Wednesday, 19 September 2018

இயேசுவின் சாதீய வழியில்

இயேசுவின் சாதீய வழியில் கொண்டுசெல்லப்போகிறார்களாம்…
இந்து சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுதலை பெற மதம் மாறினோம் என்கிறீர்கள்…
ஆனால் இயேசுவின் சாதீயம்   என்பது தொழில், பொருளாதார வசதி, இனம், போன்றவற்றின் அடிப்படையில் தரப்படுத்தப்படிருக்கின்றது
                                                       
1.    மரபுக் கோட்பாடு (traditional theory)
2.    தொழிற் கோட்பாடு (occupational theory)
3.    சமயக் கோட்பாடு (religious theory)
4.    அரசியற் கோட்பாடு (political theory)
5.    இனக் கோட்பாடு (racial theory)
6.    படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் ‘பங்கு’ என அழைக்கப்படுகிறது.

ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு ‘பங்கு’(Parish).

பல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில்,

பாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை

கிறிஸ்தவ கொட்டிள்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.

நாடார் கத்தோலிக்கரும், பரதவர் கத்தோலிக்கரும் சகோதரர்கள் இல்லையே?
பரதரும்  , முக்குவரும் ஒரே மீனவ இனங்கள் என்றாலும் ஏன் அங்கே கலப்பு இல்லை?

(யாழ்ப்பாணம்) இளவாலை புனித அன்னம்மாள் கோவிற் பங்கைச் சேர்ந்தவர் (அருட்பணி. மேரி பஸ்ரியன்) என்கிறபோது சமூகப் பிரச்சனை காரணமாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் (1971-1978) இன்னுமொரு சமூகத்துக்கு ஆலயத்தில் சமத்துவம் அளிக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில்  கிறிஸ்தவ கொட்டில்களை  பூட்டிவைத்துச் சாதனை புரிந்தவர்களின் உயர்வகுப்பைச் சார்ந்தவர்”.

1. சாதி அமைப்பு இன்னும் மாறவில்லை
2. உயர் சாதி கீழ் சாதி எனும் பிரிவினையும் மாறவில்லை.

வத்திக்கானில் வெள்ளையர்  அல்லாதோா் போப்பாண்டவராக முடியாது

Wednesday, 5 September 2018

சிவபூமி நீர் நிலைகள்

கோயில்களும் குளங்களும் யாழ். மாவட்டத்தில்  992 குளங்கள் இருக்கின்றன அவை எங்கே? கிறிஸ்தவவாதிகள் , கம்யூனிஸ்டுகளாள் ஆலயங்கள் சிதைந்த பொழுது குளங்கள் சிதைக்கப்பட்டன.

சிவபூமி நிலத்தடி நீரை பல மடங்கு மீள்நிரப்பி நன்னீராக்கி  நீர்வளம் காப்பதன் மூலம்  வாழ்வை மேம்படுத்த முடியும். எனவே நீர் நிலைகளை பாதுகாப்பதுடன் மழை நீா் கடலுடன் கலப்பதன் மூலம் ஏற்படும் வீண் விரயத்தையும் தவிர்ப்பதன் மூலம் வழமான வாழ்வை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

குடாநாட்டிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட குண்டுகள், துரவுகள், சிறிய குளங்கள் பராமரிக்கப்படவில்லை. தூர்வு வாரப்படவில்லை. பல குளங்கள் மூடப்பட்டு அதன் மேல் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. உள்ளுராட்சி மன்றங்கள் உப விதிகளை ஆக்கி இவற்றை ஒரு முறைமையின் கீழ் கண்காணித்து ஒழுங்குபடுத்தி யாழ். நீர்வளத்தினை பாதுகாத்து இருப்பின் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்ப் பிரச்சினை என்பதே வந்திருக்காது.சொந்தமாக இருந்தன.

