருகன் அளித்த தமிழால் அருணகரிநாதர் அளித்த தமிழைப்பாருங்கள்..
கவியும் பொருளும் எங்கும் இல்லாச் சிறப்பு, உலகில் தோன்றி இறந்த மொழிகளும் இன்னும் உள்ள மொழிகளும் வியக்கும் விந்தை...
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"
திதத்தத் தத்தித்த –
"திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

Monday, 13 March 2017

திருக்குறளில் சைவ சித்தாந்தம்-PART-1


                                                                                   PART-1
👉🏿 திருக்குறளில் சைவ சித்தாந்தம்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு"


👉🏿---மதவெறி கிறிஸ்தவத்துக்கு பதிலடி ---    👈🏿              
              👉🏿திருக்குறளில் சைவ சித்தாந்தம்👈🏿
1-👉🏿குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் 'ஆதி'
  எனக் குறிப்பிடுகிறார்.
2-👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.
3-👉🏿ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார்."அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த"
4-👉🏿திருமந்திரம்--
                     ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான்,
ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
👉🏿திருக்குறல் சைவதமிழனின் வாழ்வியல்நெறி👈🏿
   👉🏿 தமிழ் சங்கத்தமிழனுடையது 👈🏿


இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த வீடு.

மனைவி=கணவன். வசதி வாய்ப்புகள் ஆகியவற்றில் மனநிறைவு கொள்வதில்லை. ஏதோ ஒன்றினை மனிதன் தேடிக் கொண்டே இருக்கிறான். முடிவில் அவைகளை அடைந்தானா எனில் அது கேள்விக்குறியே. இந்நிலையில் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் தடைகள், அவற்றைத் தாண்ட அவன்படும் துன்பங்கள் எண்ணிலடங்கா.

உலகில் வாழும் மக்களுக்கு வாழும் வகையினை உணர்த்த, வழிகாட்ட உதவும் ஒரே நூல் திருக்குறள் எனில் மிகையாகா. உலக உயிர்களை உய்வு பெற வைக்கும் சமயம் சைவமே என்பதும் சான்றோர் முடிவாம். எனவே “திருக்குறளில் சைவ சித்தாந்தம்” என்ற தலைப்பில், சைவ சமயத்தின் மேன்மை, சித்தாந்தம் என்பதன் பொருள், திருக்குறளில், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ள பாங்கு ஆகியவைகளைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமெனலாம்.

சைவசித்தாந்தின் தொன்மை: “சைவம் வரலாற்றுக்கு முற்பட்ட சமயம். அஃது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வந்திருக்கிறது” என்று ஜி.யு.போப் அவர்கள் குறிப்பிடுகிறார். கிறிஸ்த்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே சிவ வழிபாடு இருந்திருக்கிறது என்று சர்.ஜான்மார்ஷல் அவர்கள் கூறுகிறார். மேலும் யூதமதம் கி.மு. 1500-1200,ஷிண்டோமதம் கி.மு. 660, சமணம் கி.மு. 599, பௌத்தம் கி.மு. 560, கான்பூஷியஸ்கி.மு. 551, கிறித்துவம் கி.பி. 4, இசுலாமியம் கி.பி. 570, சீக்கியம் கி.பி. 1469 (1977– ஜீன் மாத திருக்கோயில் இதழ்) தோற்றுவிக்கப்பட்டது என்ற கூறுபவர்கள் சைவசமயம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்று வரையறுக்க முடியாத தொன்மையான மதம் என்கின்றனர்.

சங்ககாலசைவம் : கி.மு. 2500 – கி.; பி. 100 வரை, முச்சங்கம் இருந்தமையை வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்வர். இதுபோலவே சங்க நூல்களிலும் சிவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக.

“ஈர்ஞ் சடை அந்தணன்” (கலி – 38)

“முக்கண்ணான்” (கலி – 2)

“கறை மிடற்று அண்ணல”; – (புறம ; 55.)

என்ற அடிகளைச் சுட்டலாம். மேலும் பரிபாடல் 8, புறம் 166, ஐங்குறுநூறு கடவுள்

வாழ்த்துப்பாடல், கலி 81, புறம் - 198, அகம் - 181 போன்ற பாடல்களிலும் சிவனைப்

பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிவபெருமான் செய்யும் ஐந்தொழில்களைச்

சைவசித்தாத்தம் குறிப்பிடுகிறது.

இதனையே,

“எல்லா உயிர்க்கும் ஏமம்” புறம். (கடவுள் வாழ்த்து)

“கொடுகொட்டி ஆடும் கால”; கலி. (கடவுள் வாழ்த்து)

என்று குறிக்கிறது. மேலும் சிவபெருமானின் பண்புகளையும் சுட்டிக் செல்கிறது

தொல்காப்பியம்.

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்

கண்டது முதல்நூல் ஆகும்” (பொருள். 640)

சங்கமருவிய கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் (5-169) (11-128) (40-41)(23-91) மணிமேகலையில் (1-54) சிவபெருமானின் (சிவாயநாம) என்ற அஞ்செலுத்துமந்திரம் பற்றியும், சிவ வழிபாட்டினைப் பற்றியும் சுட்டிச் செல்வதைக் காணலாம். கி.பி.600 முதல் கி.பி. 1200 வரையுள்ள காலம் சைவ சமயத்தின் பொற்காலம் எனலாம்.
அவை பற்றி இயம்பின் விரியும்