Wednesday, 25 January 2017

மாயன் கூட்டம் தமிழர்கள் /TAMIL MAYA CIVILIZATION PART-1

PART-1

!!!தமிழ் இன மக்களாகிய மாயன்/சுமோியர்/சிந்துவெளி/தமிழ்ஈழ  மக்களை ஈவு இரக்கமின்றி 

படுகொலைசெய்தனர் அத்துடன் தமிழா்வரலாற்றையும் அழி்தனா்.!!!

ஆதாரம் -சிலப்பதிகாரம்

மாயன் கூட்டம் தமிழர்கள்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின;

துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு


மயன் விதித்துக் கொடுத்த மரபின


“மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” 


[சிலப்பதிகாரம்]


மாயன் கூட்டம் தமிழர்கள்கள்ளரும் நாகரும் மாயன் வரலாறு

மாயன்
யுக்தானின் ஸ்பானிய ஆக்கிரமிப் மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சி பெற்ற ஒரே எழுத்து மொழியைக் 
கொண்டிருந்தது  இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. 

கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது.
மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம்
மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன்
இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியது.

ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார
பேரழிவிற்கு  காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற
நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.

மாயன் கணிதம்.
மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம்  பயன்பாட்டு முறையாகும்{[fact}}.

மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம்
பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள்.

இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் கட்டிடக் கலை அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச்
சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது.

நவீன வரலாறு , தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன்
கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும்
கட்டிடங்களும்  பெரும் பங்காற்றியிருக்கின்றன.

மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத
சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.
மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின்
கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.

மாயன் வானியல் மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில்
வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன் , சந்திரன், புதன் , சுக்கிரன்போன்றவற்றின்
சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர்.

சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல்
நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.

ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன. மாயன் நம்பிக்கைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும்
கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்/நூல்கள் ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் படஎழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில்
எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள்
பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல
மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள்
தாம்.

வீழ்ச்சி
இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு
இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது,
அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை
அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய
குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.
கள்ளரும் நாகரும் 

தமிழ்மாமாயா இன மக்கள்,தமிழ்மா நாகர்கள் !!!

மாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ், குவாடிமாலா,  பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மாயா இன மக்கள்? இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர்? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் எல்லோரும் ஏற்கக்கூடிய பதில்கள் கிடைக்கவில்லை. மாயா நாகரீகம் மர்மங்களும் புதிர்களும் நிறைந்ததாகவே நீடிக்கிறது. ஆனால் இந்துக்களின் கலியுகம் துவங்கும் ஆண்டை ஒட்டியே இவர்கள் ஆண்டும் துவங்குவதால் ஓரளவுக்கு புதிரை விடுவிக்க முடிகிறது. இவர்களுடைய தடயங்களும் சின்னங்களும் கி.மு.2600 முதல் கி.பி.1500 வரை கிடைக்கின்றன. ஆயினும் இவர்கள் காலக் கணக்கீடு கி.மு. ஆகஸ்ட் 11, 3114-ஆம் ஆண்டு துவங்குகிறது. நமது கலியுகம் கி.மு 3102 ல் துவங்குகிறது. உலகில் வேறு யாரும் இப்படி நெருக்கமாக ஆண்டுத் துவக்கத்தைச் சொல்லவில்லை!

அற்புதமான துல்லியமான காலண்டர்கள், வான சாத்திரக் கணக்குகள், பிரம்மாண்டமான கோவில்கள், தங்கம், பச்சைக் கல் நகைகள், புத்தகங்கள் ஆகியன இவர்களின் சிறப்பு அம்சங்கள். 1500ம் ஆண்டுகளில் இவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை அடித்து இவர்களை கிறிஸ்தவர்களாக்க முயன்ற ஸ்பெயின் தேசத்து ஆட்கள், மாயா இன மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். தங்கம், ஜேட் எனப்படும் பச்சைக் கல் நகைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். அருமையான மாயா நூலகங்களைத் தீகிரையாக்கினர். நல்ல வேளையாக மாயா இனக் கோவில்கள் மிகப் பெரிய கோவில்கள் ஆதலால் அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்
மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும்  பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். பழங்காலத்தில் மக்கள் தங்களை இனம் காண கரடி (ஜாம்பவான்), கழுகு (ஜடாயு), குரங்கு (ஹனுமான்), பாம்பு (நாகர்) சின்னங்களை அணிவது வழக்கம். காலப் போக்கில் புராணக் கதை சொல்லுவோர் சுவை ஊட்டுவதற்காக இப்படி மிருகங்களின் பெயர்களை உண்மை என்று சொல்லிவிட்டார்கள்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

மொகலாய சாம்ராஜ்யத்தில் அவுரங்கசீப்பினால் சிறைப் பிடிக்கப்பட்ட மாமன்னன் சிவாஜியும் இப்படி பழக்ககூடை மூலம்தான் சிறையிலிருந்து தப்பித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றதற்காக டில்லியில் இரவோடிரவாக ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்றது போல. இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு.
அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அகத்தியர் வழியில் பிறந்த பிற்கால அகத்திய ரிஷி கம்போடியாவில் உள்ள யசோவதி என்ற நாக மங்கையை மணந்தது போல. பீலிவளை என்னும் நாக இன அழகியை சோழன் கிள்ளி வளவன் மணந்தது போல.

அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

இதைத் தொடர்ந்து மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி! ஜனமேஜயர் ஆட்சிக்கலத்தில் இது நடந்தது.

இந்துக்கள் கலியுகத்துக்கு முந்தைய காலம் பற்றித் தெளிவாகக் கூறுகின்றனர். ஆனால் மாயாக்கள் இதற்கு முன் எங்கேயிருந்தனர் என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.

அதிசய நாகா ஆடைகள்.
சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மஹாபாரதத்திலும் நாகர்கள் தயாரிக்கும் அதிசய உடுப்புகள் பற்றியும் இரண்டு குறிப்புகள் கிடைக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நீல நாகன் என்பவன் கொடுத்த அற்புதமான ஒரு ஆடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்குச் சூட்டியதாக புலவர்கள் (சிறுபாஅண். 96-99) பாடுகின்றனர். இதே போல நிஷத நாட்டு மன்னனான நளனுக்கு கார்க்கோடகன் என்ற நாகர் இனத் தலைவர் ஒரு ஆடையைக் கொடுத்து அவன் மனைவிக்கு அடையாளம் தெரிய அதைப் போட்டுக் கொண்டால் போதும் என்கிறான். அதாவது நளனுக்கும் அவன் மனைவி தமயந்திக்கும் அந்த ஆடை பாற்றி முன்னரே தெரியும்.

நாகர்கள் பாம்புத்தோல் போன்ற மெல்லிய ஆடைகளை அணியும் நெசவாளர்கள். சங்க இலக்கியம் பல இடங்களில் பாம்புத் தோல் போன்ற மெல்லிய ஆடைகளைப் பற்றி (பொருநர். வரிகள்82/83, புறம்383) பேசுகிறது.
கள்ளரும் நாகரும் 
Picture
கள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்.
கலியுக துவக்கம் கி.மு 3102, மாயா ஆண்டு துவக்கம் கி.மு 3114.மாயா மக்களும்
இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பர்.
பல்லவ, தென் கிழக்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களை தென், மத்திய அமெரிக்க மாயா கட்டிடங்களிலும் காணலாம்.
நாகர்கள் தான் மாயாக்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது மாயா கட்டிடங்களில் காணப்படும் பாம்பு உருவங்கள்.
மயன் என்பவன் பெரிய கட்டிடக் கலை நிபுணன். இவன் பெயரில்தான் மாயா நாகரீகமே இருக்கிறது. பெயருக்கேற்றார் போல எங்கு நோகினும் கட்டிடம்தான்.

6. மதுரை நாயகர் கட்டிய மீனாட்சி கோவில் போன்ற கோவில்களிலும் வேதத்திலும் ஆயிரம் கால் மண்டபம் பற்றிக் கேள்விப் படுகிறோம். மெக்சிகோவில் யோகஸ்தான் தீபகற்பத்தில் கிஷன் இட்சா என்னும் இடத்தில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது.

7. மாயாக்களும் இந்தியர்களும் ஒரே ஆடு புலி ஆட்டத்தை விளையாடுகின்றனர். இப்படி ஒரே விளையாட்டை இரண்டு இன மக்கள் தனித் தனியே கண்டுபிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம்!

8. மாயாகள் கட்டமரத்தில் பயணம் செய்திருக்கலாம். இன்றும் மெக்சிகோவில் தமிழ் சொல்லான கட்டமரம் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கலத்தில் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகவே பயணம் செய்வார்கள்.

9. நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் போருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

10. நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

11. சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன.

12. சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேலான நாகர்கள் பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.

13. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

14. இந்துமத நூலகள் கிருஷ்ணனை நாகர்களின் எதிரியாகவும் இந்திரனை நாகர்களின் நண்பனாகவும் சித்தரிக்கின்றன.

15. நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

16. கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

17. அர்ஜுனனின் பெயரான பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

18. ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.

19. நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

20. பத்மபுராணம் மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் நன்றாக வருணிக்கிறது. அதள,பாதாள, ரசாதள என்பது தானவர்கள் நாகர்கள் வசிக்கும் இடம் என்றும் சொல்லுகிறது.மாயா பெயர்களில் வரும் ஏ டி எல் என்ற எழுத்துக்கள் அதள, தள என்ற பின் ஒடு சொல்லாக இருக்கலாம்.

21. தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர். நாகர்களை மட்டப்படுத்தும் வகையில் கிருஷ்ணபக்தர்கள் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளனர். யார் பாம்புக் கட்டத்துக்கு வந்தாலும் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.

22. நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

23. பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

24. அமரிக்காவில் ஸ்வாமி த்ரிபுராரி எழுதிய நூலில், மாயாக்களும் இந்தியர்களும் வெண்கொற்றக் குடையை அரசர்களுக்குப் பயன்படுத்துவதும் ,ஒரே ஆட்டத்தை விளையாடுவதும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு வர்ணத்தை ஒதுக்கியதும், ஒரே வான சாத்திரக் கதைகளைக் கூறுவதும் தன்னிச்சையாக ஏற்படக் கூடிய ஒற்றுமைகள் இல்லை. உலகில் இப்படி எங்காவது கண்டது உண்டா? என்று கேட்கிறார். புத்த மதத்தினர், சைவர்கள், மாயாக்கள் ஆகிய மூவரும் நான்கு திசைகளுக்கு நான்கு வர்ணங்களை ஒதுக்கியிருக்கின்றனர்.

25. மாயாக்கள் தொடர்பான பெயர்களில் பல சம்ஸ்கிருத சொற்கள்: க்வாடிமாலா நாடு= கேதுமால த்வீபம் அல்லது கவ்தம ஆலய, மிட்லா=மிதிலை, அஸ்டெக் நாகரீகம்= ஆஸ்தீக ரிஷி, மாயா= தேவலோக சிற்பி மயன்,டிகல் நகரம்=த்ரி கால/ சிவன்,தெவாதிஹுவசன்= தேவ தக்ஷன், ஒரிநாகோ= ஓரி நாகன், மச்சுபிச்சு= மச்ச புச்சம்/ மீன் வால். இதே பெயரில் இமயமலையிலும் பெரு நாட்டிலும் இடங்கள் உள்ளன. யூகடன் தீபகற்பம்=யோகஸ்தானம், துலா, யகடக்ளி=யக்ஷ தளி, யக்ச்சிலன்= யக்ஷ சீலன்.

26. நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் அதலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும்.

27. மாயாக்களின் சிற்பங்களில் தாமரை, ஸ்வஸ்திகா, யானை முதலியன இருக்கும். இவைகளில் எதுவுமே அந்த இடத்தில் கிடையா.

28. மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது கருட சத்ரு என்பதன் திரிபாக இருக்கலாம்.

29. மாயாக்களின் ஒரு ராஜாவின் பெயர் தீயில் பிறந்தவன் (கி.பி 378). மகாபாரத கால திரவுபதி, ராஜஸ்தானிய சௌஹான் ஜாதியினர், சேர மன்னர்கள், வேளிர்கள் (கபிலர் புறநானூற்றில் தடவினில் தோன்றியவனே என்று வேளிரைப் பாடுகிறார்) ஆகியோர் தங்களை யாக குண்டத்தில் பிறந்தவர்கள் என்பர். அகத்தியர், வசிட்டர் போன்றோர் தங்களை குடத்தில் (கும்ப முனி) பிறந்தவர்கள் என்பர். இன்னொரு மாய மன்னரின் பெயர் கான் மாக்ஸ் (கி.பி700). இதன் பொருள் மகா நாகன். கான் என்றால் மாயா மொழியில் நாகம்/பாம்பு என்று பொருள். கான் என்பதைத் திருப்பிப் படித்தால் நாக என்று வரும். இதை மொழியியல் ஆய்வாளர்கள் மிர்ரர் இமேஜ் (கண்ணாடியில் பார்ப்பதைப் போல வட இடமாக)  என்பர். மக்ஸ் என்பது சம்ஸ்கிருத மஹா என்பதன் திரிபு.

30. மாயாக்களின் முக்கிய நகரங்களில் ஒன்று பளிங்கு. அங்கே பளிங்கு போன்ற கற்கோவில்கள் இருக்கின்றன. பளிங்கு என்பது கண்ணாடி, படிகம் என்ற பொருளில் தமிழில் புழங்கும் சொல். தமிழ் நாகர்களும் தென் அமெரிக்க சென்றனர் என்பது கட்டமரம், பல்லவ கிரந்தம், மருதன் இள நாகன் போன்ற சொற்களிலிருந்து புலனாகிறது. மாயாக்களின் எழுத்து பல்லவ கிரந்தம் போலவே சுழிவுகளுடன் இருக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பேஎசும் எல்லா மொழிகளுக்கும் பல்லவ கிரந்தமே மூல எழுத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

31. மாயாக்களுக்குப் பின்னர், அஸ்டெக், இன்கா இன மக்களும் தென் அமெரிக்க ,மத்திய அமெரிக்க பகுதிகளை ஆண்டனர். ஒலெமக் என்ற நாகரீகம் இதற்கு முன் இருந்தது. மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அஸ்டெக் காலண்டர் இருக்கிறது. அதில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இவைகளை இந்துக்கள் கால சர்ப்பம் என்று அழைப்பர். காளி என்ற பெயரில் பிரமிடும் கோவிலும் இருக்கின்றன.

32. மகன், மகள்களை தாத்தா, பாட்டி பெயர் கொண்டே (பெயரன்) அழைக்கின்றனர். பூ, பழம், பாம்பு,கருடன்- இவைகளைப் பெயராகச் சூட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி தாமரை, மல்லிகை மற்றும் பூ, பழம் பெயர்களையே அதிகம் சூட்டுகின்றனர். இந்துக்கள் அனுஷ்டிக்கும் நாமகரணம், புன்யாஹ வசனம், குருகுல வாசம் ஆகியன மாயாக்களிடமும் இருந்தன.

33. இந்தியாவில் படை வீரர்கள் நவ கண்டம் முதலியவற்றின் மூலம் உயிர்த் தியாகம் செய்தனர். கபிலர், குமாரில பட்டர் போன்றோர் தீயில் புகுந்து உயிர்வீட்டனர். மகாபரதத்திலும் அரவான் களபலி கொடுக்கப்பட்டான். இதை மாயாக்களும் செய்தனர்.

34. இந்திய மன்னர்கள் சிம்மாசனத்தைப் பயன்படுத்தினர். மாயாக்கள் சிங்கம் இல்லாததால் ஜாகுவார் புலி ஆசனத்தைப் பயன்படுத்தினர். சிங்கத்தைக் குறிக்கும் சிங் என்ற சொல்லும், கேசரி (சீசர்) என்ற சொல்லும் பல மொழிகளில் உள்ளன.

35.மாயாக்களும் உயரமான கோபுர வடிவக் கோவிலகளைக் கட்டினர். எகிப்தில் பிரமிடுகள் இப்படி இருந்தபோதிலும் அவைகள் சவ அடக்கம் செய்யப்பட்ட இடங்கள். மாயாக்களும் இந்திய ராஜாக்களைப் போலவே நகைகள் அணிந்தனர். எகிப்தியர் போல அல்ல. கிருஷ்ணர் மயிற்பீலி அணிந்தது போல மாயாக்களும் பறவை இறகை அணிந்தனர்.

36. வேத கால காலண்டரில் நாலைந்து வருடத்துக்கு ஒரு முறை மல மாதம் என்று விலக்கப்பட வேண்டிய தீட்டு மாதம் வரும். மாயாக்கள் ஒவ்வொரு மாதத்திலுமே 5 நாட்களை வேண்டாத நாட்களாக கருதினர்.

37. இந்துக்களைப் போலவே நிலவில் முயல் இருப்பதாகக் கருதினர். வேறு பண்பாடுகளில் இதைக் கிழவி, மன் என்றெல்லாம் சொல்லுவார்கள். ராகு கேது பாம்புகள் நிலவை விழுங்குவதே கிரகணம் என்று இந்துக்கள் சொல்வதைப்போல அவர்களும் நம்பினர்.

38. டிகால் என்னும் ஊரிலுள்ள கோவில் மதுரை மீனாட்சி கோவில் போல இருப்பதாக ஒப்பிடுவர். ஊர்ர்ப் பெயர் கூட த்ரிகால என்று சிவனின் பெயர் போல இருக்கிறது.

39. மாயாக்காளும் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டனர். ஆனால் கோதுமைக்குப் பதிலாக தென் அமெரிக்காவில் அதிகம் விளையும் சோள மாவில் அதைச் செய்தனர். அதன் பெயர் டோர்டியா.

40. சூரிய வழிபாடு இந்த நாகரீகத்திலும் உண்டு. அது 1500ஆம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக சூரியனை வழிபட்ட இன்கா இன மக்களின் பெயர் இனன் (சூரியன்) என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது என்பர்.

41.மாயா நாகரீகத்தில் உள்ள சில அம்சங்கள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலில் அது இந்து நாகரீகம் என்று வந்துவிடும். அ) மாயாக்களுக்கு இந்துக்களுக்குத் தெரிந்த பூஜ்யம் என்பதை யார் சொல்லிக் கொடுத்தனர்? ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொடுத்தனர்? இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர்? ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர்? உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர்? ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார்? எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன்? ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார்? ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர்? ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி? இவை எல்லாம் ஒரு தொடர்பும் இல்லாமல் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கக் கூடியது அல்ல.

42.மாயாக்களும்  இந்தியர் போல பச்சைக் கற்களையும் முத்துக்களையும் நகை செய்யப் பயன்படுத்தினர்.

43. நம்மைப் போலவே சகுனங்களில் நம்பிக்கை வைத்தனர்.

44. இந்துப் புராணக் கதை போலவே சில கடவுள் கதைகள் உள்ளன.

45. இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது போல மாயாக்களும் ஆப்ரிக்க மக்களும் கரீபியன் தீவு மக்களும் செய்பா எனப்படும் இலவம் பஞ்சு மரத்தை ( சால்மலி) வழிபட்டனர். இந்து புராணங்களில் சால்மலித்வீபம் என்று ஒரு கண்டம் அழைக்கப்படும்.

46. இந்துக்கள் போல கால்களை மடித்து உட்காருகின்றனர். மன்னர்கள் பல்லக்குகளில் போகின்றனர். ஆனால் உலகில் பல நாகரீகங்களில் காணப்படும் சக்கரங்களைப் பயன்படுத்தாதது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.

47.மாயாக்கள் இடையே ஜாதி முறை இருந்தது. மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளை சோழ பாண்டியர் போலவே கல்வெட்டுகளில் பதித்தனர்.

48. கற்பக விருட்சம், சொர்கம், அம்ருதம் ஆகியவற்றை நம்பினர்.

49. பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர்.

50. மத்திய அமெரிக்காவிலுள்ள முக்கிய தெய்வங்களில் ஒன்று வீரகொச்சா. பல்லவ மான்னர்களின் மூதாதையர் பெயரில் வீரகுர்ச்சா என்ற பெயருள்ளது.

51. பாம்புகளின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் காணப்படுதால் இவர்கள் நாகர்களாக இருக்கக்கூடும்.

52. 1994 ல் மெக்ஸிகோவில் “சோழன் நாகா” புரட்சி வெடித்தது. சோழன் நாகர் தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறனர்.

53. பகல் என்ற மன்னர் 683-ல் ஆண்டார். அவர் சூரிய திலக என்று அழைக்கப்படுவார். நாமும் ராமர் முதாலான அரசர்களை சூரிய குல திலக அல்லது சூர்ய வம்ச ரத்ன என்றெல்லாம் புகழ்கிறோம்.

54.அஸ்டெக்குகளும் மாயாக்களும் கழுகு வாயில் பாம்பு இருக்கும் சின்னத்தைப் பயன்படுத்தினர். சேர சோழ, பாண்டியர் போல இவர்களுக்குள்ளும் பிரிவுகள் இருந்ததைக் காணமுடிகிறது

55.இந்துக்கள் தட்சசீலம், நாளந்தா பல்கழைக் கழகங்களில் புத்தகங்களை சேகரித்து வந்தது போல மாயாக்களும் அழகான புத்தகங்கள் வைத்திருந்தனர். ஸ்பானியர்கள் அவைகள் எல்லாவற்றையும் குவித்து தீவைத்து எரித்து, ஒன்று கூட விடாமல் எரித்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 1562 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்பவர் எழுதிய கடிதத்தில் எல்லா புத்தகங்களையும் எரித்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 1546ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்களைக் கொன்றுகுவித்ததையும் எழுதி வைத்துள்ளனர்.

56. இந்து மத காபாலிகர்கள் போல சில சடங்குகளில் கறுப்பு உடை தரித்தனர் மாயாக்கள்.

57. குளத்தில் காணிக்கைகளைப் போடும் வழக்கமும் யோகாசன நிலையில் அமரும் வழக்கமும் இவர்களிடையேயும் இருந்தது.

58. குப்தர் காலம் போல குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.

59. தமிழ் செப்புச் சாசனங்களில் மன்னர்கள் நான்கு கடல்களின் நீரையோ அல்லது இரு பக்கமுள்ள கடல்களின் நீரையோ ஒரே பகலில் நீராடியதைப் பெருமையுடன் கூறுவர் ( நாற்கடல் நீரை ஒரு பகல் ஆடி). தங்களுடைய ஆதிக்கம் நாடுமுழுதும் இருந்தது என்பதை இது குறிக்கும். இதற்காக ரிலே ரேஸ்/ தொடர் ஓட்டம் ஓடும் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர். மாயாக்களும் இப்படி தொடர் ஓட்ட ஆட்கள் மூலம் பல செயல்களைச் செய்தனர். இதுவும் இந்திய வழக்கம்.

60. ரோமானியர்கள் போல இளம் சிவப்பு எனப்படும் பிங்க் கலர் மாயா உலகிலும் சிறப்பு வாய்ந்தது. இதை ஒரு வகை கடல் சிப்பியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்தது இந்தியர்களே.

61. “சாக்” எனப்படும் மழைத் தெய்வத்தை மாயர்கள் வழிபட்டனர். இது இந்திரன் என்றும் அவனுக்கு சக்ரன் என்று வடமொழியில் உள்ள பெயர் சாக் ஆனது என்றும் ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுவர்.

62. தமிழ் நாட்டில் காணப்படும் அம்மியும் குழவியும் மாயா வீடுகளிலும் இருந்தன.

63. திரிலோக நாத் என்ற தெய்வத்தை அவர்கள் வழிபட்டதையும் அந்தப் பெயர் ஸ்பானியர்களால் உருத்தெரியாமல் மாற்றப்பட்டு எழுதப்பட்டதையும் மாயாக்களுடைய மந்திரங்கள் வேத மந்திரங்கள் போல இருப்பதையும் தாமரை, ஸ்வஸ்திகா சின்னம், யானை முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியதையும் 75 ஆண்டுகளுக்கு முன்னரே “இந்து அமெரிக்கா” என்ற புத்தகத்தில் பிட்சு சமன்லால் எழுதிவிட்டார்.

64. மாயா கட்டிட வரைபடங்கள், கோவில் அமைப்புகள் பற்றி இப்பொழுது அமெரிக்கர்கள் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவைகளை நமது வாஸ்து சாத்திரக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளிப்படும்

65. மாயாக்கள் காதில் போட்டிருக்கும் வளையங்கள் குண்டலங்கள் நம் நகைகளைப் போலவே இருக்கும். மாயா மன்னர்களும் இந்திய மன்னர்களைப் போலவே அந்தப் புறத்தில் காமக்கிழத்திகளை வத்திருந்தனர். அவர்களை பள்ளா என்று அழைத்தனர். இந்தியில் பள்ளு என்பது புடவையின் மேல் தலைப்பு.

66. போனம்பாக் என்னும் இடத்தில் கிடைத்த படங்களில் நம் ஊர்க் கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் இசைக் கலைஞர்கள் ஊர்வலம் போவது போல படங்கள் உள்ளன. குறவஞ்சி, கதகளி நடனம் போன்ற நாட்டியப் படங்களும் இருக்கின்றன.

67. இந்துக்கள் இறந்தோர் வாயில் வாக்கரிசி போடுவதைப் போல மாயர்கள் மக்காச் சோளத்தையும் ஜேட் எனப்படும் பச்சைக் கற்களையும் போட்டனர். இறந்த பின் மனிதன் உள்ள நிலை குறித்து இருவரும் ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டும்.

68. மற்றொரு புதிரிலும் அவர்கள் இந்தியரைப் போலவே இருக்கின்றனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற நூலில் கலியுகத்துக்கும் அவர் கூறும் கணக்கிற்கும் 600 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இதே போல மாயாக்கள் கி.மு.3114 என்று காலண்டரைத் துவக்கினாலும் அவருடைய வரலாற்றுத் தடயங்கள் 2600 முதலே கிடைக்கின்றன. ஆக, இந்தியாவைப் போலவே அங்கும் இரு வகை ஆண்டுக் கணக்கு இருந்தததோ என்று எண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் புதிரை எதிர்கால ஆய்வுகள் தீர்க்கக்கூடும் !!

69. நாகர்கள் வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்து முதல் இலங்கையின் தென்கோடி வரை இருக்கிறார்கள். குப்தர்களின் கல்வெட்டுக்களிலும், இலங்கைத் தமிழ் கல்வெட்டுகளிலும் தமிழ் வடமொழி இலக்கியங்களிலும் ,மஹாவம்சத்திலும் குறிப்பிடப்படுவதால் இவர்கள் அமெரிக்கா வரை சென்று குடியேறினார்கள் என்று நம்புவதில் தவறில்லை.
திரிபுரம் முதல் தமிழகம் வரை பேசப்பட்ட மயன்.
Picture
ரோமக தேச மயன்.

திரிபுர மயனுக்கு அடுத்து மயனது பெயர், ரோமக தேசத்தில் வருகிறது. மயன் என்னும் மிலேச்சன் ரோமக நாட்டைச் சேர்ந்தவன் என்றும், அவனுக்கு சூரியன் அருளிய வான சாஸ்திரமே சூரிய சித்தாந்தம் என்றும் அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. சமஸ்க்ருத்த்தில் இருக்கும் அந்த நூல், வராஹமிஹிரர் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திய நூலாகும். அந்த நூலில் ரோமக தேசத்தின் இருப்பிடம் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடம் இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் இருக்கிறது. அதாவது, லங்கையில் நண்பகல் வரும் பொழுது, ரோமக தேசத்தில் பொழுது விடிந்து கொண்டிருக்கும். இந்த இடம் இன்று அட்லாண்டிக் கடலுக்குள் இருக்கிறது. 46 ஆவது கட்டுரையில் நாம் காட்டிய அட்லாண்டிஸ் நகரமும் இதே இடத்தில் அமைந்திருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

(பார்க்க பகுதி 46) அட்லாண்டிஸ் நகரம், கட்டிடக் கலைக்கும், நன்கு அமைந்த நகர அமைப்புக்கும் பெயர் போனது. அந்த இடத்தில் ரோமக தேசமும் அமைந்திருக்கவே, ரோமக தேசம் என்பதே அட்லாண்டிஸ் என்பதன் பண்டைய பெயராக இருக்கக்கூடும். அங்கு மயன் இருந்தான் என்று சூரிய சித்தாந்தம் சொல்வதால், அந்த நகரத்தில் உயரிய கட்டடங்கள் இருந்தன என்று சொல்லப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அங்கிருந்த மயாசுரனுக்கு இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் சூரியன், “சூரிய சித்தாந்தத்தை’ உபதேசித்தான் என்று அந்த நூலை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்

மஹாபாரதத்தில் மயன்.
இந்தக் காலக் கட்டத்திற்குப் பிறகு மயனின் பெயர் மஹாபாரதக் காலத்தில்தான் வருகிறது. இந்தக் காலக் கட்டத்திலிருந்துதான் மயனது வாஸ்து நிபுணத்துவத்தைச் சான்றுகளோடு சொல்ல முடிகிறது. மஹாபாரதத்தில், காண்டவ வனத்தை அர்ஜுனன் அழிக்கும் போது மயன் பெயர் வருகிறது. அந்த வனத்தில் இருந்த மயன், நெருப்பில் சிக்கிக் கொள்கிறான். (திரிபுர சம்ஹாரத்தில் நிகழ்ந்த்தைப் போல) நெருப்பிலிருந்து அவனை அர்ஜுனன் காப்பாற்றுகிறான் அதற்குத் தன் நன்றியைக் காட்டும் விதமாக ஏதாவது கைம்மாறு செய்வதாக மயன் சொல்கிறான். அதற்கு அர்ஜுனன் மறுப்பு தெரிவிக்கிறான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், கைம்மாறை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி, மயனை நோக்கி, ஒரு மிகச் சிறந்த அரண்மனையைப் பாண்டவர்களுக்குக் கட்டித்தருமாறு கேட்டுக் கொள்கிறான். மயனும் அவ்வாறே செய்வதாகச் சொல்கிறான் (ம-பா 2-1)