வெட்டுக்களி குளம்

நெடுந்தீவு மத்திய பகுதியில் காணப்படும் மிகப் பரந்த பெரிய குளம் ஆகும். மழை காலத்தில் நீர் நிறைந்து காணப்படும் கோடை காலங்களில் நீர் வற்றிவிடும். இக் குளம் ஆதிகாலத்தில் பூதங்களைக் கொண்டு தோண்டப்பட்டது

முதலிக்குளம்--
1350 கனமீற்றர் அளவுடையது

பானாவெட்டிக்குளம்

மாதகல் பிரதேசத்தில் பானாவெட்டி அம்மன் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது.

நாயன்மார்கட்டு குளம்-

அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்புறமாக அமைந்துள்ளது. எப்பொழுதும் பசுமையாக அல்லி, தாமரையும் நிறைந்து காணப்படும். இது மனதுக்கு ரம்மியமாக அமைந்திருக்கும்.

பண்டாரக்குளம்-

நல்லூர் இராஐதானியில் பண்டாரக்குளம் ஒரு முக்கியமான குடியிருப்பாக விளங்கியது. தோம்புப் பொறிப்பில் பண்டாரக்குளம் ஒரு குறிச்சிப் பெயராகவே காணப்படுகின்றது. தற்போதுள்ள சங்கிலியன் வீதிக்கண்மித்த வகையில் பண்டாரக்குளம் காணப்படுகின்றது. ௧௯௮௫ஆம் ஆண்டில் பண்டாரக்குளத்தடியில் குழி ஒன்று தோண்டிய போது ஓர் அரச உத்தியோகத்தரது முத்திரை மோதிரம் ஒன்று கிடைக்கப்பெற்றது. காரீயத்தினால் ஆன அம் மோதிரத்தில் ௨௧ சிவத்தகற்கள் பதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பண்டாரக்குளம் என்ற பெயர்த் தோற்றத்திற்கான காரண காரியத் தொடர்பு தெளியாகத் தெரியாவிடினும், பண்டாரம் என்ற சொல் சோழர் காலக்கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இராட்சியத்தில் பண்டாரம் என்பது ஒரு நிர்வாக அதிகாரியைக் குறித்தது எனலாம். திறைசேரிக்காவலர்களையும், கோயிலிலுள்ள அரசையும், அசையாச் சொத்துக்களை வைத்துப் பராமரிப்பவர்களையும் பண்டாரத்தார் எனக் குறிப்பிடுவர். ‘கோயிற்பண்டாரங்கள்’ போர்த்துக்கேயருடைய கலையழிவுக் கொள்கையிலிருந்து கோவில்களுக்குரிய ஆவணங்களையும், விக்கிரகங்களையும் பாதுகாத்துக் கொண்டனர் என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. எனவே பண்டாரக்குளம் என்பது கோயில் பண்டாரத்துடன் தொடர்புபட்ட நிர்வாகிகள் ஒன்றாக வாழ்ந்த கிராமமொன்றுக்கு இடப்பட்ட பெயராக அமையலாம். பண்டாரமாளிகை, பண்ணாகம், பண்டாரத்தரிப்பு  ஆகிய இடப்பெயர்களும் பண்டாரத்தார்களுடன் தொடர்புபட்ட மையங்களாகும்.

முத்தையன் கட்டு--

முத்தையன் கட்டு என்னும் பெயர் வன்னியில் அனைவராலும் அறியப்பட்ட ஓர் பெயர். முத்தரையன் கட்டு என்பதே பின்னாளில் மருவி முத்தையன் கட்டு என்றாகிவிட்டது. முத்தையன் கட்டு என்பது பெரிய குளத்தின் பெயர். இதை முன்னாளில் முத்தரையன் என்பவரே கட்டினார் என்று சொல்லப்படுகின்றது.  இங்கு குறிப்பிடக்கூடிய இன்னேர் விடயம் அரையன் என்பவர்கள் சோழர்களின் காலத்தில் பிரசித்தி பெற்ற சிற்றரசர்கள் ஆவார்கள். உதாரணமாக சோழர்களின் காலத்தில் பிரசித்தி பெற்ற சிற்றரசன் வானகோவரையனைக் குறிப்பிடலாம். சோழர்கள் காலத்திலேயே, அதாவது 11ம் நூற்றாண்டளவில் இக்குளம் கட்டப்பட்டிருக்கலாம் என்பதே முடிவு. இதற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்த குளத்தின் கீழ் 40,000 ஏக்கர் பயிர்செய்கைக்கு உரிய நிலம் உள்ளது. இக்குளத்தின் மூலம் மன்னாகண்டல்(புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் சாலையில் அமைந்துள்ள ஓர் கிராமம்) வரை நீர்பாசனம் செய்ய முடியும்.

