Tuesday, 24 January 2017

திருமூலரின் ஆரிய விளக்கம்

"சூரிய காந்தமும் சூழ்பஞ்சும்

போலவே,

சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா,

சூரியன் சந்நிதியில் சுடுமாறு போலே,

 "ஆரியன்" தோற்றமுன் அற்ற மலங்களே"
                                                                   ---- திருமந்திரம்
மேற்கண்ட பாடலில் இறைவனை ஆரியன் என்னும் பெயரால் அடையாளபடுத்தியுள்ளார் திருமூலர்

சூரியகாந்திக் கண்ணாடியாகிய குண்டலினியோக நெறி மூலம் குருவானவர் மனிதனின் (சிஷ்யனின்) மும்மலத்தினால்

 தோன்றும் கர்ம வினைகளைப் பொசுக்கி அவனை விடுதலை பெறச் செய்கிறார். “ஆரியன்” என்றால் குரு என்று

 பொருள். ஆரியன் என்ற சொல் என்றுமே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. சித்தர் மரபில் குருவிற்கு தனிச் சிறப்பிடம்

 வழங்கப்படுகிறது. சித்தர் மரபுப்படி குண்டலினி யோகமோ அல்லது அதுபோன்ற ஆன்மிகப் பயிற்சிகளோ குருமுகமாக

 மட்டுமே கற்றுணரத்தக்கவை. பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் தங்களுடைய குரு பரம்பரையைப் பற்றிப் பேசுகிறார்கள்

. தமிழ்ச்சித்தர்கள் மூலவர்க்கம் என்ற ஒரு பரம்பரையைக் குறிப்பிடுகிறார்கள். இப்பரம்பரையில் கணபதியோ திருமூலரோ

 மூலகுருவாகக் கருதப்படுகிறார். பாலவர்க்கத்தில் முருகனே மூலகுருவாக விளங்குகிறான். கயிலாய வர்க்கத்தில்

 சிவபெருமானே குருநாதனாகத் திகழ்கிறான். திருமந்திரத்தில் 67ஆம் பாடல் குருபரம்பரை பற்றியும் 91ஆம் பாடல் திருமூலர்

 கயிலாய பரம்பரையில் தோன்றியவர் என்றும் கூறுகிறது. குருவே மோட்சத்தை அடைவதற்குரிய படிக்கட்டின் முதற்படியாக

 விளங்குகிறார். தாந்திரிக யோகமுறையில் குருவானவர் மனித வடிவில் தோன்றி சாதகனுக்குத் தந்திரப் பயிற்சிகளில்

 உதவுகிறார். அந்த வகையில் அவர் மிகவும் இன்றியமையாதவராக விளங்குகிறார். “குரு” என்னும் சம்ஸ்கிருதச் சொல் “கு”

 “ரு” என்ற இரண்டு சொற்களின் அடிப்படையில் தோன்றியதாகும். “கு” என்றால் இருள். “ரு” என்றால் ஒளி. குரு தன் சீடனின்

 அறியாமை இருளை அகற்றி உண்மை ஒளியைத் தோற்றுவிப்பவர். ஆன்மிகக் கண்களைத் திறந்து வைப்பவர்
ஆரியம்
ஆர் + இயம் = ஆரியம்
ஆரியன் - சிவன்
ஆர் என்றால் பூமி ,
அதாவது மூலாதாரச் சக்கரம் . இயம்புதல் என்றால் ஓலித்தல் .
ஆரியம் என்றால் மூலாதாரத்தில் ஓலித்தல் எனப் பொருள் .
அதாவது நாத வடிவான சிவன் .

திராவிடம் என்பது இரண்டு கண்கலுக்கு இடைப்பட பகுதியாகும்.
இதணால் முக்கண்ணன் சிவணை குறிப்பதாகும்
ஆகவே திராவிடம் சைவத்தமிழரை குறிக்கும் சிறப்புப்பெயராகும்
 சிவனை முழு முதலாகக் கொண்டது சைவம் .
நாம் சைவர்கள் .ஆகவே  நாம் தான் ஆரியர்கள்
. சிவனை மறைத்து விட்டு ஆரியர் என்ற பெயரைத்  தமிழர்கலிடம்
 இருந்து பறித்து மறைத்து திராவிடர் என்ற போர்வையைப் போர்த்திவிட்டு சதிப் பரப்புரைகள் செய்தவர்கள் தான் இவர்கள்.


No comments:

Post a Comment