அவன் பாண்டவர்களுக்காக நிர்மாணித்த சபா மண்டபம், மயசபை எனப் புகழ் பெற்றது. அதைக் கட்டுவதற்கு வேண்டிய அபூர்வப் பொருட்கள், சங்குகள், பலவித பளிங்குக் கற்கள் ஆகியவற்றை, கைலாய மலைக்கு வடக்கிலிருந்து கொண்டு வருகிறான். அவற்றைக் கொண்டு 14 மாதங்களில் மய சபையை அமைத்துக் கொடுக்கிறான். அந்த மயன் கட்டிய அரண்மனையின் முக்கிய அம்சம், அரண்மனைக்குள்ளேயே இருக்கிற குளம் ஆகும். அது வருண சபையை ஒத்தது என்று அனைவரும் புகழ்கிறார்கள். வருண சபை என்பது இயற்கைச் சிற்பியான விஸ்வகர்மாவினால் உலகில் நில பாகங்களிக்கிடையே உண்டான கடல் என்பதை மஹாபாரத வர்ணனை மூலம் அறிகிறோம். இயற்கையில் இருந்த அமைப்பை, அதற்கு ஒப்புமையாகக் கூறியுள்ளதால், மய சபையின் குளம், செயற்கையானதும், முதன் முதலில் ஒரு மாளிகைக்குள் கட்டப்பட்டதும் ஆகும் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. மஹாபாரத விவரத்தைக் கொண்டு மய வாஸ்து என்பது கிருஷ்ணனுடைய அனுமதியின் பேரில் முதன் முதலில் பாரதத்தில் நுழைந்திருக்கிறது என்று தெரிகிறது. மயவாஸ்து என்பதே, குறிப்பாக யானம், சயனம், மாயத்தோற்ற அமைப்புகள், விசித்திர அமைப்புகள் இவற்றுக்குப் பெயர் போனவை. சிலப்பதிகாரத்தில் கோவலன் – கண்ணகியின் கட்டில், மயன் நிருமித்த விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்த்து என்ற குறிப்பு வருகிறது. “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” (சி- 2- 12) என்பதில் ’அன்ன’ என்று சொல்லியுள்ளாதால், மயனது விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்தது என்றாகிறது. இதன் மூலம் மயனது தொழில் நுட்பம் பாரதம் முழுவதும் பரவியிருந்தது என்று தெரிகிறது. இதை மெய்ப்பிக்கும் வண்ணம் சிலப்பதிகாரத்தில் இன்னொரு விவரம் வருகிறது. அதில் இந்திர விழா நடந்த போது வைக்கப்பட்டிருந்த சில அபூர்வப் பொருட்களைப் பற்றிய விவரம் வருகிறது. அவை கரிகால் பெருவளத்தான் வடதிசை நோக்கிப் பயணம் செய்த போது, அவனுக்குத் திறையாகச் செலுத்தப்பட்டவை. சோணையாற்றங்கரையில் இருந்த வஜ்ஜிர நாட்டு மன்ன்ன் கரிகாலனுக்கு, முத்துப் பந்தல் தந்தான். மகத நாட்டு மன்ன்ன் பட்டி மன்றம் தந்தான். அவந்தி நாட்டு மன்னன் தோரண வாயில் கொடுத்தான்.

இவை எல்லாம் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டவை. இவற்றைச் செய்த கம்மாளார், நுண்வினைஞர்கள் ஆகியோரது முன்னோர்கள் தொன்மையான ஒரு காலத்தில், மயனுக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறாக, மயனிடமிருந்து இந்த நுட்பங்களைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் வழியில் வந்தவர்களால் செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் மயன் நிருமித்த வகையால் செய்யப்பட்டு, பார்ப்போரை பிரமிக்கச் செய்வனவாக இருந்தன. அந்தப் பொருட்களை, இந்திர விழாவின் போது பார்வைக்கு வைத்திருந்தனர். (சிலம்பு -5) அவற்றை அமைத்த கம்மாளர்களுடைய முன்னோர் மயனுக்குச் செய்த உதவி என்ன, அதற்கு ஏன் மயன் கைம்மாறு செய்தான் என்று தேடும் போது, மய சபை நிர்மாணம் பொருந்துகிறது. மயசபையைத் தனி ஒருவனாக மயன் கட்டியிருக்க முடியாது. ஏற்கெனெவே அங்கிருந்த கம்மாளர்கள், தச்சர்கள், நுண் வினைஞர்கள், கட்ட்டக் கலைஞர்கள் ஆகியோரை வேலைக்கமர்த்தியிருக்கிறான். அந்த வேலையில், அவர்களும், மயனிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த நுணுக்கங்கள் பரம்பரை பரம்பரையாக சீடர்களுக்கோ அல்லது அவரவர் வம்சாவளிகளுக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திறமையால் அவர்கள் வடபால் அரசர்களுக்குச் செய்து கொடுத்த பந்தலும், பட்டி மன்றமும், தோரண வாயிலும் கரிகாலன் வசம் வந்து பூம்புகாரில் காட்சிப் பொருள்களாக ஆயின. இவற்றையெல்லாம் இங்கு சொல்வதற்குக் காரணம், இந்தப் பாடலில் ”தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின்” என்று சொல்லப்பட்டுள்ள தொல்லோர், மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மயன் மாளிகை கட்டிக் கொடுத்த போது அவனிடம் வேலை செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது. மயன் இட்ட பணிகளைச் செய்ததால், பதிலுக்கு மயன் அவர்களுக்குத் தன் தொழில் ரகசியங்களைக் கற்றுத் தந்திருக்கிறான். அது, இளங்கோவடிகள் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மஹாபாரதமும், சிலப்பதிகாரமும் நடந்த விவரங்களையே தந்திருக்கின்றன என்று தெரிகிறது. மஹாபாரதத்தில் வரும் எல்லா விவரங்களுமே சரித்திரச் சான்றுகள் என்று ஏற்றுக் கொள்ளத்தக்கவையே என்று நிரூபிக்கின்றன. அந்த மஹாபாரதம் நடந்து 5000 ஆண்டுகள் ஆகியுள்ளன.

அப்பொழுதே பரம்பரை விஸ்வகர்மாக்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மய வாஸ்துவையும் கற்றிருக்கிறார்கள். விஸ்வகர்ம வாஸ்துவுக்கும், மய வாஸ்துவுக்கும், அளவு முறைகளில் அதிக வித்தியாசம் இல்லை. கிராமம், தெருக்கள் போன்றவற்றை அளக்கும் யோஜனை என்னும் தூரத்தில்தான், இரண்டிலும் அதிக வேறுபாடு இருக்கிறது. மற்றபடி அவர்கள் அதிகம் மாறுபடுவதில்லை. ஆனால் மய வாஸ்து என்பது, கட்டடக்கலை (Architecture), யானம், சயனம் ஆகியவற்றில் முக்கியத்துவம் கொண்டது. சமையல் அறையைத் தென் கிழக்கில் அமைப்பது, மயமதம் சொல்லும் விதியாகும். ஆனால் ஒரு வீட்டின் வாயில் கதவு இருக்கும் திக்கின் அடிப்படையில் சமையல் அறை உள்ளிட்ட அறைகளை அமைக்க வேண்டும் என்பது விஸ்வகர்ம பிராகாசிகையின் கருத்து. ஒரு வீடு என்றால், முன்கட்டு, இடைப் பகுதி, பின் கட்டு என்று அமைத்து, பின்கட்டில் சமையல் அறை அமைக்க வேண்டும் என்பது விஸ்வகர்மா நிர்ணயித்த விதி. அந்த அமைப்பில்தான், நமக்கு முந்தின தலைமுறை வரை, வீடுகள் அமைத்தார்கள் என்பதால், தமிழ் நாட்டுப் பகுதிகளில், விஸ்வகர்ம வாஸ்துவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. சிற்பங்கள், விசித்திர அமைப்புகள், யானம், சயனம் ஆகியவற்றில் மயவாஸ்துவைக் கற்றுக் கொண்டு பின்பற்றியுள்ளார்கள் என்பதை “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” என்னும் சிலப்பதிகார வரிகள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சங்ககாலத்தில் மயன்.
மஹாபாரதக் காலத்துக்கு அடுத்தாற்போல மயனது பெயர் வருவது இரண்டாம் தமிழ்ச் சங்ககாலமாக இருக்கலாம் என்று, டா. கணபதி ஸ்தபதி அவர்கள் கண்டெடுத்துள்ள “ஐந்திறம்’ என்னும் நூல் மூலம் தெரிகிறது. தமிழ்ச் சங்கத்தில் தங்கள் நூல்களை அரங்கேறுவதில், பாரதம் முழுவதுமே மக்கள் ஆர்வமாக இருந்தனர் என்று பார்த்தோம். ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் முதல், கிருஷ்ணனது குல குருவான சாண்டில்யர் வரை ஆரிய அரசன் எனப்பட்ட பிரமதத்தன் உட்பட பலரும் தமிழ்ச் சங்கத்தில் தங்கள் படைப்புகளை அரங்கேற்றியுள்ளனர். அப்படிப்பட்ட பெருமை மிக்க சபையில், மயனும் அரங்கேற்றியுள்ளான் என்பது சாத்தியமே. அதை உறுதி படுத்துவது போல ஐந்திறத்தில் “குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம் அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய் பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப் புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென இயம்புறும் காலை” (ஐந்திறம் – 812) என்று சொல்லப்பட்டுள்ளதால், இந்நூல் கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்க காலத்தில் அரங்கேற்றிய நூலாக இருக்க வேண்டும். இந்த நூல் ஐந்திறம் எனப்பட்டது. இது ஐந்திரம் அல்ல. தொல்காப்பியர் தாம் ஐந்திரம் அறிந்துள்ளதாகச் சொன்னது, ஐந்திரன் என்னும் இந்திரன் இயற்றிய ஐந்திரம் என்னும் வியாகரண நூலாகும். இது இலக்கண நூல்.