பால்குளம் – பாசையூர்--
10000 கனமீற்றர் அளவுடைய இக்குளம்.

செம்மணிக்குளம்--

162 கெக்ரெயர் விசாலமானது. அத்துடன் செம்மணி வீதியில் அமையப்பெற்றுள்ளது. விவசாயிகளும் கால் நடைகளும் தங்கள் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

வீரமாகாளியம்மன் குளம்-

வீரமாகாளியம்மன் குளம் ஆனது வீராமாகாளியம்மன் கோவிலுக்கு முன் புறமாயும் கந்தர்மடம் அரசடிப் பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாகவும் அமையப் பெற்றுள்ளது. 6200 கன.மீற்றர் கொள்ளளவுடைய குளம்

கன்னாதிட்டி குளம்--

நல்லூர் பிராந்தியத்தினுள் காணப்படும் மிகப்பழமை வாய்ந்த குளங்களுள் அடியார்க்கு நல்லான்குளம் என அழைக்கப்பட்ட கன்னாதிட்டிக்குளம்
 மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். கன்னாதிட்டியிலுள்ள காளிகோயில் நல்லூர் பிராந்தியத்திலுள்ள மிகப் பழமை வாய்ந்த காளிகோவிலாகும். வணிக கணமொன்றின் குலதேவதையான இக்கோயிலின் முன்றலில் இத்திருக்குளம் அமைந்து காணப்படுவது அதன் வரலாற்று முக்கியத்துவத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது எனலாம். சோழர் காலத்திற்குரிய வணிககணம் ஒன்றின் பெயரால் யாழ்ப்பாணமும்  அதனைச் சூழ்ந்துள்ள அயற்பரப்பும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையையும் காண்கின்றோம். “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு நிலப்பரப்பின் பெயரானது தோம்பு ஓலைகளிலிருந்து அடையாளம் hணப்பட்டுள்ளது. அப்பெயர் சுட்டி நிற்கும் நிலப்பரப்பானது தற்போது யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்பாகவுள்ள மணிக்கூட்டு வீதிக்கு மேற்காக உள்ள பண்ணை வரைக்கும் உள்ள நிலப்பரப்பினை உள்ளடக்கியிருந்தது. சத்திரச்சந்தி உட்பட ஐநூற்றுவன் வளவிற்குள்ளேயே பெரிய சந்தை, சிவன்கோயில் மற்றும் யாழ்ப்பாணக் களிமண் கோட்டை முதலானவை அமைந்து காணப்பட்டிருந்தன. இத்தகைய “ஐந்நூற்றுவர்” என்ற வணிக்குழுவினருடைய குலதேவதையாக கன்னாதிட்டி காளி மைந்திருந்தமையைக் காண்கின்றோம். மிகவும் சக்தியுடன் காணப்படும் இக்காளி தெய்வமே சோழர் காலத்து போர் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் என்ற நகரத்தைச் சுட்டும் பெயர் தோற்றம் கூட “ஐநூற்றுவர்” என்ற பெயரடியாக உருவாக்கம் பற்றமைக்கு விளக்கம் கூறமுடியும்;. இன்று கன்னாதிட்டி பொற் கொல்லரின் உறைவிடமாக விளங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கரவெட்டி நீர் நிலைகள்

கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 67 குளங்கள் காணப்படுகின்றன.

