Monday, 2 January 2017

இழிவு வாழ்வுக்கு காரணம் ?/

                                                                                                                                


1-முழு தமிழ்சமுதாயத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி வருவதற்கு காரணம் என்ன?

2-மிக உயர்ந்த வாழ்வியல்கட்டமை கொண்ட தமிழ் சமூகம் இன்றைய இழிவு வாழ்வுக்கு காரணம் ௭ன்ன ?

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்"
"மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்."
+தன் மொழி +  +தன் இனம் +  +தன் பண்பாடு -+- தன் வரலாறு +
+தன் முன்னோர் -+ தன் இலக்கியம்  +தன் மெய்யியல்
முதலான அனைத்திலும் பற்றுதலும் நம்பிக்கையும்
இன்றையத் தமிழர்களுக்கு இல்லை .
இந்தக் கீழ்த்தரமான மனச்சிதைவின் பயனாகப் பிறருடைய - 
அன்னியருடைய  ஏன் பகைவனுக்குச் சொந்தமானதை 
எல்லாம் கொண்டுவந்து தமிழுக்குள் புகுத்தியும், திணித்தும்
தெரிந்தோ தெரியாமலோ தமிழ்ப் பண்பாட்டையும் முழு 
தமிழ்சமுதாயத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றனர்
தமிழ். சமுதாயத்தில் கேடுகளே விளையும்.
தமிழர் மீண்டும் வாழ்வில் வளம் பெற,
நம் முன்னோர்கள் நமக்கு அளித்த
மனிதனைத் தெய்வமாக மாற்றும்
சிறப்புடைய சங்க இலக்கியங்களைக்
கற்போம்; வாழ்வில் வளம் சேர்ப்போம்
--(தொல்.மரபியல்.92)--(தொல். மரபியல்.90)
என்ற தொல்காப்பியரின் எச்சரிக்கையை 
அ . அருள்செல்வன்,
அருளகம்,
சிவபுரம்

No comments:

Post a Comment