இந்த ஐந்திர வியாகரண சாஸ்திரம், பொ-பி- 1800 ஆண்டுகள் வரை, அதாவது ஆங்கிலேயர்கள் நம் பாட முறையை நீக்கித், தங்கள் பாட முறையைப் புகுத்தின வரையிலும், மெட்ராஸ் ப்ரெசிடன்சி எனப்பட்ட, தமிழ் நிலங்களில் பாட சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. முன்பே ’தமிழ்ப் பார்ப்பனர்’ கட்டுரையில், தமிழ், சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ’தலை’ என்னும் தலையாய பாடமாக, இலக்கணம் சொல்லித்தரப்பட்டது என்று பார்த்தோம். இந்திரன் மஹேந்திர மலையின் மீதமர்ந்து உபதேசித்த ஐந்திரம் என்னும் இலக்கண நூல் சமஸ்க்ருதப் பாடத்தில் சொல்லித்தரப்பட்டது. மயன் அரங்கேற்றிய ஐந்திறம் என்பது சிற்ப சாஸ்திரத்தைக் கற்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளைச் சொல்கிறது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் மனதை நிலை நிறுத்தி, அதன் மூலம் ஒருவன் அடையும் உள்ளொளி முன்னேற்றத்தைத் தத்துவ ரீதியில் அதில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிற்பிக்கு அப்படிப்பட்ட மன நிலை தேவை. அப்பொழுதுதான் அவனால், தெய்வ சக்தியை நிலைபெறச் செய்யக்கூடிய தெய்வ உருவை அமைக்க முடியும். ஓம் என்னும் மூலத்திலிருந்து பயணிக்கும் போது, அந்த ஓங்காரம் ஊடுருவும் காலம், அதன் சீலம் (லயம்) அது காட்டும் கோலம் (உருவம்) அந்த உருவம் நிலைபெரும் ஞாலம் என்பவற்றை அடைய முடியும். இந்த ஐந்திறங்களும் அமையப் பெற்ற சிற்பி, இயல், இசை, நாடகம், சிற்பம், கட்டடம் என்னும் ஐந்து திறன்களிலும் தேர்ச்சி பெறவேண்டும். ஒரு இலக்கியவாதிக்கு இயல் (இலக்கணம்) மட்டும் தெரிந்தால் போதும். ஒரு இசைக் கலைஞனுக்கு இயலும், இசையும் தெரிய வேண்டும். சிலப்பதிகாரத்தில், மாதவி அரங்கேற்றத்தின் போது, அவளது இசை ஆசிரியர்கள், எவ்வாறு இயலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

அந்த்த் தேர்ச்சி இருந்தால்தான், பாடும் பாடலைக் குற்றமில்லாமல் பாட முடியும். ஒரு நாடக, அல்லது நடனக் கலைஞனுக்கு, இயலும், இசையும் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் குற்றமில்லாமல், அவனது நாடக / நடனக் கலையை வெளிக் கொணர முடியும். ஒரு சிற்பக் கலைஞனுக்கு, இயல், இசை, நடனம் / நாடகம் என்னும் மூன்றுமே தெரிந்திருக்க வேண்டும். நடராஜர் சிலை வடிக்க வேண்டுமென்றால் இவை இல்லாமல் முடியுமா? ஒரு கட்டடக் கலைஞனுக்கு, முன் கூறிய இயல், இசை, நாடகம், சிற்பக்கலை என்னும் நான்குமே தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், ஒரு கட்டடத்தின் பல் வேறு விதமான தேவைகளை அவனால் சரிவரச் செய்ய முடியும். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ஐந்திறம் தந்த மயன், தான் கட்டிய அமைப்பில் அவற்றைக் காட்டாமல் இருப்பானா? பாண்டவர்களுக்கு அமைத்துக் கொடுத்த அரண்மனையில் எல்லா சித்து வேலைகளையும் அவன் காட்டினான். அதன் சிறப்பு அம்சம், மாளிகைக்குள் அமைந்த குளமாகும். நீர் இருப்பதே தெரியாத அமைப்பில் அவன் கட்டினதால், அதில் துரியோதனன் விழுந்து, அதைக் கண்டு திரௌபதி பரிகசிக்க, மஹாபாரதப் போருக்கான வித்து அங்கு இடப்பட்டது. இங்கு நமக்குத் தேவையான விவரம், மாளிகைக்குள் குளம் அமைத்தான் என்றால் அதற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரமுடியும்? அந்தக் குளத்தில் பயன்படுத்திய தண்ணீரை எப்படி வெளியேற்ற முடியும்? அங்குதான் மயனது திறமை பளிச்சிட்டது. அந்த்த் திறமையை அவனிடமிருந்து கற்றுக் கொண்ட ‘தொல்லோர்’ (சிலப்பதிகாரம் சொன்ன வரிகளை நினைவு படுத்திக் கொள்ளவும்),

தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் வெளிக்காட்டாமல் இருந்திருப்பார்களா? அந்த அபூர்வத் திறமை, மொஹஞ்சதாரோ முதல், மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்ட எல்லா இடங்களிலும் தெரிகிறதே!. அவை மஹாபாரத மயன் பள்ளியில் பயின்றவர்களால் செய்யப்பட்டது போல் இருக்கிறதே! அப்படி உண்டான ஒன்றல்ல – பல வாபிகள் என்னும் குளங்கள் சிந்து சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றை அமைப்பதற்கான பொறியியல் திறன் அதற்கும் முன்பே இருந்திருந்தால்தானே, சிந்து சமவெளிப் பகுதியில் அவற்றை நிர்மாணித்திருக்க முடியும்? அந்தத் திறமை, பாண்டவர் அரண்மனையைக் கட்டிய மயனிடம் இருந்திருக்கிறது. அவனிடம் பயின்றவர்கள்தானே அவற்றை மொஹஞ்சதாரோவுக்கும், ஹரப்பாவுக்கும் எடுத்துச் சென்றிருக்க முடியும்? அவற்றை இனி ஆராய்வோம். (வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையிருந்த மாயன் (அ) மயன் நாகரிகத்தைப் பற்றி இங்கு சொல்லவில்லை. அதற்கும் நாம் சொல்லும் மயனுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த பாரத நூலும் சொல்லவில்லை. ஆனால், அந்த நாகரிகத்தவர் சொல்லும் சுக்கிரன் சுழற்சி என்பதில் உள்ள சுக்கிரனுக்கும், தானவ அசுரர்களுக்கும் தொடர்பு உண்டு. 
PART-2


மாயன் கூட்டம் தமிழர்கள்
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]
மாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம்,  கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர். 
Though the  history of Mayan people began before  4000 BC, It is believed that Maya civilization flourished between 2000 B.C. and A.D. 900.From A.D. 900 to 1500 saw the rapid decline of the Maya civilization  & the mayan people who lived for about 3500 years was completely wiped out by the Spanish conquest.By 1500 AD, the Maya dynasty finally came to an end, If the Spanish did not make it a policy to kill all of the Mayan priests and burn books when they arrived in Mexico, we would all have a  answers for many questions.The ancient Maya lived in a vast area covering parts of present-day Guatemala, Mexico, Belize, and the western areas of Honduras and El Salvador.ancient Maya were amazingly accurate astronomers and mathematicians who developed an intimate understanding of nature and the nature of time and the cycles that time influence.
இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது.தமிழ் மண்ணில் இருந்த நாகர்களில் சிலரே தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இவர்கள் தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள்.இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் – மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். 
thayam games
’மாயன்’ என அழைக்கப்படும் மக்கள் வேறு யாருமல்லர். நம் சங்க இலக்கியங்கலில்[300 BC to 300 AD] குறிப்பிடப்படும் ’மயன்’ வழி வந்தவர்கள்தான்”. என  நியூ மெக்சிகோவிற்குப் போய் Mayonic Culture[ஐந்திறம் அல்லது அய்ந்திறம்- மயன் என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் கட்டிடக்கலை நூல்.]. குறித்து ஆராய்ச்சி செய்த,பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் கூறுகிறார்.மேலும் ” Gene D. Matlock ” என்பவரும் தனது கட்டுரையில் ” LINGUISTIC EVIDENCE shows THAT THE MAYANS WERE FROM CEYLON. “என்றும் ” The Tamils and all the tribes of Meso-America, from Mexico to Panama, played the same board game: Pachesi[thayam games] ”என்றும்” The Lankans, Olmecs and Mayans even had similar mythologies! -Jaguar mating with Olmec woman.”என்றும்,வேறும் பல ஆதாரங்களுடன் கூறுகிறார்.
“நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின”
“மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” “
[-சிலப்பதிகாரம்-]
These Mayans were believed to be Tamils[Dravidians] by some scholars.Recent studies also  suggests a link between Indus Valley and Mayans of Central America.In addition,Two-thirds of all the aboriginal regional names of Mexico are either variations of the name of Lanka or Tamil names of West Indian regions.Also Ancient Dravidians were very good at trade and they lead sea journey. In one of the ancient Dravidian map there was a seaway to Central America (Mayan). The Mayans said that the land of their forefathers lay 150 days westward. At that period Dravidian were the only civilization on the west side.”Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?” By Gene D. Matlock suggest more evidences such as :” LINGUISTIC EVIDENCE shows THAT THE MAYANS WERE FROM CEYLON.”, ” The Tamils and all the tribes of Meso-America, from Mexico to Panama, played the same board game: Pachesi”, “The Lankans, Olmecs and Mayans even had similar mythologies! -Jaguar mating with Olmec woman.” and etc etc.Also Cilappatikaaram  & other ancient tamil literatures,spanning from 3rd century BC to  3rd century AD mentioned about mayan[மயன்]
Also Dr. V. Ganapati Sthapati visited Maya land and verified that the architectural principles of the Maayan temples were exactly the same as in Mayonic Science[Aindiram, written by Maamuni Mayan of First Tamil Sangam, was considered as an authoritative grammar on art and architecture]. In addition he found numerous Tamil words that were too similar to be coincidental. 
[dec+-+01.jpg]
மாயர்களின் காலண்டர் கி.மு. 3114ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும்  வந்திருக்கிறது.
சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