கப்பூதூவில் 18 குளங்களும், துன்னாலை தெற்கில் 9 குளங்களும், உடுப்பிட்டி தெற்கு, கரவெட்டி மத்தி ஆகிய இடங்களில் தலா 7 குளங்களும், துன்னாலை கிழக்கில் 6 குளங்களும், மத்தொனியில் 4 குளங்களும், கரணவாய் தெற்கு, கரணவாய் மேற்கு மற்றும் கரவெட்டி கிழக்கு ஆகிய இடங்களில் தலா மூன்று குளங்களும், கரணவாய் கிழக்கு, கட்டைவேலி ஆகிய பிரிவுகளில் தலா 2 குளங்களும், உடுப்பிட்டி மத்தி, இமையாணன் மேற்கு, துன்னாலை மேற்கு ஆகிய பகுதிகளில் தலா ஒவ்வொரு குளங்களும் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு சில குளங்கள் தவிர ஏனையவை வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதுடன் சில குளங்கள் சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.தூா் வாராவுட்டால் பாம்புகள் தான் புற்றெடுக்கும்.

புங்குடுதீவு குளங்கள் --
 • வெள்ளைக்குளம்
 • தில்லங்குளம்,
 • அரியரிகுளம்
 • முருகன்கோவில்குளம்
 • நாகதம்பிரான்குளம்
 • ஆமைக்குளம்
 • திகழிக்குளம்,
 • பெரியகிராய்
 • மக்கிகுண்டு
 • நக்கந்தைகுளம்
 • தர்மக்குண்டு
 • புட்டுனிகுளம்
 • வெட்டுகுளம்
 • கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
 • கண்ணகி அம்மன் குளம்
 • சந்தையடிகுளம்
 • கந்தசாமிகோவில்குளம்
 • விசுவாமிதிரன்குளம்
 • மாரியம்மன்கோவில்குளம்

Saturday, 18 August 2018

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

👉🏿அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
                                                                      குறள் 30:

Monday, 13 August 2018

சைவதமிழாின் குத்துவிளக்கு


திருமூலா் திருமந்திரம் விளக்கு வழிபாட்டைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
“விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவா் தாமே”

விளக்கையே தெய்வமாகக் கருதி வழிபடுவது சைவதமிழா் பண்பாடு.
எட்டு வகை மங்கலப் பொருள்களில் விளக்கும் ஒன்று.

திருமணமாகிப் புதுக் குடித்தனம் செய்ய போகும், சைவபெண்ணுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் விளக்கு முக்கியமானது. திருமணத்தின்போது சைவமணமக்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்து வலம் வருவது வழக்கம்.சைவதமிழாின் மரபு குத்துவிளக்கை ஏற்றாமல் எந்த  மங்கல காரியமும் தொடங்குவது இல்லை.


குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.

திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும்,
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் .

விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் .

குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும்
1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை ஆகியன.

விளக்கிற்கு ஏற்ற எண்ணெய்

பசு நெய் விளக்கில் ஊற்றும் நெய் – நாதம்
லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

விளக்கில் ஊற்றும் நெய் நாதம், 
திரி விந்து
சுடர்  அலை மகள், சுடர்  கலை மகள், 
தீ மலை மகள் 

நல்லெண்ணெய் – சனியால் பீடிக்கப்பட்டோருக்குப் பரிகாரமாக அமையும். லட்சுமி அருள் கிட்டும்.

தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும்.

கணவன் மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். பழம்பாவங்கள் நீங்கும்.

இலுப்பை எண்ணெய் – எல்லாப் பாவங்களும் போகும். மோட்சம் கிட்டும். நல்ல ஞானம் வரும். பிறவி நீங்கும்.

விளக்கு எண்ணெய் – தெய்வ அருள், புகழ், சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவற்றை அதிகரிக்கச் செய்யும்.

வேப்ப எண்ணெய் – குல தெய்வத்தின் அருள் கிட்டும்.

முக்மூட்டு எண்ணெய் – நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் – ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வர செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும், இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்றுவது சைவதமிழனின் மரபு
  
  

"தீப மங்கள ஜோதி நமோ நம "
என்று முருகனைப் போற்றுகிறார் அருணகிரி நாதா்

"ஆயா் குலத்தில் தோன்றிய மணி விளக்கு"
  என்று ஆண்டாள் கண்ணனைப் போற்றுகின்றாள்.

