Thursday, 26 January 2017

இந்தியர் என்றால் என்ன ?

இந்தியர் என்றால் என்ன ?
அதன் தாய்மொழி என்ன ?
அதன் கலாச்சாரமும் பண்பாடும்  என்ன ?
அதன் முழமுதல் கடவுள் வழிபாடு என்ன ?
என்று கேள்விகனைகளை நாமே கேட்டாலே , ”இந்தியர்” என்பது அர்த்தமற்றது என தெளிவாக புரிய வரும் .
வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் வெள்ளைக்காரன் ஒருங்கிணைந்த மாநிலங்களை ஆட்சி செய்து அதை இந்தியா என்று பெயரிட்டதும் அவனே என்பது உலக வரலாறு.
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றப்பட்ட மூத்த இனம் தமிழர் இனம். தமிழரின் முத்த 10,000 ஆண்டுகளுக்கு பழமை இலக்கிய இலக்கண  நூலில் முதல் பாயிரத்திலே ”தமிழ்” என்று குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் என்பது விளங்கி கொள்ளலாம் .இதே எல்லாம் நாம் தமிழர் என்பதற்க்கான சான்றுகள், வரலாறுகள்.
 சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தவரான புரிதலால் நாம் தமிழா் இந்தியர் என்று அடையாளபடுத்த பட்டு வருகிறோம். ஆனால் இப்போது  இளைய தலைமுறையினர்கள் நம் இனத்தின் அடையாளத்தை தெளிவாக புரிந்து வருகிறார்கள்.
தமிழர் என்ற இனம் வெறும் நேற்று தோன்றிய இனம் அல்ல , அது ஒரு தேசிய இனம் சுமார் 75 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம். கணக்கெடுப்பில் பார்த்தால் 10 வது பெரிய இனமாக இருக்க வேண்டிய அங்கிகாரம் கொண்டவை ஆனால் அதற்கு தனி நாடு இல்லாமல் இருப்பதால் அந்த 10 வது என்ற அங்கிகாரம் இல்லாமல் இருக்கிறோம்.
தமிழர்க்கென்று பண்பாடு , கலை கலாச்சாரம் , மொழி , விழாக்கள் , வழிபாடுகள் , பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தனி குணமும் உண்டு.

No comments:

Post a Comment