The Mayan Long Count calendar began on August 11  3114 B.C., and  ends around Dec. 21, 2012.Therefore, the amount of time that the Mayan Long Count Calendar measures is roughly or approximately 5,125.36 years,. It is the common belief that the calendar holds a prophecy that the world will end  on the last day of the Mayan Long Count Calendar.2012 ie 21st December,2012. 
However What exactly is going to happen is not certain.
Now we will examine How Does The Mayan Calendar Works & What It Says ?
மாயன் நாட்காட்டி: (Mayan Calendar)

மிகவும் சிக்கலான, ஆனால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டி இது.மாயன் நாட்காட்டி 3 வகையானவை.
முதலாவது ,  சோல்கின் (Tzolkin) எனப்படும் டிவைன் நாட்காட்டி (Divine Calendar), 
இரண்டாவது ஹாப் (Haab) என்று கூறப்படும் சிவில் நாட்காட்டி  (Civil Calendar). 
மூன்றாவது லாங் கவுண்ட் (Long Count) என்று கூறப்படும் ஷோல்டுன்’ (Choltun)என்னும்  நாட்காட்டி
இவைகளுள் ஹாப் நாட்காட்டி மட்டுமே முழு வருடத்திற்குமான  விவரத்தைக் காட்டும்.
 
The Mayan Calendar consists of three separate corresponding calendars, the Tzolkin(divine calendar),the Haab (civil calendar) and the Long Count,  The Haab,  is the one most similar to the Christian calendar. With 365 days in its count, it is obviously based on solar observations.

முதலாவது ,  260 நாட்கணக்கு கொண்ட  புனித (Sacred Calendar) நாட்காட்டி.ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20 பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது, 13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும் 
First there’s a religious calendar or Tzolk’in that takes 260 days to complete a full religious cycle.It was also called as the sacred or divine calendar.It is made by intermeshing [set of two rotors turning in opposite directions]the number symbols (dots for units and bars for fives) from 1-13 with the glyphs [a symbolic figure or a character as in the Mayan system of writing] for twenty days named after deities who carry time across the sky.  

இரண்டாவது,365 நாட்களைக் கொண்ட உழவுத் (Agricultural Calendar) தொழிலை –அடிப்படையாகக் கொண்ட  நாட்காட்டி. அதாவது  சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும்..இந்த நாட்காட்டி இன்றும் மெக்ஸிகோ நாட்டில் உள்ள அருங்காட்சி யகத்தில் (Museo Nacional de Antropologia) பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்காட்டி மொத்தமாக 18 மாதங்களைக் கொண்டது.  ஒவ்வொன்றும் 20 நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360  நாட்கள் வருகிறது. ஒவ்வொரு வருடக் கடைசியிலும்  5 அதிக நாட்கள்!  மொத்தமாக 365 நாட்கள்.அடுத்த வருடத்திற்கான மாற்றத்திற்கும் அதற்கான தயார்படுத்துதலுக்காகவும் என்று கணக்கிடப்பட்டு “பெயரில்லாத நாட்கள்” எனப்பட்டன.. மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் ‘பொப்’ (Pop) என்றும், கடைசி 5 அதிக நாட்கள் ’வேயெப்’ (Wayeb’ /Uayeb ) என்றும் அழைக்கப் படுகிறது. அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும், மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது
Next there is the solar calendar or Haab. This has 365 days, like our modern calendar. It’s divided in 18 months of 20 days each. At the end of the cycle there’s five special days or  extra days or “short month”, known as Uayeb ,considered to be unlucky because they don’t belong to any month.This  secular calendar  is traditionally associated with the cycle of the rains, agriculture, and harvesting.

மூன்றாவது,’ஷோல்டுன்’ (Choltun)என்னும்  நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட ‘காலக் கணக்கைக்’ (Long count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி.    இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிற தாகவும் மாயன்கள் சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது).
மேலே உள்ள   படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள் மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம் மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச் சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களை குறிக்கும். அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும் 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது. அதாவது ஆரம்ப நாளான[ஐந்தாவது சுற்றின் முதல் நாள்] 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான[அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப் சுற்றி,ஐந்தாவது  முழுச் சுற்றுகளை பூர்த்தி செய்கிறது பூமி.] 13, 0, 0, 0, 0 நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படி, கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. அது போல, முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப் பலர் நம்பும் இறுதி நாளாகும்.[unlike Christian calendar[The The long count of  Christian calendar has a start date on  January 1 of 0 AD.],Mayan calendar has an apparent end date, December 21 of 2012 AD.]
For example [ 8;14;3;1;12 ] represents
12 + 1 × 20 + 3 × 18 × 20 + 14 × 18 × 202 + 8 × 18 × 203 = 1253912.
மாயனின் மொழியின் படி 1 நாள் = 1 கின் (Kin) (1×1) 1 day ,  20 கின் = 1 வினால் (Winal) (20×1) 20 days,  18 வினால் = 1 டுன் (Tun) (18×1) 360 டயஸ்[It is important to note that the long count's version of a year, the tun, is only 360 days, not the solar count of 365.],  20 டுன் = 1 காடுன் (Katun) (20×1) 7200 days,  20 காடுன் = 1 பக்டுன் (baktun) (20×1) 144,000 days,   13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( great Cycle) (13×1) 1,872,000 days இங்கு ‘கின்’ என்பது நாளையும், ‘வினால்’ என்பது மாதத்தையும், ‘டுன்’ என்பது வருடத்தையும் குறிக்கும் சொற்கள். ‘காடுன்’, ‘பாக்டுன்’ என்பன அதற்கும் மேலே! 1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள். இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர்.
இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5×5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும் (Doomsday). 

In order to keep track of hundreds of years of history as well as to record celestial observations, the Maya developed a third calendar system, the one we call the Long Count.This is the one that the 2012 predictions  are based upon..The long count calendar is known as the Long Cycle.The Long Count is an astronomical calendar which was used to track longer periods of time And the Long Count Calendar cycle is believed to last for 5125 years (roughly) and is alleged to have commenced on August 11th, 3114 BCE.unlike Christian calendar[The The long count of  Christian calendar has a start date on  January 1 of 0 AD.],Mayan calendar has an apparent end date, December 21 of 2012 AD. The long count is represented as a five place notation system of ascending cycles – kins (days), winals (20-day months), tuns (360 days= approx. 1 year), k’atuns (20 tuns=7,200 days = approx. 20 years), and bak’tuns (20 k’atuns=144,000 days= approx. 394 years). It is important to note that the long count’s version of a year, the tun, is only 360 days, not the solar count of 365. This means that the long count diverges from the Haab by five days every year, making it a completely unique and separate cycle.The largest of the long count’s five cycles, the bak’tun, is a period equaling 400 tuns[=144,000 days ]. Many people believe that the full cycle of the Long Count is complete when 13 bak’tuns have passed since the beginning of the creation of this current universe, identified as the 4th creation in the Maya “story of creation”, the Popol Vuh. That date, currently of such great interest to those anticipating an “end of days”, will occur on December 21, 2012 AD
For example [ 9;8;9;13;0 ] represents
0 + 13 × 20 + 9 × 18 × 20 + 8 × 18 × 202 + 9 × 18 × 203 =1357100.
Long Count Calendar
Starting at ‘year zero’ – the very beginning of a Long Count period – the read-out of the calendar was set at: 0.0.0.0.0. When each value was numerically accomplished to its maximum, it would then reset to ‘0’ and the total would be carried forward into the next time cycle to its left. For example, 19 days from the beginning of a long count period would read 0.0.0.0.19. Upon day twenty, the read-out would be given as 0.0.0.1.0. Likewise, after exactly 18 Uinals (20 * 18) had been achieved, the Mayan calendar would read 0.0.1.0.0.
Of the largest cycle of 144000 days, known as the Baktun, it should be noted that this also has a recognised limit in terms of the system, when it too returns to zero. Such occurs when precisely 13 Baktuns have been accomplished, which is the passage of 1872000 days (144000 * 13). When this is achieved, represented as 13.0.0.0.0. such a value is simultaneously equal to that of a complete reset to zero of the whole calendar, given as 0.0.0.0.0.
The actual time cycle of 13 Baktuns, or 1872000 days, is sometimes referred to as a ‘Great Cycle’ of the Maya. Or even a ‘World Age’.
To further illustrate how the Long Count moves forward through time, look at the day sequencing around the beginning and end of the cycle: 
12.19.19.17.19 3 Kawak 7 Kumku August 10, 3114 BC
13.0.0.0.0 4 Ahau 8 Kumku August 11, 3114 BC
0.0.0.0.1 5 Imix 9 Kumku August 12, 3114 BC
12.19.19.17.19 3 Kawak 2 Kankin December 20, 2012 AD
13.0.0.0.0 4 Ahau 3 Kankin December 21, 2012 AD
0.0.0.0.1 5 Imix 4 Kankin December 22, 2012 AD
NB:Logically, the first date in the Long Count should be 0.0.0.0.0, but as the baktun (the first component) are numbered from 1 to 13 rather than 0 to 12, this first date is actually written 13.0.0.0.0.[The kin, tun, and katun are numbered from 0 to 19.The uinal are numbered from 0 to 17.The baktun are numbered from 1 to 13.This is a unique system of timekeeping based on a mixture of base 20 numbers & 18 numbers.]
Also please note that The Maya state that the present cycle began in 3114 BCE or just about 5125 years  (roughly )  ago.Similarly, in Hinduism the current age or yuga, the Kali yuga, began in 3102 BCE, putting the beginning of this cycle at 5114 years ago.
இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்?  இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!
How can we belief  without any true scientific explanation? Let us take a closer look at the  modern astronomical picture of the universe. 
Summer and WinterThe earth's wobble
சூரியன் ஒரு பெரிய மேசையின் மேல் நடுவில் இருப்பதாகவும்  அதை சுற்றி பூமியானது அதே மேசையின் மேல் சுற்றுவதாகவும் கற்பனை செய்யுங்கள்.அப்படியாயின் அந்த மேசையையின் மேல் பகுதியை நாம் ““the plane of the earth-sun orbit” or “the plane of the ecliptic” or more simply, “the ecliptic.”” என அழைக்கலாம் .
Imagine the sun in the middle of a big tabletop with the earth always staying on this tabletop as it travels around the sun in its yearly orbit. This tabletop is called “the plane of the earth-sun orbit” or “the plane of the ecliptic” or more simply, “the ecliptic.” 

