Monday, 20 November 2017

நாம் நமக்கு வைத்துக் கொள்ளும் பெயரே!


தமிழர் நமக்கு அடையாளம் பல இருக்க , அமுதத் தமிழ் இருக்க அந்நிய மொழி பெயர்கள் வேண்டாம்!

மனித கூட்டத்திடையே.. நம்முடைய முகமும் உடை என கட்டி இருக்கும் வேட்டியும் சேலையும்!

நெற்றியிலே அணிந்திருக்கும் பொட்டும் திருநீறும்! இவையே பார்வைக்கும்..

பேசும் மொழியும் இசையும் கலையும்! என இவை செவிக்கும்..!

சமைக்கும் உணவும் உண்ணும் வகைகளும்! என நாவுக்கும்..!

வாழ்க்கை நடை முறைகளும் பேச்சும் வழக்கும்! என இவை நெஞ்சிற்கும்..!

என நாம் வேறு , பிற இனங்கள் வேறு என இவை இனங்காட்டும். இவை எல்லாம் பார்வைக்கு உட்பட்டவை.

ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால்.. அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும் பெயரே!

பெயர்கள் சாதாரணமானவை அல்ல. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை கேள்விப்படும்போதோ அல்லது அந்தப் பெயரை எவராவது உச்சரிக்கும்போதோ பழைய ஞாபகங்கள் நம்மை சூழும். பெயர் என்பது நம் ஆதி முதல் அந்தம் வரை பலராலும் உச்சரிக்கப்படுவது. எனவே பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் வாழ்வோடு இணைந்திருப்பதுமாகும். அந்தப் பெயரை குழந்தைகளுக்கு நம் தாய் மொழி தமிழிலேயே சூட்டாமல் பிறமொழிகளை பெயா்களை சூட்டுவது என்பதும் ஒரு வம்சத்தின் அடையாளத்தை , ஒரு குலத்தின் அடையாளத்தை , ஒரு இனத்தின் அடையாளத்தை, ஞாணிகலின் நாவில் நந்தணம் ஆடிய தமிழை இழிவுபடுத்துவதாகும்.

மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், அதுபோல ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

ஒருவரை நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக் கேட்டால் பிற மொழி இனத்தவர் பெயரை தாங்கி இருப்பார். இந்தக் குறைபாடு பிறமொழி இனத்தவரிடமில்லை.

பிறமொழி இனத்தவா்கள் தங்களை மறந்தும் தமிழ் பெயர்களை பிற மொழியினர் தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை.

பிறமொழி இனத்தவா்கள் தங்களை மறந்தும் பிற மொழிபெயா்களை தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை.
ஒவ்வொரு மொழிக் குடும்பத்தினரும் தம்மொழி உணர்வுடன் தம் நிலைப்பாட்டில் பிடிப்புடன் இருக்கும்போது தமிழர்கள் மட்டும் தமிழ் மொழி இனவுணர்வற்ற நிலையில் இன்றும் உள்ளனர்.

தன்மாணம் இழந்து ,சூடு சொறணை அற்று நித்திரையில் இருக்கும் கிழங்கு தமிழா உன் சந்ததியினருக்கு நீய் சூட்டுவது ஆண்பால்,பெண்பால் அறிய முடியாத பிறமொழி பெயா்கள்.நீய் உன் தமிழ் குலத்தின் இனஅடையாளத்தை இழிவு படுத்துகின்றாய்.

-1-அரேபியமொழி மோகத்தால் அரேபிய பெயா்களும்

2--பறங்கியின் மோகத்தால் பறங்கியின் பெயா்களும்,

3--ஆப்பிரிக்கா மோகத்தால் ஆப்பிரிக்கா பெயா்களும்,

பிறமொழிபெயா்கள் தமிழனிடம் இருந்து ஆழ ஊடுருவி செல்வதற்கு காரணம் தமிழ் உணா்வற்ற சந்ததியின் விருத்திதான் என்று சொன்னால் மிகையாகாது.

Sunday, 12 November 2017

தாயகத்தில் இருந்து 1988 இல்12 வயதில் வெளியேறிய குழந்தைக்கு ஈழபோராட்ட விடுதலை அமைப்புகளை தொியாது. ஆயுதபோராட்டம் தானாம் தமிழருக்கு தீா்வு என்று ஆங்கிலத்தில் சிறுகின்றாா்.செபஸ்டியன் சைமன் பிரபாகரனின் வாாிசாம், தற்போதைய தேசியதலைவராக விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசை தொிவித்ததாக எனக்கு முழங்குகின்றாா். தமிழ்ஈழம் என பொங்கி எழுகின்றாா் அவாின் பிள்ளைக்கு தமிழ்பெயா் இல்லை.இவா்களுக்காக இப்பதிவு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் நிட்சயமாக அவருக்கு சேரும்

ஈழபோராட்ட விடுதலை அமைப்புகள்

                                       1-தலைவர் /செயலதிபா் / எதிர்க்கட்சித்தலைவர் 
                               அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam )
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் (1879-1952, தொடருந்து நிலையப் பொறுப்பாளர்) வள்ளியம்மைக்கும் 1927 ஆகத்து 26 ஆம் நாள் பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் (19366-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951 இல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார்.
சட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார்.
இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.
1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.
எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 சூலை 13 ஆம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். இவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம் .


