Saturday, 25 February 2017

திராவிடத்திற்கு பகுத்தறிவு இல்லையா????

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கற்களை எறியும் திராவிடபகுத்தறிவுகள்.
மத்தை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையினொழுங்கமைப்பை உணர்ந்து, ,அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள கடவுளைஏற்றுக்கொள்பவனே, உண்மையான பகுத்தறிவாதி.
உங்கள் பகுத்தறியும் சிந்தனா சக்திக்கு இது புலப்படவில்லையா?
கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் -
திராவிடபகுத்தறிவுகாட்டுமிராண்டியா?
நினைவு நாளின்போது மறைந்த தலைவர்களின் சமாதிக்கு மாலைகள் போடுவது ஏன்? சமாதிக்குஎன்ன திராவிடபகுத்தறிவுஅறிவா இருக்கிறது?
வழிபடப்படும் விக்ரகங்கள் வெறும் கல் தானே என்பவர்களை ஒன்று கேட்கிறேன்.
ஆத்திரத்தை அடக்கி அறிவுக்கு வேலை கொடுத்து ஆறஅமர பதில் அளியுங்கள்.உங்கள் தாய்தந்தையரின் புகைப்படத்தை அது வெறும் பேப்பர்தானே என்று சொல்லிக் காலுக்கடியில் போட்டு மிதிக்கச் சொன்னால் செய்வீர்களா?
நினைவு நாளின்போது மறைந்த தலைவர்களின் சமாதியை காலுக்கடியில் போட்டு மிதிக்கச்சொன்னால் செய்வீர்களா?
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கற்களை எறியும் திராவிடபகுத்தறிவுகள்
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கற்களை எறியலாமா?
காற்றைக் கண்ணால் கண்டவன் யார்?
 கனவைக் கையிலே பிடித்தவன் யார்? 
அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார்? 
அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா? 
உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும்.
பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும். 
நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும்.
எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும் திராவிடபகுத்தறிவு‘நான் ஒரு நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்வது 
சமூக அந்தஸ்து ஆகிவிட்டது.

தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு பகுத்தறி திராவிடகங்கள் என்னசெய்தன?

மாற்றான் புகழ்பேசும் அடிமைகளுக்கான பதிவு.
ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தமிழன் பாதுகாப்பாகவும் , சுதந்திரமாகவும் வாழ என்ன செய்தாா் ? தமிழகத்தின் 79000 கிலோமீற்றா் நிலப்பரப்பை அன்டை மாநிலங்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தவா். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு ,இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். 
பகுத்தறிவு கூட்டங்கள் சொல்லுங்கள் பார்ப்போம் ஈரோட்டில் பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கர் தமிழா் தானா?

No comments:

Post a Comment