பூமி சூரியனை சுற்றுவதுடன் ,ஒரு சாய்ந்த பம்பரம்   தள்ளாடி தன்னை  தானே சுற்றுவது போலவும் சுற்றுகிறது .இந்த செயலை பூமியின் ” precession   ” என   அழைக்கலாம்  இந்த அச்சு ஒரு முழு சுற்று  சுற்ற ” 26,000 “வருடங்கள் எடுக்கும். இதை “the great year.” என  அழைக்கலாம் .
In addition to its motion around the sun, the earth is slowly wobbling much like a spinning top that is not standing straight up. This is the action of precession it takes about 26,000 years (roughly) for the axis to make one circle and this long cycle has several names. One of them is “the great year.”
   
மிகவும் விரைவான “வானியல்  சுழற்சி” யாக   நாள் ” the day ”  இருக்கிறது .மேலும் சூரிய உதயத்தை சூரியன் திரும்பவும் பிறப்பதாக உருவகப்படுத்தலாம் .ஒவ்வொரு நாளும் சூரியன் மறையும் போது அடி வானத்திற்கு கீழ் ,பூமிக்கு கீழ் போவது போல் தோன்றும் .நாம் இருட்டிலும்  குளிரிலும் விடப்படுகிறோம் .எனினும் அதி காலையில் அது மீண்டும் எழும்பி, திரும்பவும் பிறவி எடுத்து , எமக்கு உயர் வாழ தேவையான ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது.இது மிகவும் தேவையான ,உயர் வாழ அடிப்படையான ” rebirth “மறு பிறவியாகும் .
As you know, the day is the fastest astronomical cycle .Everyday when the sun sets, it goes below the horizon, seemingly under the ground of the earth, and we are left to endure a dark, cold night. Metaphorically, it can be said that the sun leaves our world and travels into the underworld, where it is said to be dead for the duration of the night. Yet at dawn, it rises above the ground and is reborn into our world bringing forth the light and heat we all need to stay alive. but all of us of course know that this rebirth is truly vital.
இரண்டாவது குளிர் கால கதிர்த்திருப்பம்” winter solstice ” ஆகும்.இதுவும் ஒரு சூரியனின் மறு பிறப்பு ” rebirth of the sun “என கூறலாம் ஏனென்றால் ஒரு காலை பொழுதின் நீளம் வளர தொடங்குவதால் .  மாறாக காலை பொழுது குறைந்து கொண்டு போனால் குளிர் கூடி எல்லா உயர்களையும் அழத்து விடும் .ஆகவே இந்த திரும்ப பிறப்பதும்  மிகவும் தேவையான ,உயர் வாழ அடிப்படையான ” rebirth “மறு பிறவியாகும் 
Next is the winter solstice, which can be seen as the rebirth of the sun in the time frame of the year since the length of the day will now start to grow longer. If the days were to continue to grow shorter, the cold winter would only tighten its grip and we would all perish. So this rebirth is also vital.
கதிர்த்திருப்பம் (Solstice) என்பது கதிரவன் தன் கதிர்வீதியில் திசை மாறும் நிகழ்வை/நாளைக் குறிக்கும். இந்நாளில் கதிரவனின் கதிர்கள்  புவியினை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன. கதிரவன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில்  இந்நாளை “Solstice”சோல்சுடைசு (sol – கதிரவன்,+sistere – நிற்றல்) என குறிக்கின்றனர்..
A solstice is an astronomical event that happens twice each year when the Sun reaches its highest position in the sky as seen from the North or South Pole. The day of the solstice is either the “longest day of the year” or the “shortest day of the year” for any place on Earth, because the length of time between sunrise and sunset on that day is the yearly maximum or minimum for that place. The name is derived from the Latin words sol (“sun”) and sistere (“to stand still”). During the solstice, the Sun stands still; that is, the seasonal movement of the Sun’s path comes to a stop before reversing direction.
Yearly path of the across the dark rift
விண்மீன் மண்டலத்தின் [வானிலுள்ள பால்மண்டலம்/galaxy],மைய பகுதிக்கு அருகில் உள்ள வெளிச்சமான பகுதியை அங்கு கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) இருந்த போதும் சாதாரண கண்ணால் பார்க்க முடியும் .இதை மாயா இனத்தவர்கள்  ஆக்க தாய் கடவுளின் கருவுற்ற வயிறு மாதிரி  உருவகப்படுத்தினர்.[the massive ball of bright lights at the center of the galaxy was seen as the pregnant belly of the mother of creation and the dark rift was seen as the galactic birth canal] மேலும் பால்வெளி மண்டலத்தின் கருமையான பள்ளத்தை பிறவியின் வாய்க்கால் அல்லது கால்வாய் மாதிரி உருவகப்படுத்தினர்.இவ்வாறு மூன்றாவது மறு பிறவி சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதிக்கு போகும் போது ஏற்படுகிறது .இது ஒரு வருடத்திற்கு ஒருக்கா நடை பெறுகிறது இதை ” galactic rebirth “என  அழைக்கலாம் .
It is possible to easily see the bright section near the center of the galaxy without a telescope, although the dark rift intrudes into it. For the Maya, the massive ball of bright lights at the center of the galaxy was seen as the pregnant belly of the mother of creation and the dark rift was seen as the galactic birth canal. In this way, the third rebirth occurs when the sun moves into the middle of the dark rift and this can be referred to as the galactic rebirth and it happens once a year. 
இந்த மூன்று மறுபிறப்பு  அல்லது புனர்ஜென்மத்தை  தினம் மறுபிறப்பு ,கதிர்த்திருப்ப மறுபிறப்பு ,பால்வெளி மண்டல மறுபிறப்பு  என அழைக்கலாம் .
இந்த மூன்று பிறவியும் ஒன்றாக ஒரே நேரத்தில் நடை பெரும் நாள் தான் 21 மார்கழி,2012.
கதிர்த்திருப்ப மறுபிறப்பு[solstice rebirth ],ஒவ்வொரு tropical year இலும் பால்வெளி மண்டல மறுபிறப்பு [galactic rebirth ] ஒவ்வொரு sidereal year இலும் நடைபெறும்
So the three rebirths of the sun can be referred to as the daily rebirth, the solstice rebirth and the galactic rebirth. A triple rebirth of the sun occurs in the years around 2012 when all three rebirths happen on the same calendar day December 21, 2012.
By the way, the solstice rebirth happens once every tropical year and the galactic rebirth happens once every sidereal year. In other words, the winter solstice happens once every tropical year and that the alignment with the middle of the dark rift happens once every sidereal year.
One sidereal year is roughly equal to 1 + 1/26000 or 1.0000385 tropical years. 
” tropical year  ”வெப்பமண்டல வருடம்:பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கான நேரம்.
A tropical year is the amount of time from one winter solstice to the next. Astronomers record this value as 365.24219 days, on average.
 ” sidereal year “நாண் மீன் சார்ந்த வருடம்:பூமி சூரியனை ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை சார்பாக சுற்றி வருவதற்கான நேரம்.
A sidereal year is the time taken by the Earth to orbit the Sun once with respect to the fixed stars.
A sidereal year is about 20 minutes longer than a tropical year and this difference is caused by the slow wobble of the earth’s axis. This is what causes these two rebirths to come together in the years around 2012.ie December 21, 2012 
சூரியன், பால்  வெளி மண்டலத்தை கடப்பதை மாயா இனத்தவர்கள்  [மாயான்] ,தந்தை “சூரியன்” ,தாய் “பால்  வெளி மண்டல”த்துடன் புணர்வதாக பார்த்தான் .இந்த காதல் புணர்ச்சியின் விளைவு தான் “a new world age,”புது  யுகம்  என மாயான் அழைத்தான் .இது தான்  நீண்ட கணிப்பு நாட்காட்டியின்  புது சுழற்சியை குறிப்பதாகும் என் கருதினான் .
ஆகவே இந்த ” 2012,அதாவது மார்கழி 21, 2012 ” இல் நடப்பது காதல் புரிதலும் அதனால் ஏற்படும் படைப்பும் ஆகும் .சாவும் அழிவும் அல்ல !!
The sun crossing through this region of the Milky Way was seen by the Maya as father sun mating with the galactic mother. In 2012, this special lovemaking results in the birth of what the Maya called “a new world age,” which is represented by a new cycle of the Long Count calendar. 
Yes indeed, lovemaking and creation is at the core of 2012, not death and destruction.
Izapa at 12:08 PM
 Dec 21, 2012
மாயான் இந்த நாளை தேர்ந் எடுத்தற்கு காரணம் சூரியனின் நிலையே .சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதியில் ,குளிர் கால கதிர்த்திருப்பம்  ஏற்றப்படும் அதே நேரத்தில் நிற்கும் .அதாவது இது சூரியனின் மூன்று பிறவிகளையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் !!சூரியன் நாலு நட்சத்திரங்களின்[mars ,pluto ,mercury ,venus ]  மத்தியிலும் இருக்கும் !!! அது மட்டும் அல்ல வீனஸ்  இந்த  புனித  நட்சத்திர மரத்தின் , பால் வெளி மண்டலத்தை  குறுக்காக  கடந்து போகும்  அணிவகுப்பிறகு   தலைமை தாங்கும்.இந்த கூட்டு செயலால் தான் இந்த நாளை,மார்கழி 21, 2012 மாயான் தேர்ந்து எடுத்தான்  
The position of the sun is the main reason why the Maya picked this exact day. We will have the sun in the middle of the dark rift, the birth canal, on the same day as the winter solstice! This will create the triple rebirth of the sun! In addition to that, the sun will be virtually exactly in the middle of four planets [mars ,pluto ,mercury ,venus ] on the sacred tree with Venus leading the parade across the sky! This combination is why the Maya picked 2012! 
