Wednesday, 25 January 2017

தமிழரின் சைவ( மதம் அல்ல) வாழ்வியல்நெறி SIVAM --HINDU இந்து[ஹிந்து] இருந்து முற்றிலும் வேறு பட்டது.
                                                                   திருச்சிற்றம்பலம்-
அகழ்வாரச்சி வரலாறு-சிந்துவெளி நாகரிகம் /Sindus Valley Civilisation
முதலில் இந்து[ஹிந்து/Hindu] ௭ன்ற சொல்லின் மூலத்தையும்
பொருளையும் பார்ப்போம். ஹிந்து/Hindu என்ற சொல் பிழையாக
விளங்கப் பட்டு,பிழையாக பாவிக்கப் படுகிறது.பலருக்கு இதன்
மூலம் அல்லது தோற்றுவாய் தெரியாது.இன்று இந்தியாவில் இந்து,
இந்துத்துவா [இந்துத்துவம்/Hindutva] என்ற பதம் வகுப்புவாத சாயலில்
பாவிக்கப் படுகிறது.மற்றவர்களுக்கு இது ஒரு மத அமைப்பை
குறிக்கிறது. இந்து என்ற இந்த சொல்லின் மூலம் சமஸ்கிருதத்திலோ
அல்லது எந்த இந்தியா மொழியிலியோ காணப்படவில்லை. ஆனால்,
உண்மையில் இந்து,இந்தியா இரண்டு சொற்களும் அந்நிய
மூலத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது.அது மட்டும் அல்ல
"இந்து" ஒரு மதத்தை குறிக்கும் சொல்லே இல்லை.
எந்த ஒரு பண்டைய வேதத்திலும்[Ancient Vedic Scriptures] கூட குறிக்கப்
படவும் இல்லை இந்து[Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால்
['பெர்ஷியன்'/ Persians] சிந்து[Sindu] நதியை குறிப்பதற்கு
பாவிக்கப் பட்டது. அவர்களால்,"S" என்ற சொல் சரியாக உச்சரிக்க
முடியாமல்,"S" க்கு பதிலாக "H" ஆக உச்சரிக்கப் பட்டு அது
"இந்து"["Hindu"]வாக மாறியது.என்கிறார்கள்மொழிவல்லுநர்கள்.பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டுசிந்து என்ற சொல் புவியியல் பெயர் என்றே
குறிப்பிடுகிறது . இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது
குறிப்பிடவில்லை. கி.மு.546 ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த
பாரசீகசாம்ராஜ்யம்[பேரரசு] இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை
நீடிக்கப் பட்டது .மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன்
படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள்.இந்த மக்களை
பாரசீகர்கள் இந்து ["Hindus"] என குறிப் பிட்டதாக வரலாறு
கூறுகிறது.அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள்
இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு,பேரரசர் அலெக்சாந்தர் [ Alexander
the Great ] சிந்து நதியை இந்து நதி என "S" ஐ தவிர்த்து இந்து[Indus] நதி
என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம்றோம்.கி மு 325 இல் பேரரசர்
அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய
மாசிடோனிய [Macedonian forces ] படையினர் இந்து நதிக்கு கிழக்கே
உள்ள பிரதேசத்தை,இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு
முன்பு, வேத கால பெயர் பாரத்[பாரத/Bharat ] ஆகும்.
வேறு ஒரு பார்வையில்,இந்து [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில
பொருளும் உண்டு. உதாரணமாக,இஸ்லாமிய
படையெடுப்பாளர்கள்,ஆரிய சமூகத்தை அவமானப்படுத்தும்
பொருட்டு ,தரக்குறைவாக அவர்களை குறிக்க இந்த
சொல்லைலை பாவித்தார்கள். பெர்ஷியன்' மொழியில் இதற்கு
அர்த்தம் என்னவென்றால், அடிமை [ slaves],திருடன் [thief],
வழிப்பறிக்காரன் [dacoit],
வழிப் போக்கர்களைக் கொள்ளையடிக்க மறைவில் ஒளிந்து
தாக்குபவர் [waylayer]
கீழ்ப்படிந்த வேலைக்காரன் (obedient servant), என இகழ்கிறது.[a Persian
dictionary titled Lughet-e-Kishwari,
published in Lucknow in 1964,and another dictionary, Urdu-Feroze-ul-Laghat
(Part One, p. 615)] ஆகும்.
ஆனால்,சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும்
தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்[Dr.Pope]"சைவம் தென் இந்தியாவில்,
சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு
முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக
காணப்பட்டது என்று கூறியுள்ளார்.தமிழர்களின்
படிப்படியான சிந்தனையின் வளர்ச்சியால்
மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக
எமக்கு தோன்றுகிறது..ஆகம
கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி,அதன்
கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும்,நான்கு வேதங்களின்
சிந்தனைகளாலும் அதன் நடைமுறைகளாலும் கட்டமைக்கப்பட்ட
சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது..
தமிழரே,வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள்
ஆவார்கள்.ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள்
என்பது சரியான காரணத்துடன் எடுத்தது அநுமானம் ஆகும்.
இந்தியாவில், சைவதமிழரே நாகரிகம் முதலாவதாக,சிந்து சம
