Tuesday, 24 January 2017

திராவிடத்தால் வீழ்ந்தோம் தமிழ்தேசியத்தால் ௭ழவோம்


வரலாறு
கடைச்சங்க காலத்திலிருந்து மாலிகாபூரின் படையெடுப்புக்கு முன்னால் வரை எந்த வடவரும் தமிழகத்தை வெற்றி கொண்டதும் இல்லை அதன் மீது படையெடுத்ததும் இல்லை. மாறாக தமிழ்ப் பேரரசர்களே வடக்கு நோக்கி படை செலுத்தி வெற்றிக்கொடி நாட்டிய வரலாறுகள் உண்டு. ஆனால் வடஇந்தியாவில் 
விந்தியமலைக்கு அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை 
வைத்து அந்த வடஇந்திய வரலாற்றை சென்ற 2000 
ஆண்டுகாலத் தமிழக வரலாற்றின் மீது கண்மூடித் தனமாக 
திணிப்பது பெருந்தவறு. 
இத் திராவிடக் கொள்கை ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ எடுபடவில்லை. கட்சியையும் சாதியையிம் மறந்து தெலுங்கரெல்லாம் ஆந்திர மகாசன சபாவின் கீழும், மலையாளிகள் கேரள சமாசத்தின் கீழும் ஒன்று திரண்டனர். கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழரை மட்டுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனப் பிளவுபடுத்தினர். 
இதனால் மற்றவர்கள் இன வழியல் ஒன்றுபட, தமிழர்கள் 
மட்டுமே சாதியால் மென்மேலும் கூறுபட்டனர். உள்ளபடியே தமிழ்ப்பார்ப்பனரை எல்லாம் அரசுப் பதவியிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் அந்த இடங்களில் போய் தாங்கள் அமர்வதற்கான ஒரு நொண்டிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என 
அழைத்துக்கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான். 

தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும், தமிழினத்தின் மூத்த 
குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர். 

அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிறரை சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க. 

இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டுவிட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே 

ஏதிலி (அகதி) களாக்கபபடடுள்ளனர்

காலம்தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம்! மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு! ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்தேசியம் என்றால் என்ன?

தமிழ் மொழிசார்ந்த உழவியல், இலக்கியம், கலை ,பண்பாடு, பாரம்பரியத்தை, அரசியல்கொண்டு வறையறுக்கப்பட்ட தொடர்ச்சியான புவியியல் எல்லைக்குள் குழுவாக வாழும் தமிழ் மக்களே தேசிய இனக்குழுகள் .அதாவது தமிழ்தேசியம்.
அந்த தமிழ்தேசிய இனக்குழுவிற்கான அரசியலே தமிழ்தேசிய அரசியல்.
தமிழ் மண்சார்ந்த  மண்ணின் மைந்தர்களே ஆட்சி செய்வது  தமிழ்தேசியம் ஆகும்.ஆகவே தமிழராகியநாம் தமிழ்தேசியத்தால் ௭ழதல்வேண்டும்.


திராவிடத்தால் வீழ்ந்தோம் தமிழ்தேசியத்தால் ௭ழவோம்
யார் தமிழர்கள்? யார் திராவிடர்கள்?யார் ஆரியர்கள் ? 

No comments:

Post a Comment