“அக்கினியைத் துதிக்கின்றேன்.”
என்று வேதம் தொடங்குகின்றது.

“அஞ்ஞானத்தை அகற்றும் தீபம் ”
என்று லலிதா சகஸ்ர நாமம் தேவியைக் குறிப்பிடும்.

இப்படி அனைத்தும் சேர்ந்ததே சைவதமிழாின் குத்துவிளக்கு.

விநாயகா்--

விநாயகா் (பிள்ளையார் )வழிபாட்டின் தோற்றமும்--

விநாயகர் என்பது தமிழரின் சித்த வாழ்வியலின் அடையாளமும் கூட...
7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்றால் அதற்கு முன்பே கணபதிஸ்வரர் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்கு தமிழ் மக்கள் மட்டும் கொடுத்தது ஏன்?
நம்பியாண்டார் நம்பி, சோழப் பேரரசன் இராஜ ராஜ சோழன் ஆகிய இருவர் மூலமாக தேவாரத் திருமுறைகள் நமக்குக் கிடைக்கச் செய்தார்  திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார். மறக்கவும் முடியுமா?

சைவத்தில்  சிவ வழிபாடு, திருமாள் வழிபாடு, சக்தி வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, நவக்கிரக வழிபாடுகள் தொன்று தொட்டு நிலவி வந்தன

பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே.

பதினொன்றாந் திருமுறை

கபிலதேவ நாயனார் அருளிச் செய்த  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

"திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை ."

 திருவருட்பயன் என்ற ஞான சாத்திரத்தை அருளிய சந்தானாசாரியருள் நான்காமவரான உமாபதி சிவாசார்ய சுவாமிகள்
‘நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.’

திருஞானசம்பந்தர்

‘பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே

திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு  முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.

தமிழ் மூதாட்டியும் சங்கால புலவா்களில் ,உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                           
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                               
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           
சங்கத் தமிழ் மூன்றும் தா!”

ஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.."
பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்             
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு                     
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்               
தப்பாமல் சார்வார் தமக்கு! என்றாா்

அருணகிரிநாதர் முருகன் மீது போற்றிப் புகழ்பாடும் முன்
""கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்"

திருமூலர் திருமந்திரத்துள்

‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
 இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே’

பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் இவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர்.மூத்த நாயனாராகிய விநாயகர் மீது பிரபந்தம் அருளியுள்ளாா்.


திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்தவரான கச்சியப்ப முனிவரர்

‘அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்’

அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டா்

"தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே."

திருக்கோவையார் விநாயகர் வணக்கம்

"எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.!"

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12&Song_idField=12280

http://thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=21

இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது
    அடியின்கீழ் இருக்க என்றார்

"அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
    அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
    ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
    துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
    இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே" 
ஆபிரகாமியம்  சங்ககால இலக்கிய , இலக்கின தமிழை ஏற்றுக்கொண்டால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகத்தையும்,தெய்வீகப் பண்பாட்டையும் மதித்து, போற்றி வணங்கி  தழுவ வேண்டும்.

Wednesday, 8 August 2018

தொல்காப்பியம் போற்றும் சைவதமிழன் வணங்கும், முருகன், சிவன், திருமால், தாய்வழிபாடு யாவும் சைவதமிழனின் மரபு சார்ந்தவைகளே..தொதொல்காப்பியம் போற்றும் சைவதமிழன் வணங்கும், முருகன், சிவன், திருமால், தாய்வழிபாடு யாவும் சைவதமிழனின் மரபு சார்ந்தவைகளே..ல்காப்பியம் போற்றும் சைவதமிழன் வணங்கும், முருகன், சிவன், திருமால், தாய்வழிபாடு யாவும் சைவதமிழனின் மரபு சார்ந்தவைகளே..