மறு பிறவியாக உருவகபடுத்தும் கொள்கையை பாவித்தால் ,அங்கு இரண்டு விதமான சூரியனின் மறு பிறவி இருக்கும் .ஒன்று குளிர் கால கதிர்த் திருப்பம்”  winter solstice ” ஆகும்.மற்ற  மறு பிறவி சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதிக்கு போகும் போது ஏற்படுகிறது.அதாவது ” galactic rebirth ” ஆகும்.பூமியின் அச்சுச் சுழலோட்டம்  அல்லது  ஒரு சாய்ந்த பம்பரம்   தள்ளாடி தன்னை  தானே சுற்றுவது போல சுற்றுவது தான் இந்த இரண்டு மறு பிறவிகளையும் ஒன்றாய் நடைபெறாமல் பிரிக்கிறது .இது ஒவ்வொரு “26,000  ”வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றாய் சேர்க்கிறது .அப்படியான   ஒரு நிகழ்வே இந்த  மார்கழி 21, 2012 .உதாரணமாக இன்னும் ஒரு “13000  ”வருடங்களுக்கு பின் இந்த இரண்டு மறு பிறப்புகளும் மிக கூடிய இடை வெளியில் நடை பெரும் .அதாவது ஆறு மாத இடை வெளியில் .பின் திரும்பவும் இன்னும் ஒரு   “13000  ”வருடங்களுக்கு பின் ,இரண்டும் ஒரே நேரத்தில் நடை பெரும் .என்ன விநோதம்,விசித்திரம் பார்த்தீர்களா ?
Or to use our rebirth metaphors, there is a rebirth of the sun once every tropical year due to the winter solstice and there is a rebirth of the sun once every sidereal year due to the alignment with the middle of the dark rift. Precession is what causes the relative occurrence of these two rebirths to shift. Precession is what slowly brings these two rebirths together in 2012 and later drives them apart.  In about 13,000 years from now, they will be as far apart as possible with the rebirth in the dark rift happening six months after the winter solstice. The following 13,000 years will bring them back together again.So on the day that the calendar itself is reborn, we have the sacred triple rebirth of the sun! How fantastic!
2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறது  இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக் குடும்பமே அதனுள் சென்று விடலாம் அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டாகலாம் அல்லது ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின் ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம். ஒரு முறை நடக்காவிட்டாலும், ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படி நடக்கலாம் என் கூறுபவர்களும் உண்டு.
மேலும் 21.12.2012 அன்று, காலக்டிக் ஈக்வேட்டர் (Galactic Equvator) என்னும் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சூரியன் அடைகிறது. அதனால், பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும் ‘மத்தியரேகை’ என்னும் நேர் கோட்டில் வருகின்றன. அத்துடன் எங்கள் பூமியும் அதே நேர் கோட்டில் வருகிறது.   பால்வெளி மண்டல மத்தியும், சூரியனும், பூமியும் இருக்கும் நேர் கோட்டுத் தன்மையினால், சூரியனுக்கு ஏற்படும் ‘காஸ்மிக்’ (Cosmic) கவர்ச்சி விளைவுகளால் உருவாகும் ஈர்ப்பு விசை மாற்றங்களால், பூமியின் அச்சுத் தடம் மாற வாய்ப்புண்டு. அதாவது இப்போது 23.5 பாகை சாய்வில், வடக்குத் தெற்காக இருக்கும் பூமியின் அச்சு, இடம்மாறி பூமியின் வடதுருவம், தென்துருவம் என வேறு ஒரு இடத்துக்கு மாறலாம் அதனால் இப்போது உள்ள துருவங்களின் பனி (Ice) உருகி, பூமியே தண்ணீரில் மூழ்கலாம் .இப்படி கூறுபவர்களும் உண்டு
ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பூமியும் சூரியனும் (சூரிய தொகுதியே ) பால்வீதியின் மையத்தை நோக்கி ஒரு இடப்பெயர்வை மேற்கொள்ளுகின்றன. ஆனால், அதுவும் ஒரு வருடாந்த நிகழ்வே தவிர, எந்த பாதிப்பும் அற்றது.பூமியின் வட முனைவும் தென் முனைவும் தமக்குள் இடமாறும் எனவும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. புவியின் காந்த முனைகள் நான்கு இலட்சம் வருடங்களுக்கு ஒருமுறை இடமாறும் என்பது உண்மைதான். அதுவும் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்பதுடன், அதுவும் வரும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நடக்க வாய்ப்பில்லை.
சுமேரியர்களின் புராதன ஆவணங்களில் கூறப்பட்டுள்ள நிபிரு என்ற மிகப்பெரிய விண்பொருள் (கோள் என்றும் சொல்பவர் உண்டு) பூமியை நோக்கி நேராக வரப்போவதாகக் கூறும் பீதியைக் கிளப்புபவர்கள் முன்னரே ஒரு தேதியைக் குறித்திருந்தனர் — அதாவது மே 2003 — அத்தேதியும் வந்து சென்று விட்டது; எனவே இப்போது தேதியை சற்று முன்னர் தள்ளிப்போட்டுள்ளனர் இவர்கள்! நிபுரு (அல்லது கோள் எக்ஸ், (planet X)  அல்லது எரிஸ்) என்று ஒரு கிரகம் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக உள்ள கதையும் வதந்தியே. அப்படி ஒரு கிரகம் வந்து கொண்டிருப்பது உண்மை என்றால், எப்போதோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு மாதத்துக்குள் பூமியை மோதப்போகிறது என்றால், இப்போதைக்கு அது வெறும் கண்ணுக்கே தெரியத் தொடக்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. எரிஸ் என்கிற ஒரு கிரகம் இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால், அது பூமியை நெருங்கக்கூடிய அதி குறைந்த தூரமே நான்கு பில்லியன் மைல்கள்
இப்படி உலகளாவிய அளவில்  விஞ்ஞானிகளும் 2012 இல் உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளனர்.
மனித மனத்தால், மூளையால் கண்டறியவே முடியாதவை என சில விடயங்கள் இருக்கின்றன. பிரபஞ்சத்தின் தொடக்கம், “”கடவுள்”", மூளை, உயிர்… இப்படி சில விடயங்களை இன்னும் யாராலுமே தெளிவாக கூற முடியவில்லை. அதிலே ஒன்றுதான் உலக அழிவு. மனிதர்களை முட்டாளாக்க இவற்றை எல்லாம் பயன்படுத்தலாம். ஊழி என அழைக்கப்படுகிற இந்தப் பேரழிவு இறைவனால் நிகழ்த்தப்படும் என பூச்சாண்டி காட்டியே மதங்களுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். மனிதனின் பயம்தான் மனிதனின் பெரிய முட்டாள்தனம்.
Some belief that that the sun and Earth becoming aligned with the black hole in the galactic center allows some kind of massive gravitational pull on Earth.
The first strike against this theory is that the solstice itself does not correlate to any movements of the stars or anything in the universe beyond Earth. It just happens to be the day that Earth’s North Pole is tipped farthest from the sun.Second, Earth is not within range of strong gravitational effects from the black hole at the center of the galaxy since gravitational effects decrease exponentially the farther away one gets. Third, the sun appears to enter the part of the sky occupied by the Dark Rift every year at the same time, and its arrival there in Dec. 2012 portends precisely nothing.
Also In response to theories about planetary alignments leading to an apocalypse on Earth on December 21, 2012, the scientists say no planetary alignments will occur in the next few decades. But even if they did, the effects on our planet would be negligible.
NASA also say the ‘polar shift’ theory is totally impossible. Although continents move slowly throughout time, a magnetic reversal is very unlikely to happen in the next few millennia and wouldn’t cause any harm to life on Earth.
Another story started with claims that Nibiru, a supposed planet discovered by the Sumerians, is headed toward Earth. This catastrophe was initially predicted for May 2003, but when nothing happened the doomsday date was moved forward to December 2012 and linked to the end of one of the cycles in the ancient Mayan calendar at the winter solstice in 2012.If Nibiru or Planet X were real and headed for an encounter with the Earth in 2012, astronomers would have been tracking it for at least the past decade, and it would be visible by now to the naked eye. Obviously, it does not exist. Eris is real, but it is a dwarf planet similar to Pluto that will remain in the outer solar system; the closest it can come to Earth is about 4 billion miles.
The scientists’ conclusion is that the end of the Mayan calendar does not imply the end of the world, only the end of the Mayan long-count period. The ‘long count’ is a part of the Maya calendar shaped like a wheel. When we reach the end of the wheel, it will simply turn to the beginning again,
Also please note the fact  that the long count comes to an end in Dec 2012, may have some significance for the Maya as the end of a great cycle, much like we celebrated the millennium , does not mean that the “world will come to an end”. It’s actually true that there are Mayan names for periods of time longer than 13 bactuns,so that their calendar doesn’t actually end.
This world has existed for over four billion years. Is it reasonable to expect that it will come to an end on 21 december,2012 ? And all because of a Mayan calendar? I think we must Use our common sense.Also there is no evidence from any Mayan literature suggesting that the world will come to an end.

Additional Note:The Mayans carried out astronomical measurements with remarkable accuracy yet they had no instruments other than sticks. They used two sticks in the form of a cross, viewing astronomical objects through the right angle formed by the sticks.With such crude instruments the Maya were able to calculate the length of the year to be 365.242 days (the modern value is 365.242198 days). Two further remarkable calculations are of the length of the lunar month. At Copán (now on the border between Honduras and Guatemala) the Mayan astronomers found that 149 lunar months lasted 4400 days. This gives 29.5302 days as the length of the lunar month. At Palenque in Tabasco they calculated that 81 lunar months lasted 2392 days. This gives 29.5308 days as the length of the lunar month. The modern value is 29.53059 days. Was this not a remarkable achievement?

No comments:

Post a Comment