2-
                                                2-தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17[1] அல்லது மே 18[2] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார்.
1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார் .
அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது. .
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.
பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.                                             3--தலைவர் க. . உமாமகேஸ்வரன்
மக்களின் விடுதலைக்கழக (புளொட்) இயக்கத்தின் செயலதிபா்

க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்,பெரியவர், இறப்பு: ஜூலை 16, 1989), தமிழீழ மக்களின் விடுதலைக்கழக (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். 1976 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்.
உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய்பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கை நிலஅளவையாளர் திணைக்களத்தின் உயரதிகாரியாக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார்.
இக்காலகட்டத்தில் அவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களுடன் மாத்திரமன்றி சிறுசிறுகுழுக்களாக செயற்பட்டு வந்த அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரட்டும் தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தவர்.
1975 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தனித்தும் சிறுசிறு குழுக்களாகவும் செயற்பட்டு வந்த ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), புதிய புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) போன்ற ஆரம்பகால போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார்.
அவர்களுக்கான வெளியுலகத் தொடர்புகள் உட்பட பல்வேறு தேவைகளையும் கொழும்பில் இருந்தவாறே மேற்கொண்டிருந்தார்.
பாலஸ்தீனத்தில் ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கையூடாகவே போராட்டப்பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.
"புதிய தமிழ்ப் புலிகள்" என்று 1972 ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன்று முதன்மையாக இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று 1976 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினது தொடக்க கட்ட தலைவராக உமாமகேஸ்வரன் தேர்தெடுக்கப்பட்டு செயற்பட்டார். 1980 ஆம் ஆண்டில் உமாமகேஸ்வரனுக்கும் வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக உமாமகேஸ்வரன் பிரிந்து சென்று [[தமிழர் மக்கள் விடுதலைக் முன்னனி (People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) என்ற ஈழப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தார்.
என். சண்முகதாசன், சரத்முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரட்ன, அண்ணாமலை போன்ற இடதுசாரி தலைவர்களுடனும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரணதுங்க மற்றும் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடனும் நெருக்கமான உறவை பேணிவந்தார்.
உமாமகேஸ்வரன். இதன் காரணமாக வவுனியாவின் எல்லைப்புற ஊர்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் இவரின் வழிகாட்டலை ஏற்று புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


                               தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம்
4-தலைவர் ஸ்ரீசபாரத்தி6-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் ஆக்கப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நடைப்பெறவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.
2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர்.
இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.

1-https://www.youtube.com/watch?v=Vln5aeensjsனம் அவர்களின் வல்லமையான உரையின் ஒரு பகுதி...
மண்ணிக்கவும் வரலாறு தேடப்படுகின்றது
4-- மண்ணிக்கவும் வரலாறு தேடப்படுகின்றது
6-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் ஆக்கப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நடைப்பெறவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.
2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர்.
இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.

                                                          Image may contain: 1 person, text
6-உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன்

1-
https://www.youtube.com/watch?v=1_iqqfAk5jY

2--

https://www.youtube.com/results?search_query=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D


7--ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

[1]-தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))

[2]-தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))

[3]-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி
(Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))

[4]-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOT))

தமிழீழ விடுதலை இயக்கம்
(Tamil Eelam Liberation Organization (TELO))

[5]-தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)[6]

[6]ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))

தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

தமிழ் மாணவர் பேரவை

தமிழ் இளைஞர் பேரவை

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)

தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)

இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)

தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி

தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா
ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஈழ தேசிய விடுதலை முன்னணி

ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)

தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)

புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ)

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)

தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)

தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)

த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)

தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)

தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)

த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)

த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)
தீப்பொறி

த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)

ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)

தமிழீழ மக்கள் கட்சி (TEMP)

த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)

தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)

த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)

இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)

ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)

த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)
க‌ழுகு ப‌டை (EM)

த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை

த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)

த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)

ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)

தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)

மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)

ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)

2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி

தமிழ் மக்கள் பேர­வை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)

தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி
தமிழ் தேசிய முன்னணி (ரி.என்.எவ்)

2009 பின் மேலும் தொடரும்.