வெளியில் கி மு 3300 க்கும்-கி மு 2600 க்கும் இடைப்பட்ட
காலப்பகுதியில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை
அண்டித் தழைத்தோங்கி, கி மு 2600- 1900 ஆண்டுகளில் ஹரப்பாவில்
உச்ச நிலையில் இருந்து,பின் சடுதியாக அழிந்து போய்விட்டது.
.புறநானுறு 202 இல்,"கோடிபல
அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய நீடுநிலை அரையத்துக் கேடும்
கேளினி" என்ற வரியில் கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன்முன்னோர்களுக்கு உதவி,உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன் என்கிறார் .
அரையம் என்றால்,பெரும் நகரம் என்று பொருள்.அரையம் என்பதன்திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாகஉள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார் இந்தியாவின் பெரும்பான்மையான
பழங்குடி மக்கள் சைவதமிழர்கள் உள்ளடங்கிய தமிழ் மொழி
பேசுபவர்கள் சைவ(தமிழா்கள்) இன மக்கள் என பெரும்பாலும்
அடையாளப் படுத்து கிறது.
சர் ஜான் மார்ஷலின் அகழ்வு ஆய்வு,சைவ சமயத்தின் வரலாற்றை
கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்கிறது.சர் ஜான் மார்ஷல் ஏழு மண் அடுக்கு வரைதோண்டி ஆய்வு செய்தார்.ஒரு மண் அடுக்கு ஏறத்தாள 500 வருடங்களை குறிக்கும்.பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான,டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் தான் எழுதிய இந்து சமய வரலாறு [ History of Hinduism] என்ற
நூலில் சைவ சமயத்தின் ஆரம்பம்,நாம் இது வரை ஏற்றுக்
கொண்டதை விட மேலும் சில நூற் றாண்டுகள் கூடுதலாக
இருக்கலாம்.ஏனென்றால் இன்னும் முதலாவது மண் அடுக்கு
அடையாள படுத்தப் படவில்லை.ஆகவே சரியாக தீர்மானிக்க முடியாது என்கிறார்.இவை எல்லாம் எமக்கு காட்டுவது,இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன்னமே அங்கு சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது என்பதாகும்.இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் இந்தியர் அல்லாதவர்களால் சரிபார்க்கப்பட்டது.பண்டைத் சைவதமிழா் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகை நிலம் (ஐவகை நிலம்)குலதெய்வவழிபாடும் .
"குலதெய்வம்" என்றால் என்ன ? உங்களின் முன்னோர்களால் வழிபடக்கூடிய தெய்வங்களே குலதெய்வங்களாகும்.
1-
குறிஞ்சி நிலம் குலதெய்வவழிபாடு
மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலமென
அழைக்கப்படுகின்றன. தெய்வம்:முருகன் குலதெய்வமாக பண்டைய சைவதமிழ் மக்களால் ழிபடப்பட்டார்கள்.
2-
முல்லைநிலம் குலதெய்வவழிபாடு காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லைநிலம் என்றார்கள் "மாயோன் மேய காடுறை உலகமும்” எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது. தெய்வம்: தெய்வம்:திருமால் குலதெய்வமாக பண்டைய தமிழ் மக்களால் வழிபடப்பட்டார்கள்.-3-மருதம் நிலம் குலதெய்வவழிபாடு
வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம் நிலம் என்றார்கள்
தெய்வம்: இந்திரன் குலதெய்வமாக பண்டைய சைவதமிழ் மக்களால் வழிபடப்பட்டார்கள்.
4-
நெய்தல் நிலம் குலதெய்வவழிபாடு கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல் நிலம் என்றார்கள் நெய்தல் நிலம் என்பது பண்டைத் பண்டைய தமிழ் மக்களால்பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் எனஅழைக்கப்படுகின்றன. “வருணன் மேய பெருமணல் உலகமும்”எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது. தெய்வம்: வருணன் குலதெய்வமாக பண்டைய சைவதமிழ் மக்களால் வழிபடப்பட்டார்கள்.
5-பாலை நிலம் குலதெய்வவழிபாடு மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை நிலம் என்றார்கள் குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்.பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர்.பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.தெய்வம்: கொற்றவை குலதெய்வமாக பண்டைய சைவதமிழ் மக்களால் வழிபடப்பட்டார்கள் ஐந்து வகை (ஐவகை ) குலதெய்வ வழிபாடுகலிலும் இந்து குறி்பிடப்படவில்லை .
தமிழரின் சைவ மதம்,இந்து[ஹிந்து] அரசியலில் இருந்து முற்றிலும் வேறு பட்டது..Hindu /ஹிந்து /இந்து ௭ன்ற பெயருடைய அடையாலம். அகழ்வாரச்சியில் இல்லை
இதை என்று நாம் உணருகிறோமோ அன்று தான்
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்பதை நீ உணர்வாய் !
உண்மைக்காக எதையும் துறக்கலாம்,
ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
"மறைக்கப்பட்ட சைவதமிழரின் தொண்மை "
தயவு செய்து ௨ங்கள் ௨றவுகலுடன் பகிா்ந்து கொள்ளவும்.
                                           திருச்சிற்றம்பலம் .

    

No comments